கடிதம்

This entry is part of 26 in the series 20050923_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

1, அண்மையில் SheWrite என்கிற விபரணப்படத்தினைப் பற்றிய ஒரு குறிப்பினை ஒரு இணையதளத்தில் படித்தேன். http://www.infochangeindia.org/documentary44.jsp

தமிழில் எழுதும் நான்கு பெண் கவிஞர்களின் எழுத்தும்,கருத்துக்களும் இதில் முன்னிறுத்தப்படுகின்றன. இக்குறிப்பில் Vagina Monologues பற்றிக்குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கருத்து என்றே தோன்றுகிறது.

Vaginal politics: Tensions and possibilities in The Vagina Monologues-Susan E. Bell , Susan M. Reverby- Women ‘s Studies International Forum 28 (2005) 430- 444-Women ‘s Studies International Forum 28 (2005) 430- 444

என்ற கட்டுரையில் Vagina Monologues பற்றி குறிப்பிடும் போது ஒரிடத்தில் ‘Its ability to shock its audience into recognition can become merely the ability to shock. ‘ என்று எழுதுகிறார்கள். தமிழ்ச் சூழலில் இதை நினைவு கூர்வது தேவை என்று கருதுகிறேன்.

இக்கட்டுரை அப்படைப்பு, நிகழ்வுகள் குறித்து முக்கியமான கருத்துக்களை முன் வைக்கிறது. உதாரணமாக

But is V-Day simply a one-day, feel good event ? We worry whether the empowerment that comes from a contemporary speak-out using Ensler ‘s interpretation of other women ‘s experiences translates into a larger political assault on the structures of oppression

throughout the world. We do not wish to underestimate the power of words, especially since the play has been censored for what it says (Kahn, 2004) and shows (Bollag, 2004). But even so, is saying what is still transgressive out loud or showing it in public with

hundreds of others also a political act ? Does it in the end make the personal political ? And whose personal life does it make political ?

A recent critique of the 2004 V-Day march in Juarez, Mexico also points to the problems we seen inherent in the play. According to performance artist and Columbia University professor, Coco Fusco, an organization of mothers of the murdered women in Juarez, Mexico does not see their daughters ‘ serial killer or killers and rapists as the perpetrators of domestic violence. Rather, they have argued this is about the protection of powerful men by the authorities.They were angered by V-Day and Amnesty International ‘s linking of the play to their own brituals of public mourningQ and what Fusco writes was the failure of the march organizers to incorporate these mothers in the planning of the demonstration. While it is beyond the scope of this paper to address in detail the politics of the V-Day movement itself, this critique from Juarez suggests the difficulties we have been raising about violence, power, and representation in TVM.

(ஆனால் தமிழ்ச்சூழலில் Vagina Monologues நான் படித்தவரையில் ஒரு கலகப்பிரதியாகவே முன்னிறுத்தப்படுகிறது. அதற்கு அப்பால் அதைக் குறித்த ஒரு கண்ணோட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. )

தமிழ்ச்சூழலில் நான் புரிந்து கொண்ட,அறிந்து கொண்ட வரையில் இரண்டு கட்சிகளாக விவாதம் இருக்கிறது : ஒன்று சல்மா, மாலதி மைத்ரி போன்றோர் கவிதைகளை பல்வேறு பெயர்களில் நிராகரிப்பது, எதிர்ப்பது, இன்னொன்று இவற்றை ஒரு விமர்சனபூர்வமான கண்ணோட்டமின்றி கொண்டாடுவது, தூக்கிப்பிடிப்பது. என் கருத்து தவறாகவும் இருக்கலாம். இலக்கியத்தில் பெண்ணிய அழகியல், பெண்-உடல்- மொழி தொடர்பு குறித்த கோட்பாடு ரீதியான விவாதங்கள், உடல் குறித்த கோட்பாடு ரீதியான புரிதல்கள், ஆய்வுகள், பெண்ணியவாதிகள் உடல்,அனுபவம், உடல் நலம் குறித்து எழுப்பிய விவாதங்கள், கேள்விக்குட்படுத்திய அறிதல்கள்,அறிதல் முறைகள் என்று பலவற்றை உள்ளடக்கியதாக இங்கு விவாதம் நடைபெறுகிறதா என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன். இந்நிலையில் தமிழ்ச் சூழல் குறித்து அறியாத ஒருவர் மேற்கூறிய விபரணப்படம் மூலம் பொருத்தமற்ற புரிதல்களைப் பெறும் சாத்தியக்கூறும் இருக்கிறது. அப்துல் ரகுமான், பழனி பாரதி கூறியதை நிராகரிக்கும்ஒருவர் அழகியல் ரீதியாக, விமர்சன பூர்வமாக இக்கவிதைகளை அணுகி வேறு விதமான முடிபுகளுக்குவரக்கூடும். அது இரு தரப்பாருக்கும் உவப்பாக இல்லாமல்க் கூடப் போகலாம்.

2, உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் என்ற கட்டுரையில் கனம் கோர்ட்டர் அவர்களே என்ற கட்டுரையின் சுட்டி

விடுபட்டிருந்தது. அது இங்கே http://www.keetru.com/literature/essays/aadhavan.html

இக்கட்டுரை குறித்து எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆதவன் தீட்சண்யா தேவையில்லாமல

இக்கட்டுரையில் விஷயங்களை குழப்புகிறார். சில இடங்களில் அவரது வாக்கியங்கள் மிகவும்

தவறான புரிதலையே தருகின்றன. உதாரணமாக

‘ நாற்பதாயிரம் ரூபாய் லஞ்சத்திற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே பிடிவாரண்டு பிறப்பிக்கும் நீதிபதி இருக்கும் மாநிலத்தில், மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் அங்கு தங்களுக்கு நீதிகிடைக்காது என்று அஞ்சுவதில் தவறென்ன ? ‘

இன்னும் சில இடங்களில் அடிப்படைகளைக் கூடப் புரிந்து கொள்ளாமல் எழுதுகிறார். உ-ம்

‘தீர்ப்பை கண்டிக்கவோ விமர்சிக்கவோ முடியாது. மேல்முறையீடு தான் செய்யமுடியும். ‘

விரிவஞ்சி ஒரு நீண்ட விமர்சனத்தினை இங்கு தவிர்க்கிறேன். மேலும் தமிழில் இப்படி எழுதப்படும் அல்லது இது போன்ற கட்டுரைகளுக்கு விமர்சனம் எழுதுவதென்று ஆரம்பித்தால் அது தவிர வேறு எதையும் செய்ய முடியாது.

அண்மையில் பல மணி நேரங்கள் தமிழில் வெளியாகும் சிறு பத்திரிகைகள் உட்பட பலவற்றை படித்த பின் எனக்குத் தோன்றிய கருத்து இது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

Series Navigation