ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

ஜெ. தீன்


ஹெச்.ஜி.ரசூல் போன்ற ஒரு சில தளஙகலில் மட்டும் இயங்குபவர்கள் தங்களை ஓவர்(ICON)களாகப் பாவித்துக்கொண்டு தங்களது மூக்குக்கீழ் உள்ள அனைத்து விடயஙகளிலும் ஆழ்ந்த புரிதல் இன்றி கருத்து கூற முயற்சிப்பது அபத்தமானதாகவே இருக்கும் என்பதற்கு அவருடைய கட்டுரைகளும் விளக்கமுமே சான்றாகும்.

அவர் நிறுவ முயற்சித்த விடயங்களை சுருக்கமாக ஆய்வோம்.

1.”வஹாபிசம்( என்று அவர் பழிக்கும் ஏகத்துவம்) தரீகா, தர்கா வழிபாடு முதலியவைகைளை மறுப்பதன் மூலம் பன்முக அடையாளங்களை அழிக்கிறது”

– இசுலாமின் அடிப்படையான ஐந்து கடமைகளில் முதன்மையானது கலிமா.

‘கலிமா தையிபா ‘ வின் படி ‘இறை¢வன் ஒருவனே!.முகமது நபி அவனது தூதர்! ‘ என்பது முதன்மையானதாகும். இதை ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒருவர் இசுலாமியர் ஆவார்.இசுலாத்தின் அடிப்படையே இதிலிருந்துதான் தொடங்குகிறது.

– இதற்கு மாறாக பல கடவுள் வணக்கம் ,உருவ வழிபாடு, அடக்கத்தல வழிபாடு(தர்கா வழிபாடும் சேர்ந்தே)ஆகிய அனைத்துமே இந்த ஏகத்துவதிற்கு எதிரானது என்பதை அறியலாம்.எனவே அடிப்படையையே கேள்விக்குறியாக்கும் இத்தகைய வழிபாடுகளை பேணும் ஒருவர் இசுலாமியரே அல்லர்.

2 “இசுலாமிய அடித்தள மக்கள் முன்வைக்கும் பாரம்பரிய மரபுகள்,வாழ்வியல்

சடங்குகள், புனைவுகள் சார்ந்து இயங்கும் தர்கா வழிபாட்டின் ஆன்மீக உளவியல் கண்டறியப்படவில்லை.பண்பாட்டு மானுடவியல்,மொழியியல்,தொல்குடி வரலாற்றியல்,பின்னைய அமைப்பியல், நாட்டாரியல், போன்றவற்றின் துனை கொண்டு தர்கா பண்பாட்டு நடவடிக்கைகளை அணுகவேண்டும்.”

-பல்கலைக்கழகங்களில் / ஆய்வுத்தளங்களில் உள்ள அனைத்து துறைகளையும் தன் வாதத்துக்கு ஆதரவு தேடி கூவி அழைக்கும் ஹெச்.ஜி ரசூல், ஆன்மீகம் வேறு, பண்பாடு வேறு என்பதை கூட அறியாதவரா ?. ஏகத்துவம் பேணுபவர்கள் கண்டிப்பது இறைவனுக்கு இணை வைக்கும் ஏனைய வழிபாட்டு முறைகளுக்கு தானேயொழிய மற்ற பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு அல்ல.

பாரம்பரிய மரபுகளின் பெயரால் ஏகஇறை கொள்கை(monotheism)யை மறுப்போருக்கு குர் ஆன் கூறும் பதில்

“அல்லாஹ் இறக்கியருளிய(வேதத்)தை பின்பற்று என்று கூறினால் ‘இல்லை!எஙகள் முன்னோர்கள் எதை செய்தார்களோ அதையே நாங்களும் பின்பற்றுவோம்! ‘ என்று மறுமொழி கூறுகின்றனர்.அப்படியானால் அவர்களின் முன்னோர்கள் எதையும் சிந்தித்து உணராதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா இவர்கள் அவர்களை பின்பற்றுவார்கள் ?” (2:170)

3. “தவ்ஹீது எனப்படும் ஏகத்துவம் பெண்கள் திரளின் ஜியாரத்(அடக்கத்தலங்களில்

மேற்கொள்ளப்படும் வேண்டுகோள் மற்றும் நேர்ச்சை)வழிபாடுகளை கடுமையாக கண்டனம் செய்கிறது. இதனால் பெண்களின் சுதந்திரவெளி தடைபடுகிறது”

-.தர்கா வழிபாடு,அடக்கத்தல வழிபாடு ,ஜியாரத் அனைத்துமே இறைவனுக்கு இணை வைக்கும் செயலே. அதை எவர் செய்யவும் இசுலாத்தில் இடமில்லை. இதில் ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லை.

பொருள் உற்பத்தி உறவுகளில் பெண்களின் பங்களிப்பை மருதலிக்கும் இவ்வாணாதிக்க சமுதாயம், மூடப்பழக்கவழக்கங்கலிலும்,சடங்குகளிலும் அவர்கள் ஈடுபட உற்சாகப்படுத்துவது அவர்களை சுரண்டுவதற்காண ஒரு வழிமுறையே ஆகும்.இதற்கான உரிமையைத் தான் ஹஹெச்.ஜி.ரசூல் கோறுகிறாரா ?.

இசுலாம் பெண்களையும் சமமாகவே பாவிக்கிறது. அவர்கள் தாங்கள் விரும்பிய துறைகளில் பணியாற்ற எந்ததடையும் இல்லை.அவர்களின் சுதந்திர வெளி கல்லாமையினாலும், வறுமையினாலுமே தடைபடுகிறது. இசுலாமிய மக்களின் படிப்பறிவு விழுக்காடு தலித் மக்களை விடவும் குறைவு என்று புள்லி விவரங்கள் கூறுகின்றன.

4. திருமண நிகழ்வுகளில் வரதட்சணை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளால் திருமணம் முடியாமல் அல்லலுறும் ஏழைப்பெண்கள் அனேகம். இந்த வரதட்சணை கொடுமை, நிலவுடைமை மற்றும் ஆணாதிக்க சமுதாயத்தின் நீட்சியாகவே உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இதற்கு மாறாக, பெண்களுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்கப்படவேண்டும் என்று இசுலாம் வலியுறுத்துகிறது.

“பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாக கொடுத்து விடுங்கள்.அவர்களாக முன்வந்து அதில் எதையேனும் விட்டுதந்தால் மன நிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்.” (குர் ஆன் 4:4)

மணக்கொடையை பெண்களுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு சொத்துரிமை கிடையாது என்று இசுலாம் சொல்லவில்லை. மாறாக ஹெச்.ஜி.ரசூல் அவ்வாறு மொழிகின்றார். இது யாருடைய ஆதிக்க மன நிலையை காட்டுகின்றது என்று நாம் சொல்ல தேவையில்லை.

5. “கூட்டாகவும், குழுவாகவும் தொழுவது முதலாளியத்திற்கு துணை போகிறது.இவை தனி நபர் நலன் சார்ந்து செய்யப்படுகிறது.”

-கூட்டாக தொழுவது தனியாக தொழுவதைக் காட்டிலும் 27 மடங்கு அதிகம் நன்மை என்று ஹதீஸ்கள் (புகாரி, முஸ்லிம்)கூறுகிறது. இதன்பொருட்டே அவ்வாறு தொழ விழைகின்றனர் இசுலாமியர்.இதில் தனி நபர் சார்பு நலன் ஏதும் இல்லை.மாறாக இதனால் முதலாளியத்திற்கு பாதிப்புகளே அதிகம் என வாதிட வழியுள்ளது.ஏனெனில் அதிகமான நபர்கள் ஒரே நேரத்தில் குழுமுவது மனிதசக்தி இழப்பு என்று வாதிட வகையுள்ளது. எனவே

ஹெச்.ஜி.ரசூல் முதலாளியத்திற்கு வால் பிடிக்கவென்றே இவ்வாறு கூறுகிறாரா ?.

அடிப்படைகளை பண்பாடு, மரபு போன்றவற்றின் பெயரால் நிராகரித்து தங்களது சுயலாபத்திற்கு ஏற்ப திரித்துகூறுதல்தான் “முற்போக்கு”களின் அறவொழுக்க மரபா ?

இப்படிக்கு

ஜெ. தீன்

jdeen@rediffmail.com

Series Navigation

ஜெ. தீன்

ஜெ. தீன்