கடிதம்

This entry is part of 34 in the series 20070419_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்


‘திண்ணை.காம்’ இணைய இதழில் ‘கடிதங்களும் அறிவிப்புகளும்” பகுதியில் பிரசுரிக்க

கடிதம்

By சாய் (என்கிற)பேப்பர்பாய்

அன்புள்ள திரு. மலர்மன்னன் அவர்களுக்கு,

வணக்கம். என்ன தான் அகழ்வாராய்ச்சி புத்தி ஒட்டிக் கொண்டிருந்தாலும், சில விஷயங்களை யோசித்துப் பார்க்க நமக்கு தோணுவதில்லை. இதற்கு காரணம்…நம்மை அறியாமலேயே அந்த விஷயங்கள் மீது நாம் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையோ? (அல்லது ) அவை நம்முள் படர்ந்து பதித்திருக்கும் தாக்கத்தின் வீரியமா…?. தெரியவில்லை !

யாராவது தோளைத் தொட்டுத் தட்டிய பிறகே ‘அட.. ஆமா?’ என்று மனசுக்குச் முழிப்பு வருகிறது.

அந்த வகையில், தமிழால் ஜீவித்து தமிழையே சுவாசமாகக் கொண்டிருந்த /கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்கள் எல்லாருக்குமே தாய்மொழி தமிழாகத் தான் இருக்க வேண்டுமெனும் கட்டாயமில்லை என்கிற பரிச்சயமான யதார்த்தத்தை, எனக்கு நாசூக்காகத் தட்டி ஞாபகப்படுத்தியதாகவே தங்களின் கடிதத்தை எடுத்துக் கொள்கிறேன்.

நான் ‘திண்ணை’யில் எழுதி வரும் ‘பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ்’ என்ற தொடரின் 13வது அத்தியாயத்தைக் குறிப்பிட்டு தாங்கள் ‘திண்ணை’யில் (12-4-07 பதிப்பில்) எழுதியுள்ள அக்கடிதத்தில், ‘ மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பூர்வீகத் தாய்மொழி தமிழ் அல்ல. தெலுங்கு தான்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

உண்மை அதுவேயாயின் அதனை ஏற்பதில் எனக்கு சங்கோஜமோ, சங்கடமோ இல்லை. அத்துடன், அந்த தகவல் பத்திரப்படுத்திக் கொள்ளத்தக்கது என்பதால் தங்களுக்கு, ஒரு எழுத்துக்காரனாக நன்றி தெரிவிப்பதிலும் சந்தோஷப்படுகிறேன்.

நேசத்துடன்
சாய் (என்கிற) பேப்பர்பாய்


Series Navigation