காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்

This entry is part of 27 in the series 20050930_Issue

அறிவிப்பு


புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து மிக நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை காலம். கடந்த பதினைந்து வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் இருபத்தைந்தாவது இதழ் வெளியீட்டு விழாவும் அது தொடர்பாக நாட்டார் கலை நிகழ்வும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இடம் : யொர்க்வுட் நூலக அரங்கம் (Yorkwood Library Theatre, 1785 Finch Avenue West, Toronto)

காலம்: அக்டோபர் 8, சனிக்கிழமை, மாலை 6:00 மணி

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் உலகை மாற்றிய மூன்று அற்புதக் கண்டுபிடிப்புகளின் நூறாவது ஆண்டான 2005 ‘இயற்பியல் ஆண்டு ‘ என அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக, காலத்தின் இருபத்தைந்தாவது இதழ் ‘அறிவியல் சிறப்பிதழாக ‘ மலருகிறது. கலாநிதி வெங்கட்ரமணனைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவரும் இந்த இதழில் அறிவியல், தொழில்நுட்பம், அறிவியலாளர்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெறுகின்றன. நிகழ்வில் காலம் குறித்த விமர்சனங்களுடன்கூட பின்வரும் கலைநிகழ்வுகளும் கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 • நாடகம் – ‘மீண்டும் வருவார்கள் ‘ இயக்க்கம் : பாபு வரதராஜ்
 • அடர்வட்டு (DVD) வெளியீடு – யாழ் அண்ணாவி அல்பேர்ட் வழங்கும் தென்மோடி நாட்டுக்கூத்து. 157 அரிய இராகங்கள் அடங்கிய தென்மோடி நாட்டுக்கூத்து அடர்வட்டு
 • நாட்டுக்கூத்து அமர்வு.
  • யாழ் அண்ணாவி அந்தோணிப்பிள்ளை,
  • சட்டத்தரணி யேசுதாசன்,
  • வைத்திய கலாநிதி பிகார்தோ
  • ரெஜி மனுவல்பிள்ளை

தொடர்புகளுக்கு : செல்வம் அருளானந்தம், ஆசிரியர்,காலம், kalam@tamilbook.com

Series Navigation