அட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

விஸ்வாமித்திரா


பி கே சிவகுமார் என்பவர் திண்ணையில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அதில் ஒரு சில கட்டுரைகள் குறித்து எழும் சர்ச்சைகளைத் திண்ணையிலும் பிற இட இடங்களிலும் படித்து வருகிறேன். கடந்த சில வாரங்களாக அ அப்பாலை முன்வைத்து ஒரு கும்பல் வெ சா அவர்களுக்கு தொடர்ந்து அளித்து வரும் அர்ச்சனைகளையும் படிக்க நேரிட்டது. அட்லாண்டிக்கு அப்பால் போகும் பாக்கியம்தான் கிடைக்கவில்லை புத்தகத்தையாவது படித்து வைப்போம் என்று, சென்ற வாரம் தி நகர் பக்கம் சென்றிருந்த பொழுது, தி நகர் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஷாப்பிங் காம்ளக்ஸ் மாடிப்படி ஏறி, எனி இந்தியன் புத்தகக் கடையில் (புத்தக நிறுவனத்தின் பெயர் தேர்வுக்காக அதன் நிறுவனர்களுக்கு எனது பாராட்டுக்கள்) அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தும் விட்டேன். அ அப்பாலில் நேசகுமார் மீதான போலித்தனமான சாடல் தவிர, உருப்படியான பல கட்டுரைகளும் உள்ளன அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன். இப்பொழுது வெ சா அவர்களுக்கு இலவசமாக கிடைத்து வரும் தர்ம அடிகள் பற்றி மட்டும் இந்தக் கட்டுரையில் பேசுகிறேன்.

வெ சாவின் முகமூடி கிழிந்து விட்டதாம். வெ சா கூசாமல் பொய் சொல்லுகிறாராம், வெ சா உண்மைக்குப் புறம்பாகச் சொல்லுகிறாராம், வெ சா கீழ்த்தரமாக எழுதுகிறாராம் இன்னும் வெ சா சூலாயுதத்தை எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களை கொன்று குவிக்கிறார் என்று மட்டும்தான் இன்னும் எழுதவில்லை. இதுவெல்லாம் இஸ்லாமிய அறிஞரும், கல்லூரிப் பேராசிரியரும், இலக்கியவாதியும், இன்ன பிறவுமான நாகூர் ரூமியும் அவரது தொண்டரடிப் பொடிகள் சிலரும் திருவாய்மலர்ந்தருளியுள்ளனர். வருங்காலத்திலும் திண்ணையிலும் இன்ன பிற இலக்கியப் பேரிதழ்களிலும், இதே ரீதியில் வெ சா மீதான அர்ச்சனை தொடரும் என்று உறுதியாக நம்பலாம். வெ சா அவர்களை ஒரு மத வெறியன், கையில் கபாலத்துடனும், சூலாயுதத்துடனும் திரியும் ஒரு காபாலகர் என்ற ரேஞ்சுக்கு கொண்டு தள்ளாமல் இந்தக் கும்பல் தங்கள் திருப்பணிகளை நிறுத்தப் போவதில்லை.

ஒரு நேசக்குமாரை விமர்சித்த பி கே எஸ்ஸால் அதே அளவுகோலில் நாகூர் ரூமியையும் அவரது அப்பட்டமான தீவீரவாத , வன்முறை எண்ணங்களுக்காக விமர்சித்து அதை தனது அப்பால் கட்டுரைத் தொகுப்பில் சேர்த்திருக்க சிவக்குமாருக்குத் தெரியாதா என்ன ? அவருக்குத் தெரியும், அப்படி எழுதினால் அவர் அட்லாண்டிக்கு அப்பாலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட வேண்டியது நேரிட்டு விடும் என்று. அதற்குப் பதிலாக நேசக்குமாரைப் போட்டுத் தாக்கி விட்டால் போயிற்று, விளம்பரத்துக்கு விளம்பரம், மதச்சார்பின்மை லேபிலுக்கு லேபிள், இந்துத்துவாவை எதிர்த்த மாவீரர் பட்டம், இஸ்லாமின் தோழர், மதத்தீவீரவாதத்தை எதிர்க்கத் துணிந்த மாபெரும் சிந்தனையாளர், என்று பட்டங்கள் வந்து குவியும் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். உள்ளூர் ரூமியில் இருந்து கராச்சி தாவூத் வரை பாராட்டு மழை பொழியாதா என்ன ? என் பங்குக்கு “புத்திசாலி”, “பிழைக்கத் தெரிந்தவர்” என்ற இரு பட்டங்களையும் பி கே எஸ்ஸின் மகா நேர்மையான, பாரபட்சமற்ற எழுத்துக்குப் பரிசாக வழங்கி வைக்கிறேன், காசா, பணமா? அப்படி பி கே ஏஸ்ஸைப் போல நேசகுமாரையோ, அரவிந்தனையோ ரெண்டு திட்டுத் திட்டி பேர் வாங்கத் தெரியாவிட்டாலும், அவர் நேசகுமாரைத் திட்டியதைப் பாராட்டி விட்டு தனக்கும் ஒரு மதச்சார்பின்மை பட்டத்தை இலவசமாக வாங்கிக் கொள்ளக் கூடத் தெரியவில்லையே இந்த வெ சா அவர்களுக்கு!! இஸ்லாம்தான் அன்பை போதிக்கிறது வைணவம்தான் வன்முறையைப் பரப்புகிறது என்று மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மீதே எச்சில் துப்பக் கூடத் தெரியவில்லையே வெ சா அவர்களுக்கு!! இப்பொழுதாவது தெரிந்து கொள்ளூங்கள் வெ சா அவர்களே, இஸ்லாமியத் தீவீரவாதிகள் உங்கள் வீட்டில் வந்து குண்டு வைத்தால் கூட இஸ்லாம் அமைதியான மார்க்கம், நாகூர் ரூமியைப் போன்றவர்கள் ரஷ்டியை நாயைப் போல் அடித்துக் கொல்ல வேண்டும் என்று மத வெறி பிடித்து எழுதினாலும் கூட இஸ்லாம் ஒரு வன்முறையற்ற, வன்முறையை போதிக்காத மதம், நேசக்குமார் போன்றவர்கள் மத வெறியர்கள்,தொழு நோயாளிகள், கபோதிகள் என்றெல்லாம் எழுதிப் பிழைக்கும் வழியைப் பாருங்கள். இல்லாவிட்டால் பெனடிக்டைப் போல் மன்னிப்புக் கேட்டே உங்கள் வாழ்நாள் எல்லாம் கழிந்து விடும். போப்புக்காவது பாதுகாப்பு உண்டு. மேலும் மத வெறியன், பொய்யன், முகமூடி, இஸ்லாமின் எதிரி என்ற எண்ணற்றப் பட்டங்களையும், ·பட்வாக்களையும் வாங்கி மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டும் தேவையா என்று நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். நீங்களும் மதம் தாண்டி மனித நேயம் கற்றுக் கொள்ளுங்கள் வெ சா அவர்களே. நாளைக்கே ரூமி பாணியில் ருஷ்டியைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று மட்டும் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதிப் பாருங்கள், உங்கள் புகழ் எப்படிப் பரவுகிறது என்று, மனித நேயக் காவலராகவும், மத நல்லிணக்கம் பேண வந்த உத்தமராகவும் கொண்டாடப் படுவீர்கள். உங்கள் புத்தகங்கள் எல்லாம் நொடியில் விற்றுத் தீர்ந்து விடும். ஏற்கனவே முகமூடியை இழந்து தவிக்கிறீர்கள் என்கிறார்கள், தாராளமாக இரட்டை வேடம் என்ற, போலி மதச் சார்பின்மை என்ற முகமூடியை எடுத்து அணிந்து கொள்ளூங்கள், பேரும், புகழும், பட்டமும் பதவியும் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும், அப்படியெல்லாம் கூட தட்டாவிட்டால் கூட மதவெறியர் என்ற பட்டம் வாங்காமல் தப்பிக்கலாம். தயங்காமல் நேசகுமாரைத் தாக்கி இன்றே திண்ணைக்கு ஒரு கட்டுரை தட்டி விடுங்கள், முந்துங்கள் , முந்துங்கள்.

விரக்தியினால் விழைந்த வேடிக்கை ஒரு புறம் கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன். அப்படி என்ன எழுதி விட்டார் வெ சா ? தனக்கு வந்த ஒரு புத்தகத்தை விமர்சிக்கிறார். அதில் உள்ள நிறைகளை மட்டும் எழுதினால் அவருக்கும் வல்லிக்கண்ணனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் ? புத்தகத்தைப் படிக்கையில் அவருக்கு அப்பட்டமாக ஆசிரியரின் இரட்டை வேடம், நேர்மையின்மை, அவரது எழுத்துக்களின் உள்ளங்கை நெல்லிக் கனியாய் அப்பட்டமாய் வெ சா என்ற தேர்ந்த விமர்சகருக்குத் தெரிந்திருக்கலாம். நேசகுமார் பற்றிய பி கே எஸ்ஸீன் கருத்துக்களில் உள்ள செயற்கையான கண்டன உணர்வு அவருக்குப் புலப்பபட்டிருக்கலாம். தன்னை ஒரு மதச்சார்பின்மைவாதியாகக் காண்பித்துக் கொள்ள முகத்திரை அணிந்து கொள்ள வலிந்து வரவழைத்துக் கொண்ட எதிர்ப்புதான் நேசகுமாரின் மீதான கருத்து என்ற அப்பட்டமான உண்மை புலப்பபட்டிருக்கலாம். திரு.வெ சா, ஒரு விமர்சகராக தனக்குத் தோன்றிய கருத்துக்களை வைத்திருக்கலாம். அல்லது பி கே எஸ் நிஜமாகவே நேசகுமாரின் மீதுதான் தவறு என்று எண்ணீக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தும் வெ சா சிவக்குமாரின் எண்ணங்களை மாற்றும் விதமாக தன் விமர்சனத்தை வைத்திருக்கலாம். இதற்கு ஏன் இத்தனை ஆவேசம் ? ஆத்திரம் ? கீழ்த்தரமான வசவுகள் ? என்றைக்கு வெ சா முகமூடி அணிந்திருந்தார் ? நாகூர் ரூமிதான் முகத்திரை அணிந்து கொண்டு வன்முறையைப் பரப்புகிறார். என்றைக்காவது வெ சா தனது இத்தனை வருட இலக்கிய வாழ்வில் ஒரு முறையாவது தனது மதத்தையே, இனத்தையே விமர்சித்து எழுதிய எழுத்தாளர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று எங்காவது சொல்லியிருப்பாரா ? எழுதியிருப்பாரா ? நண்பர்களே, வெ சா வை விமர்சிக்க இந்த நாகூர் ரூமிக்கு என்ன அருகதை உள்ளது ? இவர் ஆசாரகீனனுக்கு எழுதிய பதில் ஒன்றில் எவ்வளவு ஆங்காரத்துடனும், மத வெறியுடனும், காழ்ப்புணர்வுடனும், வன்முறை உணர்வுடனும் ரஷ்டியை நாயை அடிப்பது போல் அடித்துக் கொல்ல வேண்டும் என்று எழுதுகிறார் பாருங்கள்.


நாகூர் ரூமியின் தீவிரவாத வன்முறை எழுத்தைக் கொஞ்சம் இங்கே படியுங்கள்

உங்களுடைய தாயைப்பற்றி யாராவது தவறாக ஒரு வார்த்தை சொன்னால் உங்களுக்குக் கோபம் வருமல்லவா? சல்மான் ரஷ்டிமீது முஸ்லிம் உலகுக்கு வந்ததும் அதே கோபம்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய மனைவிமார்கள் எங்களுக்கு அன்னையர். அவர்கள் பெயரில் விபச்சாரிகள் இருப்பதாக இஸ்லாமிய வரலாறு நன்றாக அறிந்த ரஷ்டி தனது “சாத்தானின் கவிதைகள்” நாவலில் சொல்லிருக்கும் ஒரு விஷயமே போதும் அவன் ஒரு அயோக்கியன் என்பதை விளக்க. ஒருவன் சிறந்த எழுத்தாளனாக இருப்பது வேறு. பண்புள்ள மனிதனான இருப்பது வேறு. தாயைப்பழிப்பவனை வேறு என்ன சொல்வது? அந்த நாவலில் இஸ்லாமிய வரலாறு எந்த அளவு நுட்பமாக கிண்டலடிக்கப்படுகிறது என்று இஸ்லாமிய வரலாறு அறிந்தவர்களுக்குத்தான் நன்கு விளங்கும். ஜிப்ரீல் ·பரிஷ்தா என்ற பெயரே ஒரு கிண்டல்தான். அது உங்களுப் புரிந்திருக்க நியாயமில்லைதான். தாயைப்பற்றியும் முஹம்மது நபி(ஸல்) பற்றியும் எந்த நாயாவது குரைக்குமானால் அந்த நாயைக்கொல்ல ஒரு கொமேனி தேவையில்லை. ஒரு சாதாரண முஸ்லிமே போதும். இஸ்லாமிய சட்டங்களைப்பற்றிப் பேசுகின்ற தகுதி அதைப்பற்றி ஆழமாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் உண்டு.
ஆரோக்கியமான ஒருவனை நோக்கி அழுகி நாறிக்கொண்டிருக்கின்ற ஒரு தொழுநோயாளியின் விரல் நீள்வது வேடிக்கையானது!

நாகூர் ரூமி

இப்படி ஏதாவது என்றைக்காவது வெ சா எழுதியுள்ளாரா ? ஆதாரம் காட்ட முடியுமா ரூமி ? யார் இங்கே மத வெறியன் ? யார் இங்கே வன்முறையைத் துண்டுவது ? இவரெல்லாம் ஒரு கல்லூரி ஆசிரியர். மாணவர்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும், தேச பக்தியையும் போதிக்க வேண்டிய ஒரு ஆசிரியரின் நிலையே இந்த லட்சணத்தில் உள்ளது. வந்தே மாதரம் பாடினால் அது சாமிக் குத்தம் என்கிறார். இது போன்ற மத வெறியையும், தேச விரோதக் கருத்துக்களையும் பரப்புபவர் ஆசிரியராக அமைந்தால் இவரது மாணவர்கள் எந்த லட்சணத்தில் இருப்பார்கள் ? இவர்களைப் போன்றவர்கள் மேல் எழுந்த அச்சம் தானே, இது போன்ற மத வெறியர்கள் மிதவாதிகள் என்ற முகத்திரையில் பசுத்தோல் போர்த்திய ஓநாய்களாய் உலவுவதைக் கண்ட பதட்டத்தினால்தானே வெ சா அப்படி எழுதினார் ? அவர் எழுதியதில் எது பொய் ? எது கீழ்த்தரம் ? உலகப் புகழ் பெற்ற ஒரு இலக்கியவாதியை தொழுநோயாளி என்று இகழும் ரூமியின் இரத்தம் தோய்ந்த எழுத்தை விடவா வெ சா அவர்களின் எழுத்து கீழ்த்தரமாக அமைந்து விட்டது ? யார் யாரைப் பார்த்து கேள்வி கேட்பது ? ஒரு தரா தரம் வேண்டாம், ஒரு தார்மீகத் தகுதி வேண்டாம் ? ஒரு அருகதை வேண்டாம்? இவரது சல்லின் மனைவிமார்களைக் கேவலமாக எழுதியவர் இவருக்கு அயோக்கியன், ஆனால் ராமர் சிலையையும், விநாயகர் சிலையையும் செருப்பால் அடித்த ஈ வெ ராமசாமி இதே ரூமிக்கு தத்துவ ஞாநி, சீர்திருத்தச் செம்மல். இவரது மதத்தை அவமரியாதையாக எழுதுபவனுக்கு இவர் மரண தண்டனை அளிப்பார் ஆனால் இந்து மதக் கடவுள்களை செருப்பால் அடித்த அயோக்கியர்கள் இவருக்கு தேவ தூதர்களாகத் தெரிவார்கள். இதிலிருந்து தெரியவில்லையா இவருக்கு உள்ள இந்து மதத் துவேஷமும், வெறுப்பும், இவருக்கு வெ சா வைம், நேச குமாரையும் கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது ? சொல்ல முடியுமா திரு.ரூமீ ?

வெ சா எழுதியதில் உண்மை இல்லை, அவர் அவதூறைப் பரப்புகிறார் என்று ரூமி உண்மையிலேயே நீருபிக்க முயன்றிருந்தால், இந்தப் பதிலை எழுதியிருக்க மாட்டார், மாறாக ருஷ்டியைக் கொல்ல வேண்டும் என்று தான் தெரிவித்தது ஒரு மதவெறி பிடித்த தவறான கருத்து என்றும், அமைதியை விரும்பும் இஸ்லாமில் அது போன்ற கருத்துக்களுக்கு இடமில்லை நான் தவறான பாதையில் சென்று விட்டேன் என்று எழுதியிருப்பார். வந்தே மாதரம் என்பது தேசத்தை வணங்குகிறேன் என்ற புனிதமான அர்த்தம் தருகிறது அதை பாடாமல் தவிர்ப்பது தேசத் துரோகமாகும் என்றும் அமைதியை விரும்பும் இஸ்லாத்தில் தேச விரோதத்திற்கு இடம் இல்லை என்று எழுதியிருப்பார். இஸ்லாமின் பெயரால் குண்டு வைக்கும் அனைவரையும் ஒவ்வொரு இஸ்லாமியரும் இனம் கண்டு அழிக்க வேண்டும், அவர்களை மத விலக்கம் செய்ய வேண்டும் ஏனெனில் இஸ்லாத்தில் அதற்கு இடம் இல்லை என்று எழுதியிருப்பார். வன்முறையைப் பரப்பும் வஹாபிக் கொள்கைகளை ஒவ்வொரு அமைதியை விரும்பும் இஸ்லாமியனும் புறக்கணிக்க வேண்டும் என்று எழுதியிருப்பார். பாகிஸ்தானிலும் பங்களா தேசத்திலும் இந்தியாவிலும் உள்ள வன்முறையைப் போதிக்கும் மதராசக்கள் அழிக்கப் பட வேண்டும் ஏனென்றால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று எழுதியிருப்பார். இந்து மதத்தை அசிங்கமாக துவேஷிக்கும் ஈ வெ ரா போன்றவர்கள் அயோக்கியர்கள் என்று ரூமி ஒத்துக் கொண்டிருப்பார். அப்படி எல்லாம் ரூமியின் எழுத்தும் எண்ணமும் இருக்குமானால் வெ சா வின் கருத்தில் அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் ரூம
யும் இன்ன பிறரும் செய்வது என்ன ? வெ சாவின் அச்சங்களை உறுதி அல்லவா செய்திருக்கிறார்கள். இஸ்லாம் வாளால்தான் பரப்பபட்டது என்று போப் சொன்னால் அதை உறுதிப் படுத்தும் விதமாக வன்முறையை அல்லவா தூண்டி விடுகிறார்கள்.

பாக்கிஸ்தானில் உள்ள மதராசக்களின் தலைவரை சி என் என் நிருபர் பேட்டி காண்கிறார். நீங்கள் ஏன் ஜிகாதை மதராசாக்களில் போதிக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அந்த மத வெறியன் பதில் சொல்லுகிறான் ‘ஜிஹாத் இல்லாமல் இஸ்லாம் இல்லை, கா·பீர்களை அழிப்பதை போதிக்கா விட்டால் இஸ்லாமே இல்லை என்று” இதற்கு என்ன அர்த்தம் ? வன்முறை இல்லாமல் இஸ்லாம் இல்லை என்பதன் ஒப்புதல் வாக்குமூலம் அது. அதைத்தான் பாக்கிஸ்தானின் மதத் தலைவரில் இருந்து , ஆம்பூர் ரூமி வரை நீரூபிக்கிறார்கள்.

இஸ்லாம் வாளால் வளர்ந்த மதம்தான் என்பதை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போன சுஜாதாவை இவர்கள் எப்படித் தாக்கினார்கள்? அவர் இனிமேல் இஸ்லாம் பற்றி கனவில் கூட கருத்துத் தெரிவிக்க மாட்டேன் என்று புலம்பும் அளவுக்கு மிரட்டப் பட்டார். 13000 வைஷ்ணவர்களை இஸ்லாமியர்கள் எப்படிக் கொன்றார்கள் என்று ஸ்ரீரங்கக் கோவில் வழிமுறைகள் கூறுகின்றன என்ற உண்மையைச் சொன்னதற்காக சுஜாதா தாக்கப் பட்டார். இஸ்லாம் வாளால், வன்முறையால் வளர்ந்த மதம் என்பதை அவர் மீது வீசப் பட்ட அவதூறுகளும், பொய்களும் சான்றாக அல்லவா விளங்கின. அன்றைக்கு சுஜாதா சொன்னதை மறுத்தீர்கள், இன்று அதையே பெனடிக்ட் (அதைச் சொல்லும் அருகதை அவருக்குக் கிடையாது என்ற போதிலும் கூட) அதைத்தானே சொல்லுகிறார் ? அன்று சுஜாதாவுக்குக் காட்டிய எதிர்ப்பும், இன்று போப் பெனடிக்டுக்கு காண்பிக்கப் படும் வன்முறையான எதிர்ப்பும், வான்கோவுக்கு ஏற்பட்ட மரணமும், இன்று வெ சாவுக்கு வரும் மறு மொழிகளும் மீண்டும், மீண்டும் , மீண்டும் இஸ்லாம் ஒரு வன்முறை மதம்தான் என்று சத்தியம் செய்கின்றன.

இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லையென்றால் ஏனையா ருஷ்டிக்கும், சல்மாவுக்கும் பட்வா தெரிவிக்கிறீர்கள். இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லையென்றால் ஆப்கானிஸ்தானத்தில் கிறிஸ்துவத்துக்கு மாறிய ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குகிறீர்கள். இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லை என்பது உண்மையானால், இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்கு மாற அனுமதி உண்டு என்று பகிரங்கமாக அறிவிக்க முடியுமா ? அப்படி இஸ்லாமில் இருந்து மாறுபவர்களுக்கு மரண தண்டனை இல்லை என்று இஸ்லாமிய மதம் அறிவிக்கட்டும் அன்று நம்புகிறோம் உங்கள் புளுகு மூட்டைகளை. அன்றும் வன்முறை, இன்றும் வன்முறை இனி என்றும் தீவிரவாதம். என்று இஸ்லாம் என்ற பெயரே தீவிரவாதத்தில் இருந்து பிரிக்க இயலாமல் போய் விட்டதே. பெனடிக்டுக்கு இன்று இருக்கும் அதே அச்சம்தான் இன்று உலகில் வாழும் ஒவ்வொரு இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் ஏற்படுகிறது. அதே அச்ச உணர்வு வெ சா அவர்களுக்கு ஏற்பட்ட்டுள்ளது. தன் கருத்தை போலித்தனம் இல்லாமல் பி கே ஏஸ் போன்று, பத்ரி போன்று இரட்டை வேடம் போடாமல் தெரிவித்துள்ளார். அந்த அச்சத்தை உறுதிப் படுத்துவது போல் உள்ளது இன்று அவர் மீது வரும் தாக்குதல்கள்.

இஸ்லாம் மட்டும் அல்ல எல்லா மதங்களுமே வரலாற்றின் ஒரு சில கால கட்டங்களில் சகிப்புத்தன்மையின்றி மத மாற்றலிலும், கொலைகளிலும் ஈடு பட்டிருக்கலாம். அப்படி ஈடுபட்ட மதங்கள் எல்லாம் இன்று தன் தவறுகளை ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே தங்கள் முன்னோர்கள் மத ரீதியாக புரிந்த கொடுமைகளை மறுத்தும், அப்படி நடந்ததே இல்லை என்று புளுகியும் வருகின்றன. வரலாற்றுத் தவறுகளை ஒத்துக் கொள்ளாதவர்கள், திருந்தப் போவதில்லை. அதனால் தான் நாம் இன்றும் இஸ்லாத்தின் பெயரில் படு கொலைகளையும், சித்ரவதைகளையும் அன்றாடன் அனுபவித்து வருகிறோம். தன் முன்னோர் செய்தது தவறென்று இந்தத் தலைமுறையினர் ஒத்துக் கொள்ளாத பொழுது இவர்கள் என்று திருந்தப் போகின்றனர் ?

இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லை என்பது உண்மை என்றால் அன்று பாக்கிஸ்தானத்திலும், பங்களா தேசத்திலும், இந்தோநேசியாவிலும்,காஷ்மீரத்திலும் இருந்த கோடிக்கணக்கான இந்துக்கள் என்ன ஆனார்கள், எப்படி மாயமாய் மறைந்தார்கள் என்று ரூமி சாகேப் கணக்குக் காட்ட இயலுமா? பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம், யானையையே மறைக்க முயல்கிறீரே ஐயா? இதில் ரூமிக்கு முகலாய ஆட்சியில் முழுக்க முழுக்க மதமாற்றம் நிகழ்த்த முடியவில்லையே என்ற ஆதங்கம் வேறு. முகலாய ஆட்சியில் மதம் மாறியவர்கள் எல்லோரும் ஒரு முகமது அலியைப் போல, மால்கம் எக்ஸைப் போல இஸ்லாமின் மேன்மைகளைக் கற்றறிந்து மதம் மாறியவர்கள்தான் என்று காதில் கலர் பூ சூடுகிறார் ரூமி.

எழுத்துச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் பரிபூரணமாய் நிலவும் நெதர்லாண்டிலேயே ஒரு தியோ வான்கோ பட்டப் பகலில் கழுத்தை அறுத்துப் பயங்கரமாகக் கொல்லப் படுகிறார் என்றால், ஒரு படித்த டாக்டர் பட்டம் பெற்ற ரூமியே ஒரு ருஷ்டியை கல்லை விட்டு எறிந்து கொல்லப் பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் என்றால், எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத ஒரு மாதவிக் குட்டி கமலா தாஸ் எங்கனம் தன் மனதில் தோன்றிய கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும் ? சர்வ வல்லமையுள்ள போப் பெனடிக்டே இன்று வெளியே தலை காட்ட இயலாத அளவுக்கு வன்முறை பரவுகிறது என்றால் ஒரு அய்யோ பாவம் கமலா தாஸ் என்ன செய்வார் ? இஸ்லாத்தை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதை விட ? அவர் சொல்ல வேண்டிய செய்திகளைத் தெளீவாகவே சொல்லி விட்டார். இனிமேல் தன் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, ஒரு வயதான பெண்மணி செய்யும் தற்காப்பு முயற்சிகளே கமலாதாசின் பேட்டிகள் என்றுதான் உண்மையை உணர்ந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஒரு தீவீரவாத, வன்முறை மதத்தின் முன்னால் ஒரு வயதான எழுத்தாளர் அதுவும் இந்தியா போன்ற தனி மனித பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் உள்ள ஒரு முதிர்ந்த பெண்மணி விடும் அறிக்கைகளில் ஏதும் வியப்பு இல்லை.

ரூமி சொல்லுகிறார் மதச்சார்பில்லாத சமுதாயத்தில் ஒரு இந்து இந்துவாகவும், முஸ்லிம் முஸ்லிமாகவும், ஒரு கிறிஸ்துவன் கிறிஸ்துவனாகவே இருக்க வேண்டும் என்று. யாருக்கும் ஆட்சேபணையில்லை. வெ சாவுக்கும் ஆட்சேபணை இருக்காது. ஆனால் இந்துக்களாக இருப்பதினாலேயே அவர்களைக் கா·பீர்கள் என்று பிரித்து அவர்கள் மீது குண்டு வைக்கும் பொழுதுதான் சக இஸ்லாமியர் மீது அவநம்பிக்கையும் அச்சமும் ஒவ்வொரு இந்துவுக்கும் ஏற்படுகிறது. கோவையிலும், மும்பையிலும், காஷ்மீரிலும், டெல்லியிலும் குண்டுகள் மதத்தின் பெயரால் வெடித்து இந்துக்கள் கொலை செய்யப் படும் பொழுதுதான் அந்த மதத்தின் மீது அச்சம் பிறக்கிறது. பின்பு ஒரு காலத்தில் அந்த அச்சமே வெறுப்பாக மாறுகிறது. அதன் வெளிப்பாடுதான் வெ சா அவர்களின், நேச குமார் அவர்களின்,இன்னும் அச்சத்தில் வாழும் கோடானு கோடி இந்துக்களின் அவநம்பிக்கையிலும், விரக்தியிலும் விளைந்த எண்ணங்களும். ஏன் எப்பொழுதும் குண்டு வைத்துக் கொல்பவர்கள் அனைவரும் இஸ்லாமியராகவே இருக்க வேண்டும். ஏன் எதிர் கருத்து உள்ளவரை நாயையை அடித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் இஸ்லாமியராகவே இருக்கிறார் ? ஏன் இஸ்லாமில் மட்டும் இன்றும் கா·பீர்களைக் கொன்றால் சொர்க்கம் என்று போதிக்கப் படுகிறது. இந்த ஏன் ஏன் ஏன் கள்தான் நேசக்குமார் போன்றவர்களை ஆராயத் தூண்டியது. என் கண் முன்னால் நான் கண்ட ரத்தம்தான் என்னை ஏன் இத்தனை வன்முறையும் இஸ்லாத்தின் பெயரிலேயே நடக்கிறது என்னை யோசிக்க வைக்கிறது. டாக்டர் பட்டம் வாங்கிய ஒரு ரூமியும், படிக்காத ஒரு இமாம் அலியும் ஒரே மாதிரி தீவீரவாத எண்ணங்களை சிந்திக்கத் தூண்
அடிப்படைக் காரணம் என்ன ? அந்த மதத்தின்போதனைகள் தவிர வேறு எந்தக் காரணங்களையும் என்னால் யோசிக்க முடியவில்லை. உங்கள் பதில்களும் எங்களது சந்தேகங்களை மேலும் மேலும் உறுதி செய்கின்றன.

இங்கு எழுதும் ரூமிக்கும், இன்னும் பல இஸ்லாமிய நண்பர்களுக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்துக்களாகிய நாங்கள், எங்கள் தேசத்திலேயே பாதுகாப்பில்லாமல் வாழ்கிறோம். அது போலவேதான் ஐரோப்பாவில், அமெரிக்காவில் வாழும் கிறிஸ்துவர்களும், பிற மதத்தவரும் உணர்கிறார்கள். எங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லை ஓட்டுப் பொறுக்கும் இந்து மதத்தை இழிவு செய்யும் அதே நேரத்தில் குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கத் தயங்காத அரசியல் பொறுக்கிகளும் இஸ்லாமிய தீவீரவாதத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். மதம் இல்லை என்று சொல்லும் கம்னியுஸ்டு கட்சியின் முதல்வரே ஒரு கொடூரமான கொலையாளியை விடுவிக்க முயற்சி எடுக்கிறார். ஒரு மாநிலத்தின் தலமைச் செயலாளரே அதற்குத் துணை போகிறார். இதே அச்ச உணர்வு உலகத்தின் அனைத்து நாடுகளின் வசிப்பவர்களுக்கும் ஏற்படுகிறது. எல்லா தாக்குதல்களும் இஸ்லாமின் பெயராலேயே நடத்தப் படுகின்றன. மதத்தின் பெயரால் அப்பாவி மக்களின் உயிர் அனு தினமும் கொடூரமான முறைகளில் பறிக்கப் படுகின்றன. எங்களின் பாதுகாப்பற்ற உணர்வை போக்குவதற்குப் பதிலாக நேசகுமாருக்கு, வெ சாவுக்கும் எனக்கும் அடாவடி ஏச்சுக்களும், மிரட்டல்களுமே பதிலாக வந்து எங்கள் அச்சத்தினை அதிகரிக்க செய்கின்றன. எங்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்த இஸ்லாமியர்கள் என்ன செய்தீர்கள் ? எங்கள் அச்சத்தினை போக்க நீங்கள் எடுக்கும் முயற்சி என்ன ? வந்தே மாதரம் பாட மாட்டோம், ருஷ்டியைக் கொல்லு, சல்மாவைக் கொல்லு, வெ சா வை மிரட்டு, போப்பைக் கொல்லு, நேச குமாரை வெட்டு, அரவிந்தனைக் குத்து, இதுதானே பதிலாகக் கிடைக்கிறது. ஐயா, இஸ்லாம் அமைதியைப் போதிக்கிறது என்று நீங்கள் கரடியாகக் கத்தினாலும் உங்கள் சொல்லும், செயலும், எழுத்தும் அதை உறுதி செய்ய வில்லையே ? காரணம் என்ன ? இதற்கு மூலம் என்ன ? அதை அறிந்து அந்த மூலத்தில் உள்ள தீவீரவாதக் கூறுகளை, காட்டுமிராண்டித் தத்துவங்களை நீக்க, உலகத்தில் வாழும் பிற மதத்தினர் உயிர்ப் பாதுகாப்புடன் வாழ நீங்கள் எடுத்த, எடுக்கும், எடுக்கப் போகும் முயற்சிகள் என்ன ? சொல்ல முடியுமா ? அனு தினமும் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் எந்த நேரத்த்தில் எந்த தாடிக் காரன் எந்த ரயிலில், எந்த விமானத்தில், எந்த பஸ்ஸீல் குண்டு வைப்பானோ என்று சந்தேகத்துடன் வாழும் இஸ்லாமியர் அல்லாத கா·பீர்களின் பய உணர்வை என்று எப்படி எவ்விதம் தவிர்க்கப் போகிறீர்கள். இன்று மக்கள் தாங்கள் செல்லும் பஸ்ஸீல் ஒரு சக இஸ்லாமியப் பயணியைக் கண்டு விட்டால் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று தயங்க வைக்கும் காரணம் என்ன ? முஸ்லிம் வீடு கேட்டால் வாடகைக்கு விட ஏன் தயங்குகிறார்கள் ? படித்த டாக்டர் பட்டம் பெற்ற ரூமியே ரஷ்டியைக் கண்டால் கொல்லு என்று சொன்னால் படிக்காத முஸ்லிம் எப்படி நடந்து கொள்வான். நினைக்கையிலேயே உள்ளம் நடுங்குகிறது. எங்கள் மனதில் சந்தேக உணர்வையும், வெறுப்பு உணர்வையும் நிரந்தரமாக ஏற்படுத்தி விட்டன ரூமி போன்றவர்களின் நடவடிக்கைகள். அதை மாற்ற என்ன நல்லெண்ண நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்கள் ?

அப்படி அனுதினமும் காட்டுமிராண்டிகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் நடுவே வாழும் இஸ்லாமியர் அல்லாத கோடிக்கனக்கான மனிதர்களின் குரல்தான் வெ சா அவர்களுடையது. அவர் ஒருவரது குரல்வலையை நெறித்து. அவரது எழுத்துச் சுதந்திரத்தை அடக்கி, மிரட்டி அமைதி படுத்தி உலகமே அமைதியில் துயில்கிறது, இஸ்லாம் என்றாலே அமைதினான் எல்லாமே சாந்தி சாந்தி சாந்திதான் என்று பொய்யைப் பரப்பத்தானே முயல்கிறீர்கள். கற்காலத்தில் இருந்து தற்காலத்துக்கு வாருங்கள். உங்கள் மத வெறியினைப் போக்குங்கள். உங்களது மதத்தில் காலத்துக்கு ஒவ்வாத காட்டு மிராண்டிக் கொள்கைகளைக் களையுங்கள். ஒரு காலத்தில் நிலவிய சூழ்நிலைகளுக்குப் பொருந்திய கருத்துக்கள் காலத்தால் அழியாமல் எல்லாக் காலங்களுக்கும் பொருந்த வேண்டும் என்ற அவசியமும் தேவையும் இல்லை. அப்பன் பெட்டிய கிணறு என்பதற்காக யாரும் உப்புத் தண்ணீரைக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. காலத்துக்கேற்ப மாறுங்கள். நீங்களும் வாழுங்கள் பிற மதத்தினரையும் வாழ விடுங்கள். இந்த உலகம் இப்படியே அஞ்சி அஞ்சி வாழ்ந்து அழிந்து விடாது, திருப்பித் தாக்க முயன்றால் அது பேரழிவாக முடியும். பிற மதத்தினரின் பொறுமைக்கும், அச்ச உணர்வுகளுக்கு ஓர் எல்லை உண்டு. இஸ்லாம் அமைதியைப் போதிக்கிறது என்று நீங்கள் சொல்வதில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்று உலகெங்கிலும் இஸ்லாமின் பெயரால் குண்டு வெடிப்புக்களும், பெண் அடிமைத்தனங்களும், பிற மதத்தின் மீது தாக்குதலும் நிற்கிறதோ, என்று அத்தகைய சூழ்நிலையை நோக்கி உங்க
சொல்லும், செயலும், எண்ணமும் பயணம் செய்கிறது அன் தான் எங்களின் அச்ச உணர்வு நீங்கும். இன்று ஒரு வெ சாவின் குரலை நீங்கள் அடக்கி விடலாம். ஒரு நேச குமாரின் நியாயமான ஆதங்கங்களை நீங்கள் ஒடுக்கி விடலாம், அதற்கு உங்களுடன் போலிமதச்சார்பின்மையைப் பேணும் இரட்டை வேடதாரிகள் துணை வரலாம். ஆனால் உலகெங்கும் கோடானு கோடி மக்களின் மனங்களில் தொக்கி நிற்கும் அந்த சந்தேகத்தை உண்மையான அமைதியும், மன மாற்றமும், மதச் சீர்த்திருத்தமும் மட்டுமே உருவாக்க முடியும். சிந்தியுங்கள். எங்களுக்கு யார் மீது வெறுப்பு கிடையாது. அச்சமே நிலவுகிறது. எங்களது அச்சத்தினை போக்குங்கள். பாதுகாப்பில்லாத எங்களது கோரிக்கையோ உங்களுக்கு அவதூறாகவும், கீழ்த்தரமாகவும், பொய்யாகவும் தெரிகிறது. என்று எங்களது நியாயமான வேண்டுகோள்களின் , உணர்வுகளின் நியாயத்தினை அதன் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற உணர்வை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களோ அன்று நாங்கள் நிச்சயமாக நம்புவோம் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று. அதற்கான பாதையைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்கிறோம். அது போன்ற குரல்கள் உங்களுக்கு வெறுப்பான, கீழ்த்தரமான குரல்களாகத் தெரியுமானால், இந்த உலகம் வெகுண்டெழும் பொழுது அந்த அல்லாவால் கூட யாரையும் காப்பாற்ற இயலாது.

இந்து மதத்திலுள்ள குறைகளைப் ஈ.வெ.ராவைத் துணைக்கழைத்துப் பட்டியலிட்டு, அது எவ்வாறு ஒரு நல்ல மதமாக இருக்கமுடியுமென கேள்வி எழுப்புகிறார் ரூமி. அவ்வாறு விமர்சிக்க அவருக்கு அனைத்து உரிமையும் இந்தியாவில் உள்ளது. அதுபோன்ற உரிமை ரஷ்டி போன்ற படைப்பாளிக்கும் உள்ளது. அவ்வாறு கேள்வி கேட்க உங்களைப் போன்ற வேறு மதத்தினர் உட்பட யாரையுமே அனுமதியளிக்கும் பெருந்தன்மையும், சகிப்புத்தன்மையும் இந்து மதத்தில் உள்ளது. உங்கள் மதத்தை யாராவது குறையாகப் பேசி விட்டால் பொங்கி எழுந்து, தொழுநோயாளிக்கு கேள்வி கேட்கத் தகுதியில்லை என்று பட்வா கொடுத்து விடுகிறீர்கள். தொழுநோயாளியும் ஒரு மனிதன்தான். அவன் ஆரோக்கியசாலியைக் குற்றம் சொல்வதனாலேயே, அவனுக்கு மரண தண்டனை கொடுத்து விடமுடியாது. அப்படி எந்த மதமாவது கொடுக்கச் சொல்லுமானால், அது மனிதாபிமான, நாகரீகமான மதமாக இருக்க முடியாது.

பரஸ்பர அவநம்பிக்கையும், பாதுகாப்பற்ற உணர்வும் நம் யாருக்குமே நன்மை பயக்கப் போவதில்லை. உங்களுக்கு மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்ற குருட்டு நம்பிக்கையின் காரணமாக இந்த உலகை இம்மையில் நரகத்தில் தள்ளாதீர்கள்.

விஸ்வாமித்திரா

viswamitra12347@rediffmail.com

(தனிநபர் குறித்த இரண்டு சொற்கள் நீக்கப் பட்டுள்ளன – திண்ணை குழு)

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா