கடிதம்

This entry is part of 32 in the series 20070426_Issue

ஜடாயு


அன்பின் சசிகுமார்,

// தொட்டதெற்கெல்லாம் இந்தியனைக் கேவலப்படுத்திப் பேசும் உரிமையை யாரையா உமக்குக் கொடுத்தது? //

சிங்கப்பூர் திருக்குறள் விழாவில் இந்தியாவைக் கேவலப்படுத்திப் பேசப்பட்ட பேச்சை எதிர்த்து எழுதியதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.. சில இந்தியர்களே இப்படிப் பேசியிருப்பது மனவேதனை அளிக்கிறது..

மலேசிய, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழை வளர்க்கட்டும், தவறில்லை. அதற்காக இந்தியாவை ஏன் ஏசவேண்டும்? புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு இந்த இந்திய இகழ்ச்சி சரளமாக வருவதைப் பார்க்கிறேன். இது கண்டிக்கத் தக்கது.

இந்தியாவில் தமிழும், தமிழர்களும் மிக நல்ல, உயர்ந்த நிலையில் தான் உள்ளனர். இந்திய ஜனாதிபதியே ஒரு தமிழர் தான்! தமிழ் போன்றே இலக்கிய வளமும் கொண்டு பெருமளவு மக்களால் பேசப் படும் இந்திய மொழிகளும் பல உள்ளன – வங்காளி, மராட்டி, தெலுங்கு.. இந்த எல்லா மொழிகளுக்கும் இந்திய மைய அரசும், அந்த மாநில அரசுகளும் உரிய இடத்தை அளித்தே வந்துள்ளனர்… அதனால் சிங்கப்பூர் காசில் தமிழ் இருக்கிறது, இந்திய காசில் இல்லை என்றெல்லாம் பேசுவது அர்த்தமற்றது.. காசு சிறிய அளவில் உள்ளதால் இல்லை, இந்திய ரூபாய் நோட்டில் தமிழ் உட்பட எல்லா மொழிகளும் இருக்கின்றன அல்லவா?

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

அன்புடன்,
ஜடாயு


jataayu.b@gmail.com

Series Navigation