கடிதம்

This entry is part of 36 in the series 20061006_Issue

வஜ்ரா ஷங்கர்


திண்ணையில் திரு. சி. ஜெயபாரதன் எழுதும் உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) என்ற தொடர் கட்டுரை கண்டேன். அதில் அலெக்ஸாண்டர் புருஷோத்தமனை வென்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அலெக்ஸாண்டர், பொரஸ் (புருஷோத்தமன்) யிடம் தோற்றதாகவே சில சரித்திர ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர் தோற்றார் என்றால் அவரை மாவீரன் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் தோற்றதை மறைத்து வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர். ஆனால் சரித்திரம் மாறிவிடாது. அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் சமரசம் செய்துகொண்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன, வென்ற அலெக்ஸாண்டர் ஏன் புருஷோத்தமனுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டும்..?

அலெக்ஸாண்டர் சட்லஜ் (hyphsis) நதிக்கரையின் வழியாக தன் படைகளைத் திரட்டிக்கொண்டு கடலை அடைந்து பாபிலோனியா திரும்பியது தெரிந்ததே. அப்போது எதிர்கொண்ட “மல்லிஸ்” படைகளுடன் புருவின் படைகள் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து போரிட்டதாக சரித்திரம் கூறவில்லை. புரு தோற்றிருந்தால் அவன் படைகள் அலெக்ஸாண்டரை ஆதரித்து “மல்லிஸ்” படைகளுக்கு எதிராக போரிட்டிருக்கும்!

ப்ளூடார்க் (plutarch) அலெக்ஸாண்டர் புருவுக்கு தங்கங்கள் பல கொடுத்ததாகவும் சொல்கிறார். வென்ற அரசன் தோற்ற அரசனுக்கு தங்கம், வெள்ளி கொடுக்கும் முறை எந்த காலத்தில் இருந்தது?

சில ஆண்டுகளுக்கு முன் வந்த அலெக்ஸாண்டர் திரைப்படத்தை திரு ஜெயபாரதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆலிவர் ஸ்டோன் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து பின் தன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தெளிவாக அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றது காட்டப் படுகின்றது.

இந்த “ராஜாவை நடத்தும் முறையில் நடத்து” என்று தோற்ற புரு டயலாக் அடிப்பதாக படிக்கும் நான்சென்ஸையெல்லாம் எவ்வளவு நாள் தான் நாம் படித்துக் கொண்டிருப்பது?

புருஷோத்தமன், இந்திய மண்ணின் மைந்தன், அலெக்ஸாண்டரை தோற்கடித்தான். இந்தியரான நாம் அதை நினைத்து பெருமை கொள்ளவேண்டும்.

வாலிஸ் பேட்ஜ் தனது புத்தகத்தில் குறிப்பிடுவது,

In the battle of Jhelum a large majority of Alexander’s cavalry was killed. Alexander realized that if he were to continue fighting he would be completely ruined. He requested Porus to stop fighting. Porus was true to Indian traditions and did not kill the surrendered enemy.

Reference:
E. A. Wallis Badge, ”Life and Exploits of Alexander the Great”, Publisher: Kessinger Publishing Company ISBN 1417947837

sankar.mr@gmail.com

Series Navigation