கடிதம்

This entry is part of 41 in the series 20060616_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.

சகோதரர் பத்ரிநாத் அவர்களின் கடிதம் கண்டேன். தாம் வைத்ததை ஒருவர் அப்புறப்படுத்த, அவர் அப்புறப்படுத்தியதை முன்னவர் மறுபடியும் வைப்பதில் கவுரவப் பிரச்சினையே இல்லையா?

இந்த விசயத்தில் “ஜெ” க்கும் கலைஞருக்கும் கோபம் என்பதை ஒன்றாய்ப் பார்க்க வேண்டும் என்று நான் எங்கே சொன்னேன்? சகோதரர் அவ்வாறு புரிந்து கொள்ள என் கட்டுரையில் என்ன இருந்தது?

ஜெ-க்கு ஒரு விசயத்தில் இருக்கும் விருப்பு வெறுப்பு கலைஞர் அவர்களுக்கும் அதே கோணத்தில்தான் இருக்கும் என்றெல்லாம் நான் எங்கே சொன்னேன்?

பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் மூடருக்குச் சிலை வைக்கலாம் என்றும் நான் எங்கே சொன்னேன்? எப்போது சொன்னேன்? (அப்படி ஒரு மூடனுக்கு நானே சிலை வைத்துவிட்டு, ஆனால் கண்ணகிக்கு மட்டும் யாரும் சிலை வைக்கக் கூடாது என்று நான் தடுப்பது போலல்லவா இருக்கிறது இவரது கூற்று!)

மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை ஒன்றே என்றோ , இன அடிப்படையில் வேறுபாடு அற்றவை என்றோ நான் எங்கே சொன்னேன்? என் கட்டுரைக்கும் இனம், மதம் பற்றிய அலசலுக்கும் என்ன தொடர்பு? இனமும் மதமும் இங்கே எங்கே வந்தன? இவை மூன்றும் மக்களிடையே பிரபலம் என்று மட்டுமே சொன்னதற்கு இவ்வளவு குதர்க்கமா !

நல்ல கூத்து !
ஜோதிர்லதா கிரிஜா

jothigirija@vsnl.net

Series Navigation