கடிதம்
K.ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியருக்கு
கடந்த இதழில் மலர்மன்னன் எழுதிய கட்டுரை சிலருக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம்.ஹிந்த்துவ பிரச்சாரத்தினை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை. ஹிந்த்துவவாதிகள் பலர் இதே
கருத்தினை கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் அல்லது பூசி மெழுகுவார்கள். மலர்மன்னன் சற்று வெளிப்படையாக எழுதியிருக்கிறார். தலைப்பே (மோகன் தாஹ கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்) அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை எடுத்துரைக்கிறது. ஒரு கொலையை நியாயப்படுத்த எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்திருக்கும் அவர் மிக வெளிப்படையாக ஆம், கொலை செய்தது சரிதான், அதற்காக அவரும் வருந்தவில்லை, அதை நியாயப்படுத்தும் நானும் வருந்தவில்லை, ஹிந்து சமூகத்தின் நலனுக்காக கொலைகள் உட்பட எதை செய்தாலும் சரிதான் என்றே எழுதியிருக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரிடம் காந்தி கொலை செய்யப்பட்டதை விரிவாக விவாதித்த பின் ஒரு கேள்வி கேட்டேன், ஆர்.எஸ்.எஸ்காரர்களில் எத்தனை சதவீதம் பேர் இந்த கொலை நியாயமானது என்று நினைக்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். 75% பேர் என்பது அவர் பதில். ஆனால் காந்தியை மிகவும் வெளிப்படையாக ஹிந்து விரோதி என்று சித்தரிப்பது தங்களுக்கு எதிராகப் போய்விடுமோ என்பதால்தான் ஆர்.எஸ்.எஸ் மிகவும் வெளிப்படையாக காந்தியை அவ்வாறு சித்தரிப்பதையும், கொலையை நியாயப்படுத்துவதையும் தவிர்க்கிறதா என்று கேட்ட போது அவரிடமிருந்து ஒரு புன்னகைதான் பதில். நான் சொன்னேன், உங்களால் பெரியாரை இந்து விரோதி, நாத்திகர் என்று பிரச்சாரம் செய்வது எளிது ஆனால் காந்தியை விமர்சிப்பவர்கள் கூட அவரை வெறுப்பதில்லை, கொலையை நியாயப்படுத்தமாட்டார்கள். மேலும் காந்தியை மகான், உதாரண புருஹர், ராம பக்தர் என்று இந்துக்கள் கருதுவதும் உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது உண்மைதானே என்று கேட்டேன். ஆம் என்று ஒத்துக்கொண்டார்.
ஹிந்துத்வவாதிகளுக்கு 1948ல் கொலை செய்யப்பட்டபின்னும் காந்தி தலைவலியாக, தொந்தரவாக இருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் மலர்மன்னன் கட்டுரை. காந்தியை மிக கடுமையாக விமர்சித்த அம்பேத்காரும், பெரியாரும் அவரை ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விரோதி என்று ஒரு போதும் கருதியதில்லை. ஆனால் இன்றும் கூட காந்தியை பற்றிய ஹிந்த்துவவாதிகளின் சித்தரிப்பும்,கண்ணோட்டமும் எப்படி இருக்கிறது என்பதற்கு மலர்மன்னன் கட்டுரை உட்பட பல உதாரணங்கள் தரமுடியும். மலர்மன்னன் திண்ணையில் எழுதத்துவங்கிய போது அதை வரவேற்றவர்கள் இக்கட்டுரை
குறித்து என்ன கருதுகிறார்கள் என்பதை எழுத வேண்டும். திண்ணையில் கிட்டதட்ட தனி ஆவர்த்தனமாக ஹிந்த்துவ கச்சேரி செய்து கொண்டிருந்தார் ஒருவர், இப்போது மலர்மன்னன் வேறு. கச்சேரி நன்றாக களை கட்டியிருக்கிறது. அடுத்து 2002ல் குஹராத்தில் நடந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், நரேந்திரா ஒரு அவதார புருஹர், கர்ம் யோகி, கீதையின் படி நடந்தார் என்று மலர்மன்னன் கட்டுரைஎழுதினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
மலர்மன்னன் உட்பட பல ஹிந்த்துவவாதிகளின் சொல்லாடல்களில் பரிச்சயம் உடையவர்களுக்கு ஹிந்த்துவவாதிகள் உண்மைக்கு கொடுக்கும் மதிப்பு என்ன என்பது நன்றாகவே தெரியும். இதில் சுப்பிரமண்யன் சுவாமிக்கும், சந்தியா ஹெயினுக்கும், மலர் மன்னனுக்கு பெரிய வேறுபாடு இல்லை.நடையில்தான் மாற்றம் இருக்கும். அதிலும் சந்தியா ஜெயினின் (கு)தர்க்கத்தினை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.இவர்களுடைய எழுத்திற்கும் ஹிட்லரின் இனவெறிக்கு ஆதரவளித்து எழுதிய
Julius Streicherன் எழுத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
நியுரெம்பெர்க் விசாரணையின் போது ஒரு நாசி கூறியது
‘I think you can score many more successes when you want to lead someone if you dont tell them the truth than if you tell them the truth ‘. மலர்மன்னனின் கட்டுரைகளை படிக்கும் போது இது என் நினைவிற்கு வருகிறது. மலர்மன்னனின் கட்டுரையை படிக்கும் வாசகர்கள் ஆர்கனைசரின் தலையங்கங்களையும் படிக்க வேண்டும், குறிப்பாக கீழ்கண்ட தலையங்கத்தினை
http://www.organiser.org/dynamic/modules.php ?name=Content&pa=showpage&pid=109&page=6
அதில் The poor MPs, mostly back benchers did not get even the usual chance that our democracy generously grants to even the most despicable criminals like Abu Salem or Shahabuddin.
என்று குறிப்பிப்படுகிறது.இது எந்த அளவு உண்மை என்பதை வாசகர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.
அயோத்திதாசரை இப்போது சிலர் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள், பெரியாரை திட்டிக்கொண்டே. இவர்கள் அயோத்திதாசர் குறித்து அலேஷியஸ் வைத்துள்ள விமர்சனங்களையும்,அயோத்திதாசர் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கை,விவாதங்களை பிறர் படிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது. போகிற போக்கில் அவர்களுடைய இந்த பட்டியலில் அயோத்திதாசருக்கு அடுத்து ரவிக்குமார் இடம் பெற்றால் வியப்பில்லை.
K.ரவி ஸ்ரீநிவாஸ்
ravisrinivas@rediffmail.com
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மிட்டாதார்
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- முதலாம் தீர்மான கோட்பாடு
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- வீடு
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- காத்திரு காத்திரு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- ஜெயமோகனின் கொற்றவை
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- பாட்டி
- கவிதைகள்
- கடிதம்
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- எச்சங்கள் இன்னும்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘