ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி

This entry is part of 41 in the series 20060616_Issue

நவநீதகிருஷ்ணன்


ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி

“ஆக, சோரம் போன கணவனைத் திரும்ப ஏற்றமைக்காகவும், அவன் திரும்பி வந்த நாள் வரையில் தான் சோரம் போகாதிருந்தமைக்காகவும் கண்ணகி “கற்புக்கரசி” என்று போற்றப்படுகிறாள்.”

-ஜோதிர்லதா கிரிஜா

நமது இன்றைய எண்ணங்களுக்கேற்ப சிலப்பதிகாரத்தையும் அது கூறும் செய்திகளையும் ஆராயக்கூடாது. கோவலன் திரும்பி வரும் வரை சோரம் போகாதிருந்ததனால் கண்ணகி “கற்புக்கரசி” என போற்றப்படுகிறாள் என்று கூறுவதே தவறான அணுகுமுறையாகும்.சிலப்பதிகாரத்தில் அவ்வாறு கூறப்படவில்லை.மாதவியுடனான உறவு ஏற்படுவதுவதற்கு முன் பல ஆண்டுகள் கண்ணகியும் கோவலனும் மிக மகிழ்ச்சியுடன் சிறந்து வாழ்ந்தனர். மாதவியுடன் சில காலம் கழித்த கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வருகிறான். பொருளீட்ட கண்ணகியுடன் மதுரை செல்ல விழைகிறான். பின்னர் கோவலன் தன் பொருந்தாச் செயல்களுக்காக வருந்தும்போது கண்ணகியே கோவலனிடம் கூறுகிறாள் “நீ செய்தது நல்லவர் கைக்கொள்ளாத ஒழுக்கம் கெட்ட செயலாயிருந்தாலும் உன் மீது நான் கொண்டிருந்த அன்பு மாறு படாதது” என்றும் அதுவே கோவலன் பூம்புகாரை விட்டு நீங்கும் திட்டத்திற்கு மறுப்புக் கூறாமல் உடன் வந்ததாகவும். அந்த அன்பே மன்னனிடம் நியாயம் கேட்கச் செல்வதற்கும் பின்னர் மதுரையிலிருந்த தீயோரை (ஒட்டு மொத்த குடிமக்களையல்ல) அழிப்பதற்கும் அடிப்படை. அவள் கொண்டிருந்த மாறாத காதலினாலேயே அவள் பத்தினித் தெய்வம் என அழைக்கப்படுகிறாள். கண்ணகியைக் கோவலன் வாயால் “கற்பின் கொழுந்தே” என்று வர்ணிப்பதும் அவள் பத்தினித் தெய்வமாக மக்களால் வழி படப்படுவதும் சிலப்பதிகாரத்திலேயே கூறப்படும் செய்தி. கற்பு வெறும் உடல் தொடர்புடையதா என்ற

கேள்விக்கு விளக்கம் இன்றைய சமூக வாழ்வியலை வைத்து அளவிடமுடியாது.

நவநீதகிருஷ்ணன்.

navaneethams@dataone.in

Series Navigation