மயக்கம் தெளியவில்லை

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

ஹமீது ஜா·பர்



“ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் ‘வஹ்ஹாப்’ எனும் பெயர்” இந்த வார்த்தையை வஹாபி என்றென்றும் நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டால் தெளிவு பிறந்துவிடும். ஆனால் இல்லையே! முதல் பத்தியில் இதை எழுதிவிட்டு எட்டாம் பத்தியில் “…..இதோ சரணடைந்துவிட்டேன் என்று கூறினார் (2: 131) என்று தன் அருள் மறையில் வஹ்ஹாபு கூறுகிறான்” என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறார் வஹாபி. (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606235)

வஹாபி வேண்டுமானால் (அப்துல்)வஹ்ஹாப்(நஜதி) ஐ சார்ந்தவராக இருந்து கொள்ளட்டும், அது அவர் சொந்த உரிமை. அதற்காக தான் செய்வது மட்டும் சரியானது என்று வாதிடுவதும் அதை பிறர் மீது திணிக்க முயற்சிப்பதும் கூடாத ஒன்று. அப்துல் வஹாப் நஜதியைக் காப்பாற்ற அல்லாஹ்வின் பெயரை exploit பண்ணுவதும் கூடாத ஒன்று.

தவறு செய்தவன், தான் செய்தது தவறுதான் என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டான். இது சராசரி மனிதனுடைய சுபாவம். இந்நிலையில்தான் வஹாபியும் இருக்கிறார். “எதிர்மறைகள்” என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=806042111) வஹ்ஹாப் என்ற பெயருக்கு இறைவன்/அல்லாஹ் என்ற பொருள் கொடுத்துவிட்டு இன்றளவும் அதையே பிடித்துக்கொண்டிருப்பவரை மூன்று கால்கள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லமுடியும்?

மீண்டும் சொல்கிறேன், அது இறை வசனமாக இருக்கட்டும் அல்லது நபி போதமாக இருக்கட்டும் “வஹ்ஹாபு சொன்னான்” என்பதற்கும் “அல்லாஹ் சொன்னான்” என்பதற்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது. வஹ்ஹாப் சொன்னான் என்றால் அங்கு வஹ்ஹாப் என்ற பெயருக்குரிய பண்பு மட்டும் மேலோங்கி நிற்கிறது, மற்ற 99 பெயர்களும் அவற்றின் பண்புகளும் புறந்தள்ளப்பட்டு விடுகின்றன. அல்லாஹ் சொன்னான் என்றால் அவனது அனைத்து திருநாமங்களும் அவற்றின் பண்புகளும் உள்ளடங்கிவிடுகின்றன. இது இலக்கியத்தின் நயம் மட்டுமல்ல, முறையும் அதுதான்.

“…..எப்பெயரைக்கொண்டு அழைத்தாலும்….(17:110) (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606235) என்று இறைவன் தன் திருமறையில் கூறியுள்ளது உண்மைதான், இல்லை என்று நானும் மறுக்கவில்லை வேறு எவரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த வசனத்தின் ஆழமானப் பொருளைப் பார்க்க வேண்டும். வெளிப்படையான எந்த அர்த்தத்தையும் வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

இறைவனின் எல்லா பெயர்களையும் எல்லா இடத்திலும் உபயோகிக்க முடியாது மட்டுமல்ல உபயோகிக்கவும் கூடாது. அப்படி உபயோகித்தால் அதன் தன்மை முரண்பாடாகிவிடும். இடம், பொருள், ஏவல் என்ற நிலை உள்ளது. உதவி தேடும்போது கண்டிப்பவனே தண்டிப்பவனே என்று அழைக்கமுடியாது. இறைவனே தன் திருமறையில் பொருத்தமுள்ள தனது அழகியத் திருநாமங்களைப் உரிய இடத்தில் பொருத்தியிருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக பாவமன்னிப்பு கோரும்போது ரப்பனா – எங்கள் இறைவனே என்று தொடங்கி இன்னக்க அன்த தவ்வாபுர் ரஹீம் – நிச்சயமாக நீயே மிக மன்னிப்போனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறாய் (2:128) என்று முடித்திருப்பதையும் அதற்கடுத்த வசனத்தில் ஞானத்தை கேட்கும்போது அஜீஜில் ஹக்கீம் – மிக்க வல்லோனும் நுண்ணறிவுடையோனுமாக இருக்கிறாய் என்று முடித்திருப்பதையும் இன்னும் இதேபோன்று ஒன்றுக்கொன்று இணைந்த வசனங்களை அனேக இடத்தில் பார்க்கலாம்.

பொருள் மயக்கம் கொண்டுள்ள வஹாபிக்கு இந்த அளவுக்கு விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். இதிலும் தெளிவு பிறக்கவில்லையென்றால்….. “அவர்களுடைய இதயங்களில் (வஞ்சகம், சந்தேகம் ஆகிய)நோய் உள்ளது, அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்திவிட்டான் (2:10) என்ற வசனம் உங்களுக்கும் பொருந்தும் என்று எண்ணுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. எனவே இறுகிப்போன வஹாபியின் இதயத்தை இளகுவாக்குவாயாக இறைவா! என்ற பிரார்த்தனையுடன் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

email: maricar@eim.ae

Series Navigation