கடிதம்:

This entry is part of 31 in the series 20051118_Issue

மலர் மன்னன்


அன்புள்ள ‘திண்ணை ‘ ஆசிரியருக்கு,

‘திண்ணை ‘யின் சமீப இதழில் ‘அயோத்தி தாசர் ஆய்வுகள் ‘ என்ற ராஜ் கவுதமனின் நூலை பாவண்ணன் ஆழமாகவும் விரிவாகவும் நுட்பமாகவும் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு அறிமுகம் செய்து எழுதியிருப்பது, எடுத்துக்கொள்ளும் வேலையை முழுமையாகச் செய்து முடிப்பதில் அவருக்குள்ள பொறுப்புணர்ச்சியைப் புலப்படுத்துகிறது.

‘அயோத்திதாசர் மறைந்த பிறகான இந் த எண்பது ஆண்டு காலத்தில் தலித்துகளின் சக்திகள் இந்திய தேசிய காங்கிரஸ், பிராமணர் அல்லாத திராவிட இயக்கம், வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்திய பொதுவுடைமை இயக்கங்கள் போன்ற அயலார்களின் இயக்கங்களுக்காகத் தொடர்ந்து எரிக்கப்பட்டன ‘ என்றுதான் ராஜ் கவுதமன் எழுதுகிறார். எனவே,

‘பார்ப்பனர் அல்லாத கட்சியாலும் திராவிடர் இயக்கத்தாலும் தாசர் காலத்து தலித்துகள் ஆதாயத்தை அடை ந்திருக்க வாய்ப்பில்லை என்றேதோன்றுவதாக ‘ பாவண்ணன் சமாதானப்பட்டுக் கொள்வது பொருத்தமாக இல்லை.

மேலும், அந்த நாட்களில் ஆண்டு தோறும் விடாமல் கூடிக்கலைந்து கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை பல்வேறு பிரச்சினைகளுக்காகவுந்தான் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தது. எனவே அது விடுதலைப் போராட்டதிற்கு அழைப்பு மட்டுமே விடுத்துக் கொண்டிருந்ததாகப் பாவண்ணன் சமாதானம் சொல்வதும் சரியில்லைதான். தலித்துகளுக்கு மேல் சாதியினரின் அடக்குமுறை ஆதிக்கத்திலிருந்து விடுதலை அளிப்பது பற்றிய பிரக்ஞை காங்கிரசுக்கு தாசரின் காலத்திலுங்கூட இருக்கவில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

அயோத்திதாசர் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் தீவிர ஆதரவாளராக இருந்ததும் தலித்துகள் நலனில் பிரிட்டிஷ்காரனுக்கு இருக்கிற அக்கரைகூடக் காங்கிரசுக்கு இல்லை என்பதால்

தானாயிருக்கும்.

அன்புடன்,

மலர் மன்னன்

Series Navigation