கடிதம்

This entry is part of 31 in the series 20051021_Issue

மு சுந்தரமூர்த்தி


ஆசிரியருக்கு,

சின்னக்கருப்பனின் கட்டுரை குறித்த என் கடிதத்திற்கு அவருடைய பதிலைக் கண்டேன். அவருடைய கற்பனைக் குதிரை அசாத்தியமானது. எந்த நேரத்தில் எந்தப் பக்கம் தாவும் என்பது கணிப்பது கடினம். இந்த ஒரு சுவாரசியத்திற்காகவே அவருடைய எழுத்துக்களை எப்போதும் தவறவிடுவதில்லை. அவருடைய கடிதத்தில் வெளிப்பட்ட சில சுவாரசியங்கள்:

1. சின்னக்கருப்பன் சொல்வது: ‘ஜீன், பரிணாமம், இந்துத்துவ கருத்தியல்கள் ஆகியவை திராவிட ‘விளிம்பு நிலை ‘ அரசியலைப் பொறுத்தமட்டில் சாணி உருண்டைகள் என்று சொல்கிறார். அது எனக்கு ஆச்சரியமாக இல்லை ‘.

நான் எழுதியிருந்தது ‘இந்துத்துவ கருத்தியலோடு ஜீன், பரிணாமம் போன்ற அறிவியல் வார்த்தைகளை கலந்து பிசைந்து உருட்டிய சாணி உருண்டைகளை ‘. சின்னக்கருப்பனுக்காக ஒரு விளக்கம்: இந்துத்துவ கருத்தியல் — சாணி; ஜீன், பரிணாமம் — அறிவியல் வார்த்தைகள். சின்னக்கருப்பனுக்கு ஆச்சரியமாக இல்லாதது எனக்கும் ஆச்சரியமாக இல்லை. பிறர் சொல்வதைத் தன் வசதிக்கேற்ப திரித்துக்கொண்ட பிப 8கு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?

2. சின்னக்கருப்பன் சொல்கிறார்: ‘… அதனை விளிம்பு நிலை கருத்தியல் என்று சொன்னால்தான் தொடர்ந்து தன்னை underdog ஆகவும், தன்னை பாஜக போன்ற பெரும்பான்மை (தமிழ்நாட்டில்!) இந்துத்வ கருத்தியல்வாதிகளால் பலிவாங்கப்படும் பலிகடாக்களாகவும் காட்டிக்கொள்ள முடியும், அதன் மூலம் இடதுசாரி இன்னபிற (ரவி ஸ்ரீநிவாஸ்!) அறிவுஜீவிகள் மத்தியில் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும் ‘.

என்னைப் பற்றி எனக்கே தெரியாத பேருண்மைகளை சின்னக்கருப்பன் கண்டுபிடித்து வைத்திருக்கிறார். ‘Underdog ‘ ஆக ஒலிக்கும் போலியான புனைபெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டுள்ளவர் நான் என்னை underdog ஆக, பலிகடாவாக எங்கு, எப்போது காட்டிக்கொண்டேன் என்று விளக்கினால் அவருக்கு நன்றி சொல்வேன். அப்படியே ரவி ஸ்ரீநிவாஸ் தவிர வேறெந்த இடதுசாரி, இன்னபிற அறிவுஜீவிகளிடம் எனக்கு பாதுகாப்

‘d2 கிடைக்கும் என்று சொன்னால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

3. சின்னக்கருப்பன் சொல்வது: ‘… திரு சிவக்குமார் அவர்கள், திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ஆகியோரையும் குறிப்பிட்டு குழு ஒன்றை உருவாக்க முனைகிறார். கட்சி சார்பு நிலைப்பாடு இல்லாமல் சிந்திக்கத் தெரியாதவர்கள், எல்லோரையும் கட்சி சார்பாகத் தான் எழுதுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, தன் கட்சி நிலைப்பாட்டுக்கு எது எதிராக இருந்தாலும், கேலி கிண்டல்களையும் திட்டல்க 8ளயும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் ‘

என்னுடைய கடிதத்தில் நான்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஒரு பெயரை ஏன் விட்டுவிட்டாரென்று தெரியவில்லை. நான் சிவகுமார் எழுதிய கட்டுரையிலிருந்து அறிவியல் எழுத்துக்களைப் பற்றிய பி.ஏ.கிருஷ்ணனின் கருத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருந்தேன். சிவகுமாரின் கலந்துரையாடல்-கட்டுரைக்காக அவருக்கு நன்றியும் சொல்லியிருந்தேன். சிவகுமார் எழுதியிருந்த பிஏகேவின் கருத்தி ல் உள்ள ஆபத்தை (அறிவியல் கட்டுரைகளில் உண்மை அரைகுறையாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றை ஊக்கப்படுத்தவேண்டும்) சுட்டிக்காட்ட சின்னக்கருப்பனின் கட்டுரை ஒரு நல்ல உதாரணமாக இருந்ததால் இரண்டையும் ஒரே கடிதத்தில் குறிப்பிடும்படி ஆயிற்று. பெயரைக் குறிப்பிட்டதாலேயே சிவகுமாரை சின்னக்கருப்பனோடு சேர்த்து குழு ஒன்றை உருவாக்க முனைகிறேன் என்பது சுவையான கற்பனை (அரவிந்தன் நீலகண்டனின் பெயரும் பி.ஏ.கே.வின் மேற்கோளுக்குள் வருவது. சின்னக்கருப்பனின் கட்டுரையை ‘அருமையான கட்டுரை ‘ என்ற சான்றிதழோடு அ.நீ. அவரது வலைப்பதிவில் மறுபதிப்பு செய்திருந்தபோதிலும் இருவரும் ஒரே குழு என்றும் நான் குறிப்பிடவில்லை என்பதை அறிக). அவருக்கே அப்படி ஒரு குழுக் கட்டும் ஆசை இருந்தால் அதை என் பெயரைச் சொல்லி செயல்படுத்தத் தேவையில்லை. சின்னக்கருப்பன் தனிய 1க இயங்கினாலும் எனக்குக் கவலையில்லை. இன்னும் இரண்டு பேரோடோ இருபது பேரோடோ சேர்ந்து குழுவாக இயங்கினாலும் எனக்குக் கவலையில்லை.

‘தன் கட்சி ‘ என்று என்னை ஏதோவொரு கட்சிக்குள் சேர்க்க சின்னக்கருப்பன் விரும்புவதாகத் தெரிகிறது. அது எதுவாக இருந்தாலும் எனக்காக உறுப்பினர் தொகையை அவரே கட்டி உறுப்பினர் அட்டையை அனுப்பி வைத்தால் எனக்கும் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ‘கேலி கிண்டல்களையும், திட்டல்களையும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் ‘ என்று சின்னக்கருப்பன் மற்றவர்களை குறிப்பிடுவது தான் நகைச்ப dவையின் உச்சகட்டம்.

‘அதாவது ‘ போட்டு புலிக்கும், மனிதருக்குமான மரபியல்-பரிணாமத் தொடர்பை ‘என்னிஷ்டம் ‘ போல் விளக்குகிறேன் என்றால் அந்த வார்த்தையை நீக்கிவிட்டும் வாசிக்கலாம். கூடவே நான் மேற்கோள் காட்டியுள்ள அவரது ‘புலிகள் ‘ ‘மனிதர்கள் ‘ பத்திகளை இணைக்கும் ‘இது நம்மிடம் இன்னும் இல்லை ? ‘ என்ற கேள்வியையும் தொடர்ந்து ‘நம்மிடம் உள்ள ஜீன்கள் காலம் காலமாக இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு நம்மிட ம் வந்திருக்கின்றன ‘, ‘ஜீன் நம்மிடம் வருவது விலங்குகள் காலத்திலிருந்து ‘ என்ற வரிகளையும் சற்று உரத்தும் வாசித்தால் புலிக்கும், மனிதருக்கும் பரிணாம முடிச்சு போடுவது யாரென்று தெரியும்.

சின்னக்கருப்பனுக்கு என்னைவிட அதிகமாகவே பரிணாம அறிவு இருக்கக்கூடும். ஆனால் அதை அவருடைய கட்டுரையில் வெளிப்படுத்தவில்லை. மாறாக தன்னுடைய அரசியல் சாய்வை நியாயப்படுத்த, தான் எதிர்க்கும் அரசியலை அடிக்க பரிணாமம், ஜீன் என்ற வார்த்தைகளைக் கலந்து பாவ்லா மட்டுமே காட்டியிருக்கிறார். அதற்காக அபத்தமான உதாரணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை நான் மட் டும் சொல்லவில்லை. வலைப்பதிவுகளில் கருத்து தெரிவித்த பிறரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாவற்றையும் ‘கடவுள் செயல் ‘ என்று எளிதாக விளக்கிவிடுவார்கள். ‘உயிரியல் கற்றுத் தெளிந்தவர்கள் ‘ ‘ஜீன் மைய ‘க் கோட்பாட்டை வைத்து உயிரினங்களின் பொருண்மை, உளவியல் பண்புகள் எல்லாவற்றையுமே ஜீன்களை வைத்து நியாயப்படுத்திவிடுவார்கள். ஆனால் சில அபூர்வமான சிந்தனையாளர்கள் இரண்டையும் சேர்த்து உருட்டி விளையாடும்போது அதிகப்படியான எச்ஊ aரிக்கையாகவே இருக்கவேண்டியிருக்கிறது.

இந்த விவாதத்தில் இதுவே என்னுடைய கடைசி கடிதம் (என்னுடைய கூற்று எதையும் மேற்கோள் காட்டாமல் போகிற போக்கில் திரிக்காமலிருக்கும் வரை).

ஒரு உபரித்தகவல்: மூன்று வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் டென்னிசி மாநில உச்ச நீதிமன்றம் landmark judgement என்று விவரிக்கப்பட்ட, பிற்காலத்தில் கருத்தரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான வழக்குகளில் முன்மாதிரியாகக் காட்டக்கூடிய தீர்ப்பொன்றை வழங்கியது. ஒரு பெண்ணும், ஓர் ஆணும் சேர்ந்து வாழ்ந்தபோது (ஒரே பிரசவத்தில் மூன்று) குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள். தன் ஆண் துணையின் மரபணுபை 5யும், வேறொரு பெயர் தெரியாத பெண்ணின் தானம் செய்யப்பட்ட சினைமுட்டையையும் இணைத்து உருவாக்கிய கருவை வைத்து இப்பெண் கருத்தரித்தார். இப்போது இருவரின் உறவு மோசமடைந்து பிரிந்த பிறகு குழந்தைகளின் பாதுகாப்புரிமையை இருவருமே கோர பெண்ணுக்கே முதன்மை பாதுகாப்புரிமை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும், இப்பெண்ணுக்கும் மரபணுத் தொடர்பில்லை. ஆணுக்கு மரபணு த் தொடர்புள்ளது. இருந்தாலும் தன்னுடைய ஜீன்கள் இல்லாத, ஆனால் தான் இப்போது விரும்பாதவரின் ஜீன்களைக் கொண்டுள்ள குழந்தைகளை பாதுகாக்கும் உரிமையை இந்த பெண் கோரிப் பெற்றுள்ளார்.

மு. சுந்தரமூர்த்தி

msundaramoorthy@bellsouth.net

Series Navigation