வகாபிய பார்ப்பனீயத்தின் மூட நம்பிக்கை

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

சூபிமுகமது


1)மவ்லிது ஒதினால் அல்லாவின் அருள் கிடைக்கும் என்று நம்புவது மட்டும்தான் பிதுஅத் என வகாபி
சப்பைக் கட்டுவது பரிதாபத்திற்குரியது.(சில குழுவினர் அருள் கிடைக்குமென நம்புகிறார்கள் உங்களால் அதற்கென்ன செய்யமுடியும்)

நபிகள்நாயகம் சொல், செயல்,அனுமதிக்குள் வராதது அனைத்தும் பிதுஅத்(-இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது.) இது வாழ்வின் அனைத்து செயல்பாடுகளிலும் நிறைந்துள்ளது.

எனவேதான் வகாபி நபிமுகமது பேசாத தமிழை பேசுவது பிதுஅத். நபிகள்நாயகம் செய்யாத இன்டெர்நெட்,தொலைகாட்சி சேனல்கள் விசிடிகள் மூலமாக வகாபிய பார்ப்பனீய மூடநம்பிக்கை பிரச்சாரம் செய்து வயிறு வளர்ப்பது பிதுஅத். கோடி கோடியாய் டிரஸ்டுகள் நிறுவனங்கள் அமைப்பது பிதுஅத். என்று சொல்கிறோம்.

நபிவழி திருமணம் செய்யும் போது தங்களது வயதைவிட பதினைந்து வயது அதிகமுடைய, குழந்தைக்கு தாயான, விதவை பெண்ணை திருமணம் செய்யவேண்டும்.கதிஜாநாயகியை நபிகள் மணம் செய்ததைப் போல, அல்லது ஆயிசா நாயகியை மணம் செய்ததை போல ஆறு வயது சிறுமியை மணமுடிக்க வேண்டும்.திருகுரான் ஹ்தீஸ் வழிகாட்டுவதும் இதுதான், இவை அல்லாத அனைத்தும் பிதுஅத் தான். வகாபிகள் பின்பற்றுவார்களா..

2) வகாபி தனது சிறப்புசெய்தி 2ல் பத்திரகாளியம்மனுக்கும், கருப்பண்ணசாமிக்கும் ஆட்டை மாட்டை பலி கொடுப்பதற்கும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்று ஆட்டை மாட்டை பலிகொடுப்பதற்கும்(அல்லாவின் பெயர் கூறுதலைத் தவிர்த்து) இரண்டுமே ஒன்றுதான் என்று எழதியிருப்பதை பிற வகாபி தோழர்களே நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா…


Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது