கடிதம்

This entry is part of 30 in the series 20050909_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

கடந்த வார இதழில் ஒரு கடித மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருக்கிறீர்கள். அதில் ஒரு தெலுங்கு மசாலா படத்தின் பல கூறுகள் உள்ளன. வில்லனாக ராஜசேகர் ரெட்டியைப் போல் தோற்றமுடைய ஒருவரை போடலாம், அவரை எதிர்க்கும் இந்து வீராங்கனையாக விஜயசாந்தியைப் போடலாம், ஆனால் அவர்

இப்போது தெலுங்கானாவிற்கான களத்தில் குதித்துவிட்டதால் அவர் இந்த வாய்ப்பினை நிராகரிக்ககூடும்.

ரோஜாவும் அரசியலில் இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் மனைவி பற்றியும் அதில் உள்ளதால் அவர் இந்து வீராங்கனை வேடம் ஏற்று கதைப்படி நடிக்கத் தயங்கக் கூடும். த்ரிஷா ஒப்புக்கொண்டால் அவரை இந்து வீராங்கனையாகப் போடலாம். அவருக்காக படத்தினைப் பார்க்க ஜனங்கள் வரக்கூடும், ஒரு

வேளை அவரும் மறுத்து விட்டால் சுவர்ணமால்யா ஒப்புக்கொள்ளக் கூடும்

இப்போது இது போன்ற விஷயங்களில் மிகவும் அக்கறை காட்டுபவர் திருவாளர் சுப்பிரமண்யன் சுவாமிதான்.

சு.சுவாமி தான் ஹீரோவாக நடிப்பேன் என்று அடம் பிடிக்கக்கூடும்.அதனால் என்ன பரவாயில்லை, டப்பிங் பேச ஒருவரை ஏற்பாடு செய்தால் போதும். எனவே அவர் உதவியுடன் சோனியா காந்தியை இதில் ஒரு வில்லியாகக்

காண்பித்து ஜெயலலிதா எதிர்ப்பு, போப் எதிர்ப்பு என்று கதையை கொஞ்சம் மாற்றி எடுத்தால் காஞ்சி மடத்து ஆதரவுடன் உலகெங்கும் வெளியிடலாம்.

மொழிபெயர்ப்பு கடிதங்களை நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் பகுதியில் வெளியிடக் கூடாது என்று ஆசிரியர் முடிவு செய்துள்ளதா என்ன. இது போன்ற கடிதங்களுக்கும், கற்பனைகளுக்கும் இப்போது பஞ்சமேயில்லை. யாருக்கேனும் இதில் சந்தேகமிருந்தால் http://www.kanchiforum.org/

அல்லது http://www.janataparty.org/ இணைய தளங்களைப் பார்க்கவும். ஆனால் இவற்றையெல்லாம் வெளியிடுவது என்று முடிவெடுத்தால் திண்ணை ஆசிரியர் குழு இவற்றை வெளியிடுவதற்கென்று ஒரு

தனி இதழ் ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivas@rediffmail.com

Series Navigation