அல்லாவை மொழியியல் ரீதியாக புரிந்துக் கொள்வது

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

சூபிமுகமது


1) ஒரு பொருளை அல்லது நிகழ்வை அணுகும்போது அதற்கு பல்வேறு அர்த்த சாத்தியப்பாடுகள் உண்டு .இடம்,சூழல்,கலாச்சாரம் சமூகப் பின்னணியின் அடிப்படையில் அதன் அர்த்தங்கள் வேறுபடுகின்றன.ஒற்றைஉண்மை,ஒற்றைஅர்த்தம் என்ற கூப்பாடுகளல்லாம் மலை ஏறிவிட்ட நிலையில் பல உண்மைகள், பல அர்த்தங்கள் என்ற கருத்தாக்கமே முன்னுக்கு வந்துள்ளது. இது கபாவிற்கும் பொருந்தும்.

அல்லாவின் சமாதி கபாவில் உள்ளது என்பதும் ஒரு நம்பிக்கை. இஸ்லாமியர்கள் இந் நம்பிக்கையை ஈமான் கொள்ளுதல் என்பார்கள்
.நம்பிக்கை மற்றும் அறிவு வெவ்வேறானவை

. கபாவில் சமாதிவணக்கம் கபாவினுள் அல்லாவெனும்பழங்குடி அரபுகளின் ஆண்கடவுள் அடையாள வணக்கம் கறுப்புக்கல் வணக்கம் என இந்த அர்த்தங்களை வரிசைபடுத்தலாம்.

லாத்,உஜ்ஜா,மனாத் உள்ளிட்ட எண்ணற்ற பெண் தெய்வங்களோடு பழங்கால அராபியர்கள் கபாவில் அல்லா என்ற ஆண்கடவுளையும் வணங்கி வந்துள்ளார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. அந்த வழிபாட்டுக் கூறுகளின் மிச்சங்களும் இஸ்லாமிய வழிபாடுகளில் கலந்து மறு உருவாக்கம் பெற்றுள்ளன.

நபிமுகமதுவின் காலத்திற்கு முன்பு முன்னூறுக்கும் மேற்பட்ட பெண்தெய்வங்களை வணங்கிவந்த தொல் அரபு பழங்குடி மக்கள அல்லா என்ற ஆண்கடவுளை வணங்கவில்லை என்று எந்த ஒரு ஆதாரத்தையும் சொல்ல முடியாது.
ஒவ்வொரு அரபு பழங்குடி குழுவும் தங்களுக்கான தெய்வமாக லாத்தையோ உஜ்ஜாவையோ மனாத்தையோ ஏதேனும் ஒரு தெய்வத்தையே வணங்கி வந்துள்ளார்கள்.இதுவும் தவ்கீது கொள்கைதான்.

2) இஸ்லாமியர்களின் தவ்கீது வாக்கியத்தின் முதற்பகுதி இவ்வாறாக இருக்கிறது.
லாயிலாஹ இல்லல்லாஹ்- இந்த வாக்கியம் எதைச் சொல்லித் தருகிறது.
இறைவன் இல்லை அந்த அல்லாவைத் தவிர-

அரபு பழங்குடிச் சூழலில் லாத்,உஜ்ஜா,மனாத் போன்ற பெண்கடவுள் களெல்லாம் பொய். அல்லா என்ற ஆண்கடவுளே உண்மை என்ற அர்த்த உற்பத்தியையும் இது தருகிறது.

இதில் வணக்கத்துக்குரியவன் அல்லா என்று இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் மொழி பெயர்ப்பு செய்வது அனைத்தும் தவறே.

ஸாமீ இன மொழிகளிலே குறிப்பாக கல்தானியாவில் இலாஹியா சுர்யானியில் அலாஹா இப்ரானியில் இலோஹா
அரபியில் இலாஹ் என்ற சொல் இறைவனை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது

அலிப், லாம்,ஹே,என்ற அல்லாஹ்வின் எழுத்துப்பயன்பாட்டிற்கு எட்டுவித பொருள் கூறுவதும்
லில்லாஹ்,லஹு,ஹுவ என எழுத்துக்களைப் பிரித்து பொருள்கூறுவதும் பழமையான மரபு.
இந்நிலையில் அல்லாவிற்கு இன்னும் பல அர்த்தப்பரிமாணங்களையும் மொழியியலில் சொல்லாம் என்பது வேறு.

விண், மண்ணில் ஒளியாகவும் ,மனிதனின் ரூஹாகவும்,பிடரி நரம்பிற்கு அருகாகவும் உள்ள அல்லாவை
திருக்குரான்சுட்டிக்காட்டுகிறது.இஸ்லாமியர்களின் கபாதரிசனம் தொழுகை சடங்குகள் அனைத்தும் வேறு வகை அல்லாவை உருவாக்கி காட்டியுள்ளதுதான் மறு விவாதத்திற்கு உட்படுகிறது.

எனவேதான் இஸ்லாத்தின் ஆன்மீகப் பரிமாணம் குழப்பமுடையதாகம் இஸ்லாமியத்திற்குள்ளேயே பன்னூறு குழுக்களை உருவாக்குவதாகவும் அமையப் பெற்றுள்ளது.இது குறித்து இன்னும் விரிவாக பரிசீலிக்க வேண்டும்.
—————————-

Series Navigation

சூபிமுகமது

சூபிமுகமது