சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

வஹ்ஹாபி


கடந்த (26 அக்டோபர், 2006) திண்ணைப் பதிப்பில், ‘துண்டு துண்டாக்கப் பட்ட நான்கு பட்சிகளில் உடல்கள்’ என்பதாக குலாம் ரஸூல் என்னென்னவோ பிதற்றி இருந்தார் [சுட்டி-1].

வழக்கம்போல தொடக்கத்திலேயே என்னுடைய பெயரைப் பற்றி, வஹ்”ஹாபி என்ற ஒரு நபரே ஒரு புனைவு” – அதாவது கற்பனை – என்று பிதற்றி இருந்தார்.

இல்லாத ஒருவன் வாரமிருமுறை இவருடைய உளறல்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறானாம்.! என்னதான் எழுதுவது என்று தெரியாமல் வாசகர்களுக்குச் சிரிப்பூட்டுகிறார் குலாம்.

அப்படி என் பெயரில் என்னதான் இருக்கிறது? இவர் ஏன் இவ்வளவு அச்சத்துக்குள்ளாகிப் பிதற்றுகிறார் என்று தெரியவில்லை! முதலில் என் பெயரினால் ஏற்பட்ட அச்சத்தை இவர் நீக்கிக் கொள்தல் நலம்; இல்லையெனில், யார்-யாருடைய மகள் என்று தெரிந்து கொண்டே மாற்றி எழுதக் கூடிய படபடப்பு மாறாது.

“நபிகளாரை கடிந்து கொள்வது போன்ற வசனங்களும் நபிகளாரின் உள்மனம் வெளிமனத்தை நோக்கி எழுப்பும் குரல்களாகும்” என்று இறைமறையை இழித்துரைக்கும் குலாமையே நான் காஃபிர் என்று குறிப்பிட்டு எழுதுவதில்ல என்பதைத் திண்ணை வாசகர்கள் அறிவர். இஃது இப்படி இருக்க, செத்துப் போன இரு முஸ்லிம் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களிருவரும் காஃபிர்களா? என்று குலாம் கேட்கிறார்.

இஸ்லாத்தின் கொள்கைகளை வெள்ளைக்காரனின் காலடியில் வைத்து அவனுக்கு அடி வருடியதற்காக, சையத் அஹ்மது கானுக்கு, அவர் உயிரோடிருக்கும் காலத்திலேயே தேவ்பந்து தீர்வாயத்திலிருந்து பட்டம் கொடுக்கப் பட்டு விட்டது – வெள்ளைக்காரன் தரப்பிலிருந்து சர் பட்டமும் பகதூர் பட்டமும்.

இன்றைய அலிகர் பல்கலைக் கழகத்தின் ஆணிவேர் என்பதைத் தவிர பொது வாழ்வில் கடைசிவரை வெள்ளைக்காரனுக்கு விசுவாசமாய் இருந்து செயல் பட்டது மட்டுமே கானுடைய சாதனைகள் என்பதால் அவரைப் பற்றி இங்கு நான் அதிகம் எழுதப் போவதுமில்லை; எந்தப் பட்டமும் கொடுக்கப் போவதுமில்லை; அஃது என் வேலையுமில்லை.

அடுத்த ஆள், குலாம் அஹ்மது பர்வேஸ்.
இந்த குலாமைப் பற்றி அறிவதற்கு முன், இவர் பகுத்தறிவுப் பால் குடித்த இனாயத்துல்லாஹ் கான் அல்-மஷ்ரிகீ என்பவரைப் பற்றி அறிந்து கொள்வது நலம் பயக்கும். பேரா. ஹபீபுல் ஹக் நத்வீ எழுதுகிறார்:
“Al-Mashriqui, a graduate of Cambridge and a rationalist, started his movement through free interpretation of the Holy Quran. In his AT-TAZKIRAH (1924) and HADITH-AL-QURAN (1951), he explained his views on religion and politics. He abridged the teachings of the Quran to ten points that replaced the five accepted pillars of Islam. He was acclaimed by western scholars for his courage and reconstruction of Islamic Faith (AQAA’ID).’ (Note: This is in line with the conspiracy of the West against Islam).

Professor C W Smith in his book MODERN ISLAM IN INDIA (pages 264-276) and Professor Kramer in his article in the THE MUSLIM WORLD, an American Journal, VOL 21, No.2 April 1930, have praised Al-Mashriqui for his ANTI-HADITH views and took special interest in his AT-TAZKIRAH, which is almost non-existent for the last 40 years” – Page 105 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT.

பகுத்தறிவுப் பால் சுரந்து வழிந்த சுனைகளைப் பற்றி அறிந்து கொண்டோம். இனி, குலாம் அஹ்மது பர்வேஸைப் பற்றிய நத்வீயின் கண்ணோட்டம்:
Ghulam Ahmad Parwez not only continued and carried on the message of Al-Mashriqui, but he went further and expounded his own theories.
“He (Ghulam Ahmad Parwez) disowned the corpus of Hadith as well as classical Tafaaseer (commentaries of the Quran), which according to him cannot be trusted as a source for understanding the Quran by a modern man. Like Al-Mashriqui, he had to redefine and recoin Quranic terminology. Moreover, his translation of the Ouran had been mingled and fused with his personal views and reviews. The four volumes of his LUGHAAT-UL-QURAN were prepared in order to support their new messages and interpretations. They were jointly compiled and written by various authors with similar persuasions but were published under his name.” – Page 107 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT.

“These theories, expounded by Parwez, sparked opposition among the orthodox Ulama as well as among the modernists. He was taken by many as a closer ally to Western economic thought and philosophy rather than to the Ouranic system. Dr. Aziz Ahmad, himself a modernist and a great admirer of Parwez, was very unhappy with his NIZAAM-E-RUBUBIYYAH concepts. In his book ISLAMIC MODERNISM IN INDIA AND PAKISTAN (pages 224-225), Dr Aziz Ahmad concludes that no modernist, right from the time of Sir Sayed Ahmad Khan to the present, was so close to Western thought as was Parwez.” – Page 108 of ISLAMIC RESURGENT MOVEMENTS IN THE INDO-PAK SUBCONTINENT.

இன்னும் நிறைய உண்டு [சுட்டி-2] மற்றும் [சுட்டி-3].

அடுத்து, குலாம் ரஸூல் விளக்கம் கேட்ட இறை வசனம்:
“என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய் என்பதை எனக்குக் காட்டேன்” என்று நபி இபுறாஹீம் கேட்டபோது, “நீர் நம்பவில்லையா?” என்று (அல்லாஹ் திருப்பி) வினவினான். “இல்லையில்லை (நான் நம்புகிறேன், அதைக் கண்களால் கண்டு) என் மனம் நிறைவு பெறும் பொருட்டு (காட்டுவாயாக! என்று வேண்டி நின்றார்). “நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை(ப் பெயர்கூறி அழைத்தால்) உம்மிடம் வருமாறு பழக்கிய பின்னர், அவற்றைத் துண்டு-துண்டுகளாக ஆக்கி, அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மலையில் வைத்ததன் பிறகு அவற்றை(ப் பெயர் கூறி) அழைப்பீராக! அவை உம்மிடம் பறந்து வந்து சேரும்(படிச் செய்வேன்)” என்றும் “அறிந்து கொள்வீர்! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” என்றும் அல்லாஹ் கூறினான். [002:260].

படிப்பினைகள்:
(1) சிறிதளவு ஐயம் இருந்தாலும் அந்த ஐயத்துடனே கண்மூடித் தனமாக எந்த ஒன்றையும் நம்பும்படி இஸ்லாம் கூறவில்லை. ஐயத்தைப் போக்கிக் கொள்வதற்கு சாத்தியமான எல்லா வழிகளையும் ஆராயச் சொல்லுகிறது.
(2) பிற உயிரினங்களைப் பழக்கி, அடக்கியாளும் திறமையை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான்.
(3) மனிதனுடைய ஆற்றல் வரையறுக்கப் பட்டது.
(4) வரையறையற்ற ஆற்றல் என்பது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது.

இறைவனுடைய வரையறையற்ற ஆற்றல்களில் சிலவற்றின் அறிவியல் சான்றுகள் இந்தச் சுட்டியில் (குலாமுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக THE PHYSICS OF THE DAY OF JUDGMENT ) ஆங்கிலத்தில் கிடைக்கின்றன [சுட்டி-4].

இறுதியாக, சிறப்புச் செய்திகள்-4
ஷாஹுல் ஹமீது வலீ, ஹஜ்ஜுக்குப் போகும் வழியில் லாகூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது லாகூரின் முஃப்தியாக இருந்த ஷேக் நூருத்தீன் என்பார் (ஷாஹுல் ஹமீது வலீயைப் போலவே) பிள்ளைப் பேறற்று இருந்தார். தனக்குப் “பிள்ளைப் பேறு வழங்க வேண்டும்” என்று முஃப்தி ஷேக் நூருத்தீன் (பிள்ளைப் பேறற்ற) ஷாஹுல் ஹமீது வலீயிடம் வேண்டினார். அதற்கு, விடலைப் பருவத்தில் இறந்துபோன தம் சகோதரர் யூஸுஃப் என்பாரின் பெயரை முதலில் பிறக்கும் ஆண் மகவுக்கு இட வேண்டும் என்று ஷாஹுல் ஹமீது வலீ நிபந்தனை விதித்தார்; அதையும் முஃப்தி ஏற்றுக் கொண்டார்.
ஷாஹுல் ஹமீது வலீ வெற்றிலைக்குள் ஒரு பொருளைச் சுருட்டி வைத்துக் கொடுத்தார். அந்தப் பொருளினால் முஃப்திக்கு நான்கு ஆண் மக்களும் சில பெண் மக்களும் பிறந்தனர்.
கீழக்கரை அப்துல் மஜீத் அரூஸ் மவ்லானா என்பவரால் பிழை திருத்தப் பட்ட, 336 பக்கங்களைக் கொண்ட – பகுத்தறிவுப் பால் குடித்த குலாமின் ‘பண்பாட்டு’ – மவ்லிதுப் புத்தகத்தின் பக்கம் 228-229இல் இரண்டாவது ஹிக்காயத்தாக மேற்காணும் ‘வெற்றிலைப் பிள்ளை’ச் சிறப்புச் செய்தி இடம் பெற்றுள்ளது. வெளியீட்டாளர்கள்: ஷாஹுல் ஹமீதிய்யா பதிப்பகம். முகவரி: எம்.ஏ. ஷாஹுல் ஹமீது அண்ட் ஸன்ஸ், 20 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5.

இன்னும் வேண்டிய அளவு யாரிடமிந்தும் குலாம் பகுத்தறிவுப் பால் குடித்து விட்டு வரலாம்.
ஃஃஃ

to.wahhabi@gmail.com
http://www.wahhabipage.blogspot.com
_____________________________
1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610261&format=html
2 – http://www.sunniforum.com/forum/showthread.php?t=12514&goto=nextnewest
3 – http://www.jamiat.org.za/isinfo/parwezi.html
4 – http://www.unh.edu/msa/physics.htm

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி