கடிதம்

This entry is part of 30 in the series 20050909_Issue

கூத்தாடி


ரூமி

உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை . உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்த பதிவு உங்கள் மேல் இருந்த சில மதிப்பீடுகளை மறுபரீசீலனை செய்ய சொல்லுகிறது.

உங்களின் ‘திரெளபதியும் சாரங்க பறவையும் ‘ படித்து விட்டு சிலாகித்த எனக்கு ,உங்களின் நோக்கங்களினூடான சந்தேகம் வலுவடைகிறது. இஸ்லாம் மீதான எந்த விமர்சங்களும் நீங்கள் எடுத்து வைத்த சல்மாவின் பதிவுகளில்

இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

உங்களின் பிரதான குற்றச்சாட்டான கொச்சை மொழி நமது நாட்டு பெரும்பாலான கிராமத்து மக்களாலும் மற்ற விளிம்பு நிலை மக்களாலும் பயன் படுத்தப் படுகிற வார்த்தைகள் தான். சாருவையும் & சல்மாவையும் porno எழுத்தாளர்களாக சித்தரிக்க முற்படுவது உங்களின் இலக்கிய அரசியலைத்தான் காட்டுகிறது.

உங்களின் நம்பிக்கைகளை விமர்சிக்கும் எதுவுமே இலக்கியம் இல்லை என்பது சொத்தை வாதம்.

உண்மை என்பது உங்களின் நம்பிக்கையும் அனுபவங்களும் மட்டும் அல்ல ..அவரவர் அனுபவங்களிலும் நம்பிக்கைகளிலும் தான் எழுதுகிறார்கள் ,அதை கொச்சைப் படுத்துவது கண்டிப்பாக நாகரிகம் அல்ல.

—-

koothaadi@gmail.com

Series Navigation