கடிதம்
K. ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,
சின்னக் கருப்பனின் கட்டுரை மிகப் பிரமாதம்.இத்தகைய கற்பனை வளத்தினை குஷ்பு சொன்ன சில வாக்கியங்களுக்காக அவர் ஏன் வீணாக்க வேண்டும். 600 பக்க அளவில் ஒரு புதினம் எழுதலாமே.
தமிழில் இது போன்ற நாவல் வந்ததில்லை என்று நிச்சயம் பாராட்டு கிடைக்கும். இதை அறிவியல் புதினம் என்றும் சொல்லிக் கொள்ளலாம் அதாவது அப்படியும் விற்கலாம். இப்போது அறிவியல் என்ற முத்திரையுடன் எதையும் விற்பது எளிது. புதினத்தில் அறிவியல் இருக்கிறதோ இல்லையோ அறிவியல் என்ற பெயரை குறிப்பிட்டதற்கே நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும் என்று மதிப்புரைகளில் எழுதப்படுவது உறுதி. டார்வினுக்கு அடுத்தபடி பரிணாம வாதத்தினை வளர்த்தெடுக்கும் அறிஞர் பெருமான், நம்முன் நடமாடும் 21ம் நூற்றாண்டின் டார்வின் அணிந்துரை தரக்கூடும். சம்ஸ்கிருதம் உட்பட பல மொழிகளில் அதை மொழிபெயர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். அன்று இந்திய மெய்ஞானிகள் உருவகமாக கூறியதை, தங்கள் ஞான திருஷ்டி கொண்டு கணித்து அறிவித்ததை, இன்று இவர் அறிவியல் பூர்வமாக எழுதியிருக்கிறார், நிரூபித்துக் காட்டியுள்ளார் என்ற பாராட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இப்படி பொன்னான வாய்ப்புகள் பெற்றுத்தரக்கூடிய அரிய கருத்துக்களை வைத்துக் கொண்டு வெறும் கட்டுரை எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வருத்தமாயிருக்கிறது. ஆகவே இப்படிப்பட்ட ஒரு புதினத்தினை எழுதி தமிழையும், உலக சிந்தனையையும், மானுடத்தையும் வளப்படுத்துங்கள் என்று அவரைக் கேட்டுகொள்கிறேன்.
சாமன்யர்களன நமக்கு ஒரு சுட்டியை பரிந்துரைக்கிறேன். http://www.nybooks.com/articles/18363
ஒரு மாதிரிக்காக கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறேன்
The ghosts in the meme machine-GUSTAV JAHODA-HISTORY OF THE HUMAN SCIENCES Vol. 15 No. 2-pp. 55 ?68- 2002
A response to Gustav Jahoda -SUSAN BLACKMORE-pp. 69 ?71
A reply to Susan Blackmore-GUSTAV JAHODA-pp. 73 ?74
Genetic Fundamentalism or the Cult of the Gene-DAVID LE BRETON Body & Society Vol. 10(4): 1 ?20 (2004)
தமிழ் வலைப்பதிவுகளில் சின்னக் கருப்பனின் கட்டுரை குறித்த விவாதங்களை கீழ்க்கண்ட இணைய முகவரிகளில்
காணலாம்.
http://karthikraamas.net/pathivu/ ?p=95
http://arvindneela.blogspot.com/2005/10/blog-post.html
K. ரவி ஸ்ரீநிவாஸ்
http://ravisrinivas.blogspot.com/
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-11)
- கெளரவம்
- கொச்சைப்படுத்துதல்: மனித அவலட்சணம்
- எரியும் மழைத்துளிகள்
- பெரிய புராணம் – 59( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் போராட்டம்
- விற்பனைக்கு ஒரு தேசம்
- லிஃப்ட் பைத்தியம்
- சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (திரு.ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு)
- குஷ்புவும், ஈ வெ ராவும் – சில சமன்பாடுகள்
- ஒட்டடை
- கீதாஞ்சலி (43) எனக்குப் பூரிப்பளிப்பது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- எரிந்த ஊர்களின் அழகி
- கற்பு யாருடையது
- கடிதம்
- கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோபர்: 1, 2005)
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
- The Almond by Nedjma – ஒரு பார்வை
- வைதீஸ்வரன்
- புகாரி கவிதை நூல் வெளியீடு
- பூமியின் ஓஸோன் வாயுக் குடையில் போடும் துளைகள் [Holes in the Global Ozone Envelope]
- கடிதம்