கருத்துக்கள் குறித்து சில கருத்துக்கள் – ரசூல், பாபுஜி,விஸ்வாமித்ரா,ரூமி, வெ.சா

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

நேசகுமார்


திண்ணையில் கடந்த சில வாரங்களாக எனது மற்றும் பலரின் எழுத்துக்கள் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறேன். இவற்றைப் பற்றிய எனது கருத்துக்களை முழுமையாகப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நீண்ட நெடிய பயணமாகவே எனக்குப் படுகிறது. ஏனெனில், எதையும் உள்வாங்க மனது நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இருப்பினும், சுருக்கமாக இவை குறித்த எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஹெச்.ஜி.ரசூல்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு பண்பான பதிலை, என்னை எதிர்கொள்ளும் இஸ்லாமியர் ஒருவரிடமிருந்து பெறுகிறேன். அவரது அதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களைக் கொலை செய்வோம்’ என்ற தலைப்பிலான கட்டுரை( http://www.thinnai.com/?module=displaystory&story_id=80609224&format=html) என்னுள் பலவித சிந்தனைகளையும், பதில் கருத்துக்களையும் தூண்டியது. சூஃபியிஸ அணுகுமுறையாக இன்று நாம் காணும் இந்த அணுகுமுறை பண்டைய இந்திய தத்துவயியலார்களின் அணுகுமுறையாகும். இந்திய ஆன்மீக மரபுகள் இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் எதிர்கொண்ட பிரச்சினைகளை இந்த அணுகுமுறை வெற்றிகரமாக எதிர்கொண்டு வெற்றிகளை சம்பாதித்துள்ளது(கிறித்துவம் உட்பட). ஆனால், இஸ்லாம் விஷயத்தில் இந்த அணுகுமுறை முழுக்கவும் வெற்றியடையவில்லை, முழுமையாக தோல்வியும் அடையவில்லை என்பதே எனது எண்ணம். வரும் காலத்தில் இது குறித்த எனது கருத்துக்களை திண்ணையில் பகிர்ந்து கொள்வேன்.

பாபுஜி

இவர் எனது எழுத்துக்களுக்குப் புதியவர் என்று நினைக்கிறேன். நான் இன்று நேற்றல்ல கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக்கும் மேலாக தொடர்ந்து இஸ்லாம் பற்றி எழுதிவருகிறேன். மரத்தடி இணையக் குழுமத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கிழக்குப் பதிப்பகம் பத்ரி அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய எனது கருத்துக்களைத் தெரிவித்தபின்னர் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக இஸ்லாம் பற்றிய விவாதங்களுக்குள் நுழைய நேரிட்டது. இவையெல்லாம் எனது பழைய வலைப்பதிவில் காணக்கிடைக்கும்( http://islaam.blogdrive.com).

இந்து மதம் வலுப்பட வேண்டும் என்று நான் விரும்பவில்லை. மதங்களைக் கடந்து சிந்திப்போம், செயல்படுவோம் என்பதே எனது வேண்டுகோள். இந்த வேண்டுகோல், நாகூர் ரூமியின் வேண்டுகோளைப் போன்று போலியானதல்ல. ஒருபுறம் ஷரீயத்துச் சட்டம் கடவுளின் சட்டமென்பார், மறுபுறம் ‘கடவுள்’ பேசியதாக முகம்மது சொல்லியுள்ளவற்றில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்டியவுடன் முகம்மதுவுக்கு வெறும் சப்தங்கள் தாம் கேட்டன அவற்றுக்கு அர்த்தம் கிடையாது என்று பல்டி அடிப்பார், மற்ற மதங்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து கொன்டே மதங்களைக் கடந்து வாருங்கள்(அதாவது இஸ்லாம் என்பது மதம் என்கிற விளக்கத்துக்குள் வராதாம், அது மார்க்கமாம்!) என்பார். இப்படியெல்லாம் எதிராளியை மூளையற்ற மூடர்களாக நினைத்து வார்த்தை ஜாலம் நான் செய்யவில்லை. மாறாக, இந்து மதத்தில் தவறு என நான் நினைக்கின்ற விஷயங்கள் குறித்து பல இடங்களில் தொடர்ந்து நான் எழுதி வந்துள்ளேன். திண்ணையிலேயே கூட ஜெயேந்திரர் விஷயமாக நான் எழுதியது வலதுசாரி இந்து அமைப்புகளின் கருத்துக்கு நேர்மாறானது. இட ஒதுக்கீடு சம்பந்தமாக நான் சிஃபி இணைய தளத்தில் எழுதிய கருத்துக்கள், வலது சாரி இந்து அமைப்புகளின் அணுகுமுறைக்கு மிகவும் மாறானது, முரணானது.

இந்து மத அடிப்படைவாதத்தை நான் எப்போதும் ஆதரித்ததில்லை. எனது எழுத்தின் நோக்கமே அனைத்து மத அடிப்படைவாதங்களும் மறைய வேண்டும் என்பதுதான். இன்னும் சொல்லப்போனால், எந்த மதமும் விமர்சனத்துக்கு மேலானதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்தி வந்துள்ளேன். பாபுஜி என்ற பெயரில் எழுதியுள்ள இஸ்லாமிஸ்ட் நண்பர் எனது வலைப்பதிவுக்குச் சென்று( http://nesakumar.blogspot.com) அங்கு இட்டிருக்கும் எனது பிரசுரமான படைப்புகளைப் பார்த்துப் படித்து பின் என்னைப் பற்றிய கருத்தை ஏற்படுத்திக் கொண்டால் நலமாக இருக்கும்.

விஸ்வாமித்ரா மற்றும் ரூமி

முதலாவதாக, இந்த இருவரின் எழுத்துக்களையும் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அடிப்படை நாகரிகத்தை கட்டிக் காத்து நடத்தப்படும் விவாதங்களே நம்மை சிந்திக்க வைக்கும். நமது நோக்கம் அதுதான் என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இருக்க முடியாது என்று கருதுகிறேன். இருவரும் இதை பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

காரத்தைத் தவிர்த்துப் பார்த்தால், விஸ்வாமித்ரா அவர்களின் கடிதம் மிகவும் சிறப்பான முறையில் நாகூர் ரூமி அவர்களின் படைப்பை விமர்சித்திருந்தது. கமலா சுரைய்யா விஷயத்தில் அவர் சொல்லியுள்ள இந்த கருத்தோடு அப்படியே உடன்படுகிறேன்:

‘எழுத்துச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் பரிபூரணமாய் நிலவும் நெதர்லாண்டிலேயே ஒரு தியோ வான்கோ பட்டப் பகலில் கழுத்தை அறுத்துப் பயங்கரமாகக் கொல்லப் படுகிறார் என்றால், ஒரு படித்த டாக்டர் பட்டம் பெற்ற ரூமியே ஒரு ருஷ்டியை கல்லை விட்டு எறிந்து கொல்லப் பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் என்றால், எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத ஒரு மாதவிக் குட்டி கமலா தாஸ் எங்கனம் தன் மனதில் தோன்றிய கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும் ? சர்வ வல்லமையுள்ள போப் பெனடிக்டே இன்று வெளியே தலை காட்ட இயலாத அளவுக்கு வன்முறை பரவுகிறது என்றால் ஒரு அய்யோ பாவம் கமலா தாஸ் என்ன செய்வார் ? இஸ்லாத்தை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதை விட ? அவர் சொல்ல வேண்டிய செய்திகளைத் தெளீவாகவே சொல்லி விட்டார். இனிமேல் தன் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, ஒரு வயதான பெண்மணி செய்யும் தற்காப்பு முயற்சிகளே கமலாதாசின் பேட்டிகள் என்றுதான் உண்மையை உணர்ந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஒரு தீவீரவாத, வன்முறை மதத்தின் முன்னால் ஒரு வயதான எழுத்தாளர் அதுவும் இந்தியா போன்ற தனி மனித பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் உள்ள ஒரு முதிர்ந்த பெண்மணி விடும் அறிக்கைகளில் ஏதும் வியப்பு இல்லை.’

நான் எனது முதலாக்கத்திலேயே இதைத்தான் சொல்லியிருந்தேன். வெளிப்படையாக தமது ஈமானிழப்பை காட்டிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கும் கமலாதாஸ் (எ) மாதவிக்குட்டி(எ) கமலா சுரையா, இஸ்லாத்தை விஷப்பாம்பு என்று வெளிப்படையாக அறிவித்து தீவிரமாக அதை விமர்சிக்கும் தஸ்லிமா நஸ்ரீனை வரவேற்று அவரிடம் தாம் இஸ்லாத்தைத் தழுவியது குறித்து வருந்துகிறேன் என்று உணர்த்தியதையும், தஸ்லிமாவே தனது பேட்டியில் இதைக் குறித்து சொன்னதையும் சுட்டியோடு எழுதியிருந்தேன். பரவாயில்லை இஸ்லாமிஸ்ட் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டு உலகமே ஜஹிலியா இருட்டில் ஆழ்ந்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளட்டும், அதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

வெ.சா

வெ.சா குறித்து நாகூர் ரூமி போக்கிரிகளின் நடையில் எழுதியிருப்பதைக் குறித்து விஸ்வாமித்ரா கோபம் கொண்டிருப்பது தவறு. அன்று காந்தியடிகள் சொன்னார், சராசரி முஸ்லிம் ரவுடியாயிருக்கிறான் சராசரி இந்து கோழையாயிருக்கிறான் என்று. இன்று சராசரி இந்து கோழை என்கிற ஸ்தானத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் ரவுடியாகவும் மாறிவருகிறான். ஆனால், ஈமான் உள்ளிறங்க இறங்க சராசரியான மனிதன் கூட ரவுடியாவதை இஸ்லாமியர்கள் விஷயத்தில் கண்கூடாகக் காண்கிறோம். மற்றபடி ஆன்மீக எண்ணங்கள் நிறைந்த நாகூர் ரூமி அவர்கள் இப்படி கீழிறங்குவது இஸ்லாத்தின் இயல்பான தன்வினை(Natural outcome of being a faithful muslim). எனவே இது குறித்து நாம் சஞ்சலம் அடைவதற்கு ஒன்றுமில்லை.
மற்றபடி, வெ.சா அவர்கள் சொல்லியுள்ளது எல்லாம் இஸ்லாத்தின் ஆவணங்களில் இருப்பதுதான். சுவன கன்னியர் கிடைப்பார்கள் என்று முகம்மது தமது அடியார்களை போரில் தூன்டிவிடவில்லை என்று நாகூர் ரூமி அவர்கள் மறுப்பார்களேயாயின், இஸ்லாமிய மூல நூல்களிலிருந்து அவருக்கொரு நீண்ட விளக்கத்தை தரக் காத்திருக்கின்றேன். வெ.சா சொன்னதில் எது இஸ்லாத்தில் இல்லாதது என்று நாகூர் ரூமி அவர்கள் கருதுகிறார்கள் என்பதை திண்ணையிலேயே எழுதலாம். அவர் மிகவும் நெகிழ்ந்து புகழ்ந்த சின்னக்கருப்பன் அவர்களே தமது பாகிஸ்தான் பற்றிய சமீக கட்டுரையில் சுவனக்கன்னியரைக் காண்பித்து ஜிகாத்துக்கு அப்பாவி முஸ்லிம்களைத் தூண்டிவிடுவது பற்றி எழுதியுள்ளார்( http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609294&format=html). உலகத்தில் உள்ள அனவரின் கண்களுக்கும் தெரியும் பொது உண்மை ஈமான் நெஞ்சில் நிறைந்திருப்பவர்களுக்கு மட்டும் ஏன் தெரியாமல் போகிறது என்று யூகிப்பது ஒன்றும் கம்பனின் வித்தையல்ல, காமன் சென்ஸ் போதும்.

– நேசகுமார் –
04/10/2006

nesakumar@gmail.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்