எந்த வகை அறிவுஜீவிகள்…..?

This entry is part of 31 in the series 20060908_Issue

சூபிமுகமது


ஜிகாத் குறித்த விவாதத்தில் பாபர்மசூதி இடிப்பு சம்பவத்தில் இருந்து நேற்றைய குஜராத் சம்பவம்வரை மார்க்சியத்தை வைத்து நியாயப்படுத்தி விட்டால் ஏற்று கொள்வீர்களா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டிருக்கிறார். இந்துத்துவ பாசிச பயங்கரங்களை மார்க்சியத்தின் பேரால் நியாயப் படுத்த முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில் வர்க்க,சாதீய,சமய,அரசுஅதிகார நிறுவன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே மார்க்சீயம் செயல்படுகிறது.முடிந்தால் நண்பர் சீனிவாசன் நியாயப் படுத்திப் பார்க்கட்டும்.

மேலும் அவர் அறிவுத்தன விவாதம் குறித்தும் கவலைப்படுகிறார்.கிராம்சியின் மொழியில் சொல்லப்போனால் பாசிச ஒடுக்குமுறைக்கு துணை போகின்றவர்கள் மரபுவழி அறிவுஜீவிகள். ஒடுக்கு முறையிலிருந்து விடுபட விடுதலைக்காக போராடுபவர்களுடன் இணைந்து நிற்பவர்கள் உயிர்ப்புமிகு அறிவுஜீவிகள்.

சீனிவாசன் …வஜ்ராசங்கர்….அரவிந்தன்நீலகண்டன்களே…. நீங்கள் எந்தவகை அறிவுஜீவிகள்…?


tamilsufi@yahoo.com

Series Navigation