தொடரும் வெளிச்சம் – பளீரென்று

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

வஹ்ஹாபி


“முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர்ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல” என்ற எனது http://www.thinnai.com/?module=displaystory&story_id=80604148&edition_id=20060414&format=htmlவிளக்கத்துக்குப் பதிலாக,

“பிராமணர்கள் கருவறை மொழியாக சமஸ்கிருதத்தை புனிதப்படுத்தி வைத்திருப்பதுபோல் வகாபிகள் அரபு மொழியையும் புனிதப்படுத்தி சொர்க்கத்தின் மொழி அரபு என்று புனைவுபடுத்தியும் வைத்துள்ளார்கள்” என்று இம்முறை தனது தலைச்சோற்றை இங்குப் http://www.thinnai.com/?module=displaystory&story_id=80604281&format=html] பரிமாற முனைந்துள்ளார் சூபி.

வஹ்ஹாபிஸத்தின் (அல்லது இஸ்லாத்தின்) பார்வையில் மொழி எதுவாக இருப்பினும் அது, தகவல் பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு கருவி; அவ்வளவுதான் – அவ்வளவேதான்.

அதனாற்றான் ரோமாபுரிக் காரரான ஸுஹைப் அவர்களும் பாரசீக ஸல்மான் அவர்களும் ஆப்பிரிக்க பிலால் அவர்களும் வஹ்ஹாபிகளின் தலைவருக்கு உற்றத் தோழர்களாகத் திகழ முடிந்தது.

வஹ்ஹாபுடைய வார்த்தைகளைப் படித்தாலே சூபிகளுக்குத் தானாகவே பொங்கும் – அலுப்பும் சலிப்பும்.

புழுத்துப்போன புத்திகட்கு எட்டுகின்றவரை இறைவசனம் குறித்த வஹ்ஹாபிகளின் அலுத்துப்போன விளக்கங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படத்தானே வேண்டும்?

முக்கால்வாசி அலுத்து விட்டார் சூபி; முழுமையாக்க எனக்கு மனமில்லை என்றாலும் ‘வஹ்ஹாபை வணங்குவதற்கு அரபுமொழி எதற்கு?’ என்ற எனது மிகச் சிறு முன்விளக்கத்தைத் திண்ணை வாசகர்கள் ஒப்பிட்டு நோக்குவதற்காக:
1- “… தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் …” [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை – காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

5- உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும்.

குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதாம். அதனால் தமிழ்த் தொழுகைதான் வேண்டுமாம். தமிழில் மட்டுமின்றி உலகமொழிகள் பெரும்பாலானவற்றில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டு விட்டது என்பதையும் இங்குச் சொல்லி வைக்க வேண்டியதாகி விட்டது. மொழித் தழுவல்கள் நூறைத் தாண்டினாலும் மூலம் ஒன்றுதான் – அன்றிலிருந்து இன்றுவரை.

வஹ்ஹாபுடைய கட்டளையைப் புறந்தள்ளி விட்டு, தன் தலைச் சோற்றுச் சவால் பந்தியில் ‘வஹ்ஹாபி எப்படி வந்து உட்காருவான்?’ என்பதைப் பரிமாறும்போதுகூட எண்ணிப் பார்க்கவில்லை சூபி.

வஹ்ஹாபிகளின் தலைவருடைய திருமணத்தைப் பற்றி சூபி குறிப்பிட் ட பின்னரும், ‘சோறு இன்னும் குழைந்து விடுமே ‘ என்பதற்காக அவருக்கு நான் பதில் சொல்லாவிட்டால் – அது நன்றாகவாயிருக்கும்?

“… இச்சலுகை நாம் உமக்களித்திருக்கும் சிறப்பாகும் …” அல் குர் ஆன் 033:050.

கொசுறு – அன்னை ஹதீஜா அவர்களைத் திருமணம் செய்யும்போது அண்ணலார் வெறும் அப்துல்லாஹ்வின் மகன்தாம் – அல்லாஹ்வின் தூதரல்லர்; வஹ்ஹாபிகளின் தலைவருமல்லர். “வரலாற்று ரீதியான உண்மை” என்று பரிமாறலில் கொஞ்சம் சிந்திக் கிடந்தது, எந்த வரலாறு என்ற முகவரி இல்லாது.

அண்ணல் இபுராஹீம் நபி அரபியரல்லர் என்று நான் எழுதியதை நிரூபிப்பதற்கு அன்னாரின் பர்த் ஸர்டிஃபிகேட்டை இங்கு அட்டாச் செய்ய வேண்டியதில்ல ; அன்னாரது தந்தையிலிருந்து தொடங்கி அவரது பேரப் பிள்ளைகளின் அரபு மொழிக்கு அப்பாற் பட்டப் பெயர்களைத் தெரிந்திருந்தாலே போதுமானது. அதற்குக் குர் ஆனைப் பார்த்துப் படிக்கவாவது தெரிந்திருக்கக் கூடிய ‘அடிப்படை அறிவு’ வேண்டும்; அவ்வளவே !

மிர்சா குலாம், எலிஜா முகமது, ரஷாத்கலீபா வழியில் யார் வேண்டுமானாலும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கழிப்பிடத்திற்கு உள்ளே சென்றால் வேலையை முடித்துக் கொண்டு சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். காரணம், மிர்சா நப்பி செத்துப் போனது கக்கூஸில்!

கல்யாணமே ஆகாமல் ஷிப்லிக்குத் தாயான ‘உயரதி நவீன முஸ்லிம்’ அஸ்ரா நுமானிக்கோ ‘தன்னினமே தனக்குதவி’ என்று போதுமென்ற பொன்மனம் படைத்த ‘முன்நவீன லெஸ்பியன் முஸ்லிம்’ இர்ஷாத் மஞ்சானிக்கோ இன்னபிற முன்-பின் நவீன முஸ்லிம்களுக்கோ தன் ஆதரவுக் கரத்தை சூபி நீட்டிக் கொள்ளட்டும் ; நமக்குக் கவலையில்லை – அன்னை மர்யம் அவர்களுக்கு வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்!

தலைப்பின் கருவைக் காணோமே எனத் திண்ணை வாசகர்கள் தேடி அலுத்துவிட்டிருக்கலாம்!

மூன்றாவது பாயிண்டில்தான் சூபியின் வெளிச்சம் – அதுவும் பளீரென அடிக்கிறது: “நபிமுகமது மூலமாக கி .பி.ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகிறது ” என்று

“எங்கள் இறைவா! எங்களின் வழித்தோன்றல்களுக்கு உன்னுடைய வேத வசனங்களை ஓதிக் காட்டி, உன்னுடைய வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பி வைப்பாயாக …” 002:129 என்று அண்ணல் இபுராஹீம் அவர்களும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களும் அல்லாஹ்விடம் வேண்டி நின்றனர். அண்ணல் இஸ்மாயீல் அவர்களின் வழித்தோன்றியவர்தாம் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி. அண்ணல் இபுராஹீம் அவர்களையும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களையும் இஸ்லாத்துக்கு எப்போது சூபி ‘உள் வாங்க’ப் போகிறாரோ தெரியாது.

“இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்காக அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட தூதன். எனக்கு (அருளப் படுவதற்கு) முன்னர் அருளப் பட்ட தவ்ராத்தையும் நான் உண்மைப் படுத்துகிறேன். மேலும், எனக்குப் பின்னர் ‘அஹ்மது’ எனும் பெயருடைய ஒரு தூதர் வருவதைப் பற்றிய தகவலையும் உங்களுக்கு நற்செய்தியாகக் கூறுகிறேன் …” 061:005 என்று அண்ணல் ஈஸா என்ற அல்லாஹ்வின் தூதர், அல்லாஹ்வின் இறுதித் தூதரைப் பற்றி நற்செய்தி கூறினார்.

“நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கமாக நூஹுக்கு அறிவுறுத்திய (ஓரிறைக் கொள்கை) அறவுரைகளையே (அடிப்படையாக அல்லாஹ்) ஆக்கியிருக்கின்றான். (முஹம்மதே!) நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிப்பதும் இபுராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு அறிவுறுத்தியதும் “ஓரிறைக் கொள்கையில் உறுதி குலையாமல் ஒருமித்து நில்லுங்கள்; பிரிந்து விடாதீர்கள் …என்பதே” 042:013. பட்டியலில் அண்ணல் நூஹ் அவர்கள் முதல் அண்ணல் ஈஸா அவர்கள் ஈறாகக் காத்துக் கிடக்கின்றனர். சூபி மனது வைத்தால் ‘உள் வாங்க’லாம்!

இவ்வார இறுதியாக ஒரு வேண்டுகோள்:
எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை வைத்துக் கொள்வது நல்லது – வெளிச்சம் போடுவது உட்பட.

அப்பப்பா … சென்ற வாரம் கண்கள் மிகவும் கூசி விட்டன!

oOo

to wahhabi@gmail.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி