கடிதம்

This entry is part of 28 in the series 20060106_Issue

ஜெயக்குமார்


அன்புள்ள நேயர்களுக்கு,

சென்ற வாரம் திரு கோவிந்தராஜன் அவர்களின் ‘தவமாய் தவமிருந்து ‘ திரைப்படம் பற்றிய விமர்சனம்

பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.

தமிழ் திரையுலகிள் அத்தி பூத்தாற் போல ஒரு சில படங்களே வருகின்றன, அவற்றை ஊக்கபடுத்தாவிட்டாலும்

பரவாயில்லை,ஊனப்படுதாமல் (கேளியாக விமர்சனம் செய்யாமல்) இருந்தால் அதுவே தமிழ் மக்களுக்கு திரு கோவிந்தராஜன்

போன்றவர்கள் செய்யும் நல்ல காரியம் ஆகும்.

நல்ல இயக்குனர்களில் இரு வகை உண்டு, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதன் இயல்பு மாறாமல் நல்ல தொழில்

நுட்பத்தின் உதவியுடன் கொடுப்பது( திரு கோவிந்தராஜன் அவர்கள் ரசிக்கும் ‘காதல் ‘ படங்கள் போல). மற்றொரு வகை நல்ல சமூக

கருத்துக்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து ஓரளவுக்கு இயல்புடனும் நல்ல தொழில் நுட்பத்துடனும் கலந்து கொடுப்பது (நாங்கள் ரசிக்கும் ‘தவமாய் தவமிருந்து ‘ படம் போல).

‘காதல் ‘ நன்றாக ஓடினாலும் அது நம் சமூகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அப்படியே இருக்குமானல், நாலு மெக்கானிக் பசங்கள் பள்ளி மாணவியின் பின்னால் சுற்றியிருபார்கள் அல்லது நாலு பள்ளி மாணவிிகள் சில மெக்கானிக் பசங்கள் பின்னால் சுற்றியிருபார்கள். ஆனால் நான் லண்டனில் என்னுடன் தங்கி இருக்கும் நன்பர்களுடன் ‘தவமாய் தவமிருந்து ‘ பார்த்தபோது அது எங்கள் அனைவரையும் பாதித்தது. பக்குவபட்ட எங்கள் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்த படம் அது. படம் பார்ததபிறகு ஊரில் உள்ள தாய், தந்தையரிடம் தொலைபேசி மூலம் மணிக்கில் பேசி கொண்டிருந்தார்கள்.

இந்த திரைபடத்தில் திரு கோவிந்தராஜன் அவர்கள் இயல்பு இல்லை என்று விமர்சித்த ஒவ்வொரு காட்சியையும் என்னால் நியாயப்படுத்த முடியும்.ஏனென்றால் அக்காட்சிகளில் சில நான் நேரில் பார்த்தவை, சில நானே அணுபவித்தவை. கதை நிகழ்கின்ற

அதே கல்லூரியில் அதே விடுதியில் 3 வருடங்கள் தங்கியிருத்தவன் நான். கதை நிகழ்கின்ற பகுதியில் இருந்து வந்தவர்களுக்கும், அதே மாதிரியான பொருளாதார நிலையில் இருந்து வந்தவர்களுக்கும் இது எளிதில் புரியும். உதாரனமாக வேலை வாய்ப்பு பற்றிய அவரின் கருத்துக்கு திரு பெரியசாமி அவர்களின் பதிலே சரியானதாகும். ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் வேலைக்கு போகும் போது அவர்கள் கார், நல்ல வீடு(வங்கி கடனில்)என்று இருப்பது இயல்பானது தான். இதை அடைய அவர்களின் கால அவகாசத்தையும்(சேரனின் குழந்தைகளின் வளர்ச்சியை வைத்தே) எளிதில் யாரும் புரிந்து கொள்ளலாம். படித்து முடித்தவுடன் வேலை என்பது அவர்கள் படிக்கும் கல்லூரி,தேர்ந்தெடுக்கும் துறை மற்றும் மதிப்பெண்களை பொருத்தே அமைகிறது.அடுத்த வேலை

சாப்பாட்டிற்கே வழியில்லை மேலும் அவனை நம்பி வந்த பெண்ணையும்(மனைவியையும்) காப்பாற்றவேண்டும் என்ற சூழலில், நல்ல மனதுள்ள எவரும் வண்டி இழுக்கவும் தயங்கமாட்டார்கள். படிப்புக்கு ஏற்ற வேலை மற்றும் கெளரவம் எல்லாம் உள்ளூரில் தான், இது வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்த திரைப்படத்தில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத காட்சி என்னவென்றால் இது போன்ற பின்தங்கிய பொருளாதார பின்புலத்தில் இருந்து வந்த ஒருவன் தனியாக ஒரு பெண்ணுடன் இருக்கும் போது உடலுறவு செய்யும் காட்சிதான். சேரன் தன் கதாபாத்திரத்தை சிறுமை படுத்திக்காட்ட வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.

நல்ல ரசனையை மக்களிடையே வளர்க்கவேண்டியது உங்களை போன்ற விமர்சகர்களுக்கும் உண்டு. ஒரு ஊரில்

சாரயம் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்காக தெருவுக்கு தெரு சாரயக்கடைகளை திறப்பவர்களை ஊக்கபடுத்தக்கூடாது. வெறும் 2 குத்துப்பாட்டு, 4 பங்ஜ் டயலக், 5 சண்டை மற்றும் லாஜிக் இல்லாத காட்சிகள் தான் திரைப்படங்கள் என்று படம் எடுத்து நம் தமிழ் மக்களின் ரசனையை அதள பாதளதில் தள்ளிக்கொண்டிருக்கும் விஜய், அஜித், சிம்பு மற்றும் சூர்யா(இயக்குனர்) போன்றவர்களின் திரைப்படங்களை இது போன்று விமர்சியுங்கள். இது போன்ற படங்களை பணம் செலவழித்து தியேட்டர்களுக்கு போய் பார்க்காமல், வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி சீரியல்கள் பார்ககலாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு உண்டா ? தயவு செய்து நீங்களும்

சன் தொலைக்காட்சியை போல தமிழ் மக்களின் ரசனையை மட்டமாக்கும் படங்களுக்கு முதலிடம் தராதீர்கள்.

உதாரனமாக அந்நியன் படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகள் மிக அதிகம். ஓருவர் அந்நியனாக மாறி ஊரெல்லாம் சுற்றுவாரம். ஆனால் வீட்டில் யாருக்கும் தெரியாதாம்,ஏன் அவருக்கே அவர் எப்போது அந்நியனாக மாறுவார் என்று தெரியாதாம். ஆனால் அந்நியனாக இருக்கும் போது போஸ்டர் அடித்து அனைவரையும் ஒரு நாள் ஒரு இடத்துக்கு வரச்சொல்வாரம் மீண்டும் அதே நாள் நிணைவு வைத்து அந்நியனாக மாறி அனைவருக்கும் காட்சி தருவாராம். இது போன்ற நிறைய லாஜிக் இல்லாத காட்சிகள் இப்படத்தில் இருந்தது. சீன படங்களின் சண்டை காட்சிகள் போன்ற பல காட்சிகள் இப்படத்தை நம் மண்ணை விட்டு அந்நியப்படுத்தி இருந்தது. ஒரு வேலை அதனால் தான் இப்படத்திற்கு அந்நியன் என்று பெயர் வைத்தார்கள் போலிருக்கிறது. ஆனாலும் ஒரு சமூக கருத்து இதில்

சொல்லப்பட்டதால் மேற்கூறிய விக்ஷயங்கள் இதில் பெரிதுபடுத்தப்படவில்லை. இது போன்ற வன்முறையை தூண்டும் படங்களை நீங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இருந்தால் நீங்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் ஆவீர்கள்.

—-

mjai_kumar@hotmail.com

Series Navigation