கிருஷ்ணனின் நிலங்களில் கிருத்துவ அறுவடை பற்றி அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

ஆனந்த் கணேஷ்


(SV பத்ரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு)

மரியாதைக்குரிய ஜனாதிபதி அவர்களே,

இதை எழுதுவது எனக்கு வேதனையாக உள்ளது. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதை எழுதக்காரணம் மிக ரகசியமானமுறையில், எந்த எதிர்ப்புமின்றி ஆந்திராவிலுள்ள கோவில்களை, அம்மாநில முதலமைச்சராகவுள்ள, கிருத்துவப்போக்குள்ள ஸ்ரீமான் சாமுவேல் ராஜஸேகர ரெட்டி அழிப்பதும், அதை எவரும் கண்டுக்கொள்ளாமலிருப்பதுவும்தான்.

வணக்கங்களுடன்,

SV பத்ரி.

இக்கடிதம் பின்வருபவர்களுக்கு அனுப்பப்பட்டது:

1. இந்திய ஜனாதிபதி ஸ்ரீமான் APJ அப்துல் கலாம் – presidentofindia@rb.nic.in

2. ஆந்திரப்பிரதேச முதல்வர் ஸ்ரீமான் Y ஸாமுவேல் ராஜஸேகர ரெட்டி – cmap@ap.gov.in , cmap@ap.nic.in , drysr@ap.gov.in

3. அறநிலையத்துறை அமைச்சர், ஆந்திரப்பிரதேசம் – ஸ்ரீமான் M சத்யநாராயணா – endo@ap.gov.in

உலகம் முழுவதுமுள்ள ஹிந்துக்கள் இக்கடிதத்தை படித்து, தங்களுடைய எதிர்ப்பை மேற்சொன்ன மூன்று பெரியவர்களுக்கும் அனுப்புமாறு தனிப்பட்ட முறையில் வேண்டிக்கொள்கிறேன். நமது அமைப்புகள் மிகக் கேவலாமாக சீரழிக்கப்பட்டு வருகின்றன. உங்களுடைய கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும் ஹிந்துக் கோயில்களின் மிச்சங்களையாவது காணவேண்டும் என்று விரும்பினால் உங்களுடைய கவலையை வெளிப்படுத்துங்கள். இப்போதே.

முதல்வர் Y ஸாமுவேல் ராஜஸேகர ரெட்டியினால் ஆண்டியாக்கப்படும் அறநிலையத்துறை:

மத ரீதியான காணிக்கைகள்:

எனக்கு நேர்மையான பதிலைச் சொல்லுங்கள். நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியின் கோயிலுக்கோ, அல்லது ஆந்திராவிலுள்ள வேறு ஏதேனும் கோயிலுக்கோ செல்கிறீர்கள். பக்தி மேலீட்டால் உண்டியலில் உங்கள் உழைப்பினால் சம்பாதித்த பணத்தை காணிக்கையாக செலுத்துகிறீர்கள். இச்செயல் உங்களுக்கும், உங்கள் கடவுளுக்குமிடையேயான தனிப்பட்ட, புனிதமான பந்தத்தின் அடையாளம். இறையிடம் வேண்டிக்கொண்டபடி உண்டியலில் உங்களின் வியர்வையின் விளைவை காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள். உங்களில் பலர் இந்தப் பணத்தை பல வேதனைகளுட்ன் சேர்த்திருப்பீர்கள். பட்டினி கிடந்ததால் சேமிக்கப்பட்ட பணமாகக்கூட அது இருக்கலாம். இது உங்களுக்கும், இறைக்கும் ஏற்பட்ட அன்பு உறவின் விளைவு.

மதச்சார்பற்ற பணம்:

உங்கள் கையிலிருந்து உண்டியலுக்கு செல்லும் மத ரீதியான காணிக்கையாக உள்ள இச்செல்வம், கடவுள் ஆராதனைக்கும், கோயிலின் முன்னேற்றத்திற்கும், ஹிந்து ஆன்மீகக் கருதுக்களை மக்கள் அனுபவிப்பதற்காகவும், கோயிலின் அர்ச்சகர்கள் ஆகம ஸாஸ்த்ரங்களின்படி இறை வழிபாடு செய்யவும் பயன்படுமென்று உங்களின் கண்ணை மறைக்கும் பக்தி நம்பவைக்கின்றது. ஆந்திரப்பிரதேச அரசாங்கமும் நீங்கள் மனமுருகி, பூரண சரணாகதியுடன் வழிபடுகின்ற தெய்வத்தின் கோயிலுக்கே, உங்களின் மத நம்பிக்கைகளுக்கே இப்பணத்தை முழுவதும் பயன்படுத்துகின்றது என நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில் உண்டியலில் நீங்கள் செலுத்தும் காணிக்கைக்கு என்ன கதி என்பதுபற்றி ஏதும் அறியாத வேதனை தரும் அறியாமையில் இருக்கிறீர்கள்.

ஒருவேளை காணிக்கை செலுத்துவதும், காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் கோயில் நிர்வாகத்தின் தேவையின்படி கோயிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று நம்புபவர்களில் ஒருவராகவும் நீங்கள் இருக்கலாம். கோயில் நிர்வாகம் அரசாங்கத்தின் அடிமையாகவிருக்கும்வரை இது நடக்காது.

உங்களுடைய வியர்வையின், குருத்ியின் விளைவான இந்த காணிக்கை உங்களுடைய மத நம்பிக்கைகளுக்கே பயன்படுகிறது என்ற நினைப்பை இத்தோடு விட்டுவிடுங்கள். ஏனெனில் உங்களுடைய ‘மத ரீதியான ‘ பணம் உண்டியலுக்குப் போனவுடன், அரசாங்கம் அதை ‘மதச்சார்பற்ற பணமாக ‘ மாற்றிவிடுகிறது. உதாரணமாக சமீபத்தில் தேவஸ்தான போர்ட் (TTD) ஹிந்து பக்தர்களுடைய மதரீதியான பணத்தில் பாதாள சாக்கடை கட்ட செய்திருக்கும் முடிவு. இன்னிலைமை குறித்து உங்களுக்கு எந்த அளவு தெரியும் ?

பதில் சொல்லுங்கள். பாதாள சாக்கடை கட்டுவது அரசாங்கத்தின் வேலையா அல்லது கோயில்களின் வேலையா ?

அல்லது ஹிந்து மத ஸ்தாபனங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத மிருக வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக இப்பணத்தை மாற்றி விட்டிருப்பது அரசாங்கத்தின் வேலையா அல்லது கோயிலின் வேலையா ?

கோயில் கட்டுவதற்கு ரயில்வே நிலத்தை லாலு ப்ரஸாத் யாதவ் வழங்குவாரா ? ஆனால் ஆந்திர அரசாங்கம் TUDA (Tirupati Urban Development Authority) யின் மூலமாக சொத்து மற்றும் பிற வரிகளாக திருப்பதி தேவஸ்தானத்திடமிருந்து சுமார் 6 கோடி ரூபாய்களை பிடுங்கி ஒரு ஈத்கா மைதானத்தை, திருப்பதி தேவஸ்தானம் ரயில்வேக்கு அளித்த நிலத்தில் கட்டவுள்ளது. இது ஈத்கா மைதானத்திற்கு என்பதால் மதச்சார்பற்ற லாலு ப்ரஸாத் யாதவ் இதை எதிர்க்கவில்லை என்பது வெளிப்படை. அனைத்து மதசார்பற்றவர்களும் இந்த ஈத்கா மைதானத்தைக் கட்டி முடிப்பதில் முனைப்பாக உள்ளனர்.

ஒரு ஹிந்து ஒரு கோயிலை ரயில்வே நிலத்தில் கட்ட விரும்பினால் இதே மதச்சர்பற்றவர்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும் ? லாலு ரயில்வே கையகப்படுதிக்கொண்ட இடங்களிலுள்ள கோயில்களையெல்லாம் இடித்துத் தள்ளுமறு உத்தரவிட்டதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது போன்று காணிக்கைகளை அரசாங்க செலவுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து அறநிலையத்துறை அமைச்சர் M. ஸத்யநாரயணா (கிருத்துவப் போக்குள்ள முதலமைசரான YSRக்கு எதிராக) தோல்வியில் முடியப்போகிற ஒரு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்த வட்டாரங்களின் கூற்றுப்படி இவ்வமைச்சர் ஒரு ஹிந்துவாக, நேர்மையாக இருப்பதை விட்டுவிட்டு YSRன் விருப்பப்படி ‘மதிப்புக்குரிய மதசார்பற்றவராக ‘ மாறினால்தான் அவருடைய பதவியைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும். அதாவது இவ்வமைச்சர் கோயில் பணத்தை ‘ஒரு-தெய்வ ‘ வழிபாட்டின்மேல் நம்பிக்கை கொண்ட மதங்களுக்கு செலவு செய்வதை எதிர்க்கக்கூடாது என்பது YSRன் விருப்பம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அறநிலையத்துறை அதிகாரிகள் அத்துறை அமைச்சர் தன் கடமையை செய்யவிடாமல் செயல்படுவதை YSR மிக்க மகிழ்ச்சியுடன் ஊக்குவிப்பதாகத் தகவலறிந்த வட்டங்கள் எனக்கு கூறுகின்றன. ‘யுகாதி புரஸ்கார ‘ விழாவின்போது அறநிலையத்துறை அமைச்சர் YSRஆல் அவமானப்படுத்தப்பட்டு, கூனிக்குறுகி நின்றதை அப்போது அங்கிருந்த மக்கள் அறிவர்.

பத்ராசலத்திலிருக்கும் ராமர் கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலங்கள் ஒரு கிருத்துவ அமைப்பிற்கு (பள்ளிக்கூடம் கட்ட என்று ஒரு காரணம் கூறி) கிருத்துவப் போக்குள்ள YSRஆல் தானமாக்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் ஒரு சர்ச் கட்டப்பட்டு அங்குள்ள ஆதிவாஸிகளை கிருத்துவ மதத்திற்கு மாற்ற இந்நிலம் பயன்படுகிறது. இதனால் வருத்தமடைந்த அமைச்சர் இந்த ராமர் கோயிலில் நடைபெற்ற ராமநவமி விழாவின்போது அறநிலையத்துறை அமைச்சர் என்ற முறையில் தனக்கு வழக்கமாக அளிக்கப்படவிருந்த மரியாதையை மறுத்துவிட்டார்.

கோயில் புணரமைப்பிற்கு இல்லாத பணம், ஈத்கா மைதானம் கட்ட மட்டும் உண்டு:

திருப்பதியில் ஈத்கா மைதானம் கட்ட YSRக்கு 6 கோடி ரூபாய்களைத் திரட்ட முடிந்தது. ஆனால் இதே ஆந்திர தேசத்தில் சிதிலமாகிக்கொண்டிருக்கும் 10,000 கோயில்கள் வருமானமின்றி அழிந்துகொண்டிருக்கின்றன. YSR இந்த பணத்தை அக்கோயில்களுக்குக் கொடுக்கப் போவதில்லை. ஒரு உண்மையான கிருத்துவப்போக்குள்ளவராதலால் இக்கோயில் நிலங்கள் மதமாற்றம் விதைக்கப்படும் நிலங்களாக மாறுவதையே அவர் விரும்புவார்.

ஒரு சர்ச் விதைக்கப்படும். ஐம்பது விதைக்கப்படும். ஆயிரம் விதைக்கப்படும்.

Adventistகளாக உள்ள YSRன் நண்பர்கள் இந்நிலங்களில் சர்ச்சுகளை விதைப்பார்கள். ஒன்று, அப்புறம் ஐம்பது, அப்புறம் ஆயிரங்களில். இந்த adventist நண்பர்களை தனக்குச் சொந்தமான நிலங்களை, மதம் மாறிய 300 பேர்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளும்படி YSR கேட்டுக்கொள்ளவில்லை. போப் பெனடிக்ட் XVII யை விட மதமாற்றத்தில் தீவிரமாகவுள்ள இவரை ஒரு ஹிந்து எங்கனம் நம்ப முடியும் ?

இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் இந்த எல்லாச் செயல்களையும் ஒரு ஹிந்து அடையாளத்தின் பின்னால் மறைந்துகொண்டுதான் YSR செய்துவருகிறார் என்பதே. பலருக்கு இவர் மதம் மாறிய / மறுபிறவியெடுத்த கிருத்துவர் என்பதே தெரியாது.

கிருத்துவ அறுவடைக்குக் கோயில் நிலங்கள்:

கிராமங்களிலும், பிற்படுத்தப்பட்ட இடங்களிலுமுள்ள கோயில்களை திட்டமிட்டு அழிப்பதால் ஹிந்து சமூகத்திலுள்ள தலித்துகளும், ஏனைய பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் பயன்படுத்திவரும் அவர்களுக்கு உரிமையான கோயில்களும், கொள்கைகளும், நம்பிக்கைகளும் சேர்ந்து அழியும் என்பது வெள்ளிடை மலை. ஆன்மீக வறுமைப்படுத்தியபின் இம்மக்களை கிருத்துவத்திற்கு திருப்புவதும், இம்மக்களின் தற்போதைய தெய்வங்களின் மீது வெறுப்பையும், இழிவையும் சமுதாய சேவை, அன்பு என்ற பெயரில் கொண்டு வருவதும் எளிது என்பது கிருத்துவப்போக்குள்ள YSRக்கு நன்கு தெரியும். மிக ரகஸியமான முறையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் Y ஸாமுவேல் ராஜசேகர ரெட்டி இந்த தலித்துகளுக்காக இறைத்தூதர்களை இறக்குமதி செய்வதற்கும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிலுவையை சுமப்பதற்கும் வழி ஏற்படுத்தி வருகிறார். ஏனெனில் மதம் மாறியவர்கள் இந்த ஸாமுவேலுக்கு ஒட்டுப்போடாமல் வேறு யாருக்கு ஓட்டுப் போடப்போகிறார்கள் ? வெட்கம்.

ஹிந்துக்கள் நிர்வாகத்திறமையற்றவர்களா ?

சமீபத்தில் ஏற்பட்ட ‘உக்ராண பொருட்கள் ‘ உடன்பாடு திருப்பதி தேவஸ்தான போர்டில் கிருத்துவர்களின் அதிகாரம் ஏற்பட வழிவகுத்துள்ளது. கேரள ஸிரியன் கிருத்துவரான Dr. செரியனின் அமைப்பு, மற்றும் கிருத்துவ அமைப்புகளான Frontline/Madras Medical Mission உடன் SVIMS (Sri Venkateswara Institute of Medical Sciences) ஏற்படுத்திக்கொண்டுள்ள telemedical ஏற்பாடுகளும் இதற்கு ஒரு சான்று. நாளைக்கு கிருத்துவ தணிக்கையாளர்கள், கிருத்துவ அதிகாரிகள் தங்களுடைய தலையீட்டையும், அதிகாரத்தையும் இக்கோயில்களில் நிலைநாட்டுவார்கள். ஏன் கிருத்துவ பாதிரிகள் வெங்கடாஜலபதியின்முன் ஏசு ஸஹஸ்ரநாமம் பாடுவார்கள். என் பேரக்குழந்தைகள் நாளை வேறு என்னென்ன காண்பார்கள் என்பது யாரும் அறியார்.

இவை மதச்சார்பற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த உதவும். ஏனெனில் YSR போன்ற கிருத்துவப் போக்குள்ளவர்களுக்கு கோயில்கள் பைத்தியங்களின் கூடாரம். ஆனால் சர்ச்சுகளுக்குப் போகிறவர்கள் சமுதாயத்திற்கு பயனுள்ள மனிதர்கள். இவர் எப்படி ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும் ?

மதச்சார்பற்ற காம லீலைகளுக்கு கோயில் சொத்து:

ஆந்திரப் பிரதேச அரசாங்கம் திருப்பதி தேவஸ்தான சொத்தைப் பயன்படுத்தி பல விருந்தினர் மாளிகைகளை நெடுஞ்சாலைகளுக்கருகில் கட்ட முடிவு செய்துள்ளது. இறைவனின் பணத்தில் இம்மாளிகைகளில் மந்திரிகளும், அதிகாரிகளும் தங்களது மங்கைகளுடன் ‘மதச்சார்பற்ற காம லீலைகளில் ‘ ஈடுபடப்போகிறார்கள்.

இதில் இப்பணத்தை காணிக்கையாக செலுத்திய ஹிந்துக்களுக்கு என்ன பயன் ? எதற்காக திருப்பதி கோயில் பணத்தை மைனாரிட்டிகளை குஷிப்படுத்தவும், ஹிந்துக்களுக்கு எந்தப் பலனுமில்லாத திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் ஒருவர் அனுமதிக்க வேண்டும் ? நம்முடைய நம்பிக்கைக்கு ஏற்பட்ட இந்த துரோகங்களைப் பற்றி திருப்பதி தேவஸ்தான சேர்மனும், Page 3 ப்ரமுகருமான T ஸுப்புராம ரெட்டியும், கிருத்துவப் போக்குள்ள YSRம் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள் ?

பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹிந்து ஸ்தாபனங்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களின் மேல் கொள்ளை, கற்பழிப்பு, தாக்குதல்களை நடத்திவரும் YSR முதல், இம்மாபாதகங்களில் ஈடுபட்டுவரும் கடைசி நபர் வரை தகுந்த தண்டனை தரும்படி கலியுகக் கடவுள் கண்ணணை வேண்டிக்கொள்வோம்.

வளமையான கோயில்களை வறுமையாக்குவது பற்றிய பாடங்கள்:

கோயில்களை கொள்ளையரின் கூடாரமாக மாற்ற YSRன் அரசாங்கம் நடத்திவரும் திட்டமிட்ட வேலைகளை இப்போது கவனிப்போம். ஆனால், அதற்கு முன்பாக ஹிந்துக் கோயில்களனைத்தும் அரசாங்க ட்ரஸ்ட்களின் வசமிருப்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். உண்மையில் அரசாங்கங்களுக்கு கோயில்களின் மேல் எந்த உரிமையும் கிடையாது. ஆனால் சற்றே கவனித்தால் ஹிந்து ஸ்தாபனங்கள் மேலும், ஹிந்துக்களின் மேலும் ஆந்திர அரசு நடத்திவரும் சேதம் வெள்ளையர் நடத்திவந்த தாக்குதல்களைவிட மிக மோசமானது என்ற முடிவிற்கு நீங்கள் வருவீர்கள்.

ஆந்திராவில் 3,70,000 ஏக்கர் கோயில் நிலங்கள் உள்ளன. இவற்றில் 1,00,000 ஏக்கர் நிலங்களுக்குக் கூட சரியான ரெக்கார்டுகள் அறநிலயத்துறையிடம் கிடையாது. ஆச்சரியமாக இருக்கிறதா ? ஹிந்து அறநிலயத்துறையில் ஹிந்துக்கள் போர்வையில் ஊடுருவி வரும் கிருத்துவ அதிகாரிகளே இதற்குக் காரணம்.

மொத்தத்தில் கோயில் ட்ரஸ்ட்களிடம் (அரசாங்கங்களிடம்) கோயில் சொத்து பற்றிய சரியான கணக்கு வழக்கு கிடையாது. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ? உங்களுடைய அக்கவுண்டண்ட் உங்களை ஏமாற்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? அவரை வெளியேற்றுவீர்கள். ஆனால் நம்முடைய நம்பிக்கைக்குத் துரோகம் செய்யும் இந்த தர்மகர்த்தாக்களை நாம் என்ன செய்ய போகிறோம் ?

வருடாந்திர பட்ஜெட்டில் இடம்பெறாத அமைச்சகம்:

ஆந்திர அரசாங்க வருடாந்திர வரவு செலவு திட்டத்திலிருந்து ஒரு ரூபாய்கூட ஒதுக்கப்படாத அமைச்சகம் ஹிந்து அறநிலையத் துறை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதனால் அறநிலயத்துறைக்கு அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான பண உதவியும் இல்லை. அப்படியிருந்தும் கோயில்களின் மீது நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட தாக்குதல்களை இத்துறை எங்கனம் செய்ய முடிகிறது ? எங்கனம் இத்துறை கோயில் பணியாளர்கள் போல் உலவிவரும் விரும்பத்தகாத சக்திகளுக்கு சம்பளம் தருகிறது ? பதில் மிக எளிமையானது. ஆலயங்களின் அனைத்து வளங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, திருப்பதி போன்ற பெரிய ஆலயங்களிடமிருந்து 15%ம், சிறிய கோயில்களிடமிருந்து 12%ம் அவற்றின் மொத்த வருமானத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இத்தோடு அனைத்துக் கோயில்களிடமிருந்தும் 3%ம் common-good-fund ஆக வசூலிக்கப்படுகிறது. Common என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் எல்லா விஷயங்களுமே வெறும் ஏமாற்று வேலைகள்தான். அதை நீங்கள் Common minimum programmஇலேயே பார்த்தீர்கள். அரசாங்கம் கோயில் வருமானங்களிலிருந்து பெறப்பட்ட வரவுகள் மட்டுமல்லாது, இந்த பொது நல முதலீடுகளிலும் தன் கைவரிசையைக் காண்பிக்கிறது. இச்செயல்களை முடிவு செய்வது கிருத்துவப்போக்குள்ள முதலமைச்சராகவோ, ஒரு இஸுலாமியராகவோ, கம்யூனிஸ்ட்டாகவோ, ஒரு நாஸ்திகராகவோ, அல்லது ஒரு தேச விரோதக் கும்பலாகவோ இருந்து ஹிந்து ஸ்தாபனங்களை அழித்து, அதன் சாம்பலை வத்திகானிலோ, அல்லது மெக்காவிலோ முன்பொரு நாள் கஜினி முஹம்மது த்வாரகாவிலிருந்த க்ருஷ்ண விக்ரகத்தைத் தூவியது போலத் தூவலாம்.

ஆந்திர அரசு இணையப் பக்கங்களில் இல்லாத அறநிலயத்துறை:

ஆந்திர அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களில் ஹிந்து அறநிலையத் துறை பற்றி எதுவுமில்லாததும், ஆனால் சிறுபான்மையினர் நலம் பற்றிய தகவல் தவறாமல் இடம் பெற்றிருப்பதும் உங்களுக்கு ஆச்சரியத்தை தரலாம். நம் தர்மகர்த்தாக்கள் மிகவும் ரகஸியமாக செயல்படுகிறார்கள். பொது மக்களின் பார்வையிலிருந்து மறைந்து செயல்படுமிவர்கள் நம்பிக்கைக்குரியவர்களா ? அவர்கள் எதற்கு இங்கனம் அஞ்ச வேண்டும் ?

தெரிந்த கிருத்துவர்கள், தெரியாத கிருத்துவர்கள்:

ஆந்திராவை இதுவரை ஆண்ட நாம் அறிந்த கிருத்துவர்கள்:

1. காஸு ப்ரம்மானந்த ரெட்டி

2. N ஜனார்த்தன ரெட்டி

3. Y ஸாமுவேல் ராஜஸேகர ரெட்டி

இம்மூவருடன் ரகஸிய ஆதரவாளர்களாக விளங்கும் சந்திரபாபு நாயுடுக்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவரது அரசாங்கத்தில் அம்பேத்காருக்குப் போட்டியாக மதர் ட்ரேஸாவின் சிலைகள் ஆந்திராவின் மூலை முடுக்கெல்லாம் முளைத்தன. சந்திரபாபுவின் மனைவி (NT ராமாராவின் மகள்) ரகஸியமாகவும், தீவிரமாகவும் கிருத்துவத்தைப் பின்பற்றி வருவதாகவும், Seventh day adventist அமைப்புடன் நெருக்கமிகுந்தவராகவிருப்பதாகவும் உறுதியான தகவல்கள் உள்ளன. இத்துடன் சந்திர பாபு நாயுடுவிற்கு சவூதி அரேபியாவுடன் தொடர்புடைய இறைச்சிக் கூடாரமொன்றின் மீதிருக்கும் தனிப்பட்ட உறவு பற்றிய நம்பிக்கைகள் நெருங்கிய வட்டாரங்களில் காணப்படுவதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கூடங்களிலிருந்து எண்ணற்ற பசுக்களின் இறைச்சி அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இது உண்மையாகவிருப்பின் சந்திர பாபு நாயுடு முதல் ஆளாக விமானத்தைப் பிடித்து வாஜ்பாயிடம் தன்னுடய “பசுவதை தடைச் சட்டத்திற்கான” எதிர்ப்பை வெளிப்படுத்தியது ஆச்சரியப்பட வைக்காது. (அது பிஜேபி ஓரளவு ஹிந்து உணர்வுகளை மதித்து வந்த ஆரம்ப காலகட்டம்.)

புணருத்தாரணத்திற்கு அனுமதியும், ஹிந்துக்களைச் சூழ்ந்த கடன் வலையும்:

தேர்தலில் தோற்றுப்போவதற்கு சில நாட்கள் முன்பு சந்திரபாபு நாயுடு கோயில்களை புணரமைக்க ரூபாய் 75 கோடிகளை ஒதுக்கினார். ஆனால் அறநிலயத்துறையிடம்தான் அரசாங்க வருவாய் ஏதும் இல்லையே. அதனால் அரசாங்கமே இதை நேரடியாக நடத்தியது. பெரும்பாலும் கோயில் விக்கிரகங்கள் நடுத்தெருவிற்கு வந்து இயற்கையின் சீற்றங்களில் சீரழிந்ததுதான் இந்த புணருத்தாரண நடவடிக்கைகளின் விளைவு. இது பொறுக்காத பல பக்தர்கள் அவர்களாகவே புணருத்தாரணக் குழுக்களை அமைத்து அரசாங்கத்திற்கு ஏறத்தாழ ரூபாய் 48 கோடிகள் வரை அளித்தனர். இப்பணத்தைத் திருப்பித் தருவதாக அரசாங்கமும் உறுதியளித்தது. இதுவரை திருப்பித்தரவில்லை. இதனால் பல ஹிந்துக்கள் கடனாளிகளானதுதான் மிச்சம்.

திருப்பதியை மட்டும் கொள்ளையடித்தால் மக்கள் தவறாக நினைத்துக் கொள்வார்கள் என நினைத்து அரசு எல்லா ஹிந்து ஸ்தாபனங்களையும் அதனுடைய திட்டமிட்ட வேட்டைப் பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது. இதை நான் “திட்டமிட்டு சங்கிலித் தொடராய் பரப்பபடும் மதச்சார்பற்ற அழிவுகள்” என அழைக்கிறேன்.

ஸிம்மாச்சலம் நரஸிம்ம ஸ்வாமி – ஆந்திர அரசின் அடுத்த பலிகடா:

அரசாங்கம் இப்போது ஸிம்மாச்சலத்தைக் குறி வைத்துள்ளது. ஸிம்மாச்சலம் நரஸிங்க ஸ்வாமியின் மீது. அவருடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் மீது. இவை ஆந்திராவில் வைஸாக் மாநிலத்தில் உள்ளன. இவற்றில் 1500 முதல் 2000 ஏக்கர் நிலங்களை சம்பந்தமேயில்லாதவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்நிலங்களை யாருக்கு யார் விற்றார்கள் என்கிற தல வரலாறுகளை (!) அதிகாரிகளும், மந்திரிகளும் அழித்துவிட்டனர். ஆயிரக்கணக்கான பங்களாக்களும், வீடுகளும் இந்த ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு விட்டன. இங்கு வசிப்பவர்கள் தாங்கள் 10, 15 வருஷங்களாக இங்கு வாழ்ந்து வருவதாகவும், அரசாங்கம் இந்நிலங்களை பற்றி ஒரு வரையறை ஏற்படுத்தும் பக்ஷத்தில் அரசாங்கம் நிர்ணயிக்கும் பணத்தைத் தரத் தயாரக உள்ளதாகவும் கூறுகின்றனர். தடியெடுத்த அரசாங்கம் தண்டல் செய்யவேண்டியதுதான் பாக்கி.

YSR ஆல் உண்மை சொல்ல முடியுமா ?

இந்நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சர்ச்சுகள், மசூதிகள், அல்லது ஹிந்துக்கள் அல்லாதவர் எண்ணிக்கை பற்றிய உண்மையை அரசு வெளியிட வேண்டும். 1842ல் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி மதராஸ் ப்ரெஸிடென்ஸியில் 847 ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள் இருந்தன. இதே நிலப்பரப்பில் தற்போது ஒரு மில்லியன் (10,00,000) சர்ச்சுகள் உள்ளன என்கிறது தற்போதைய கணக்கெடுப்பு. எங்கிருந்து இந்த ப்ரம்மாண்ட வளர்ச்சிக்கான பணம், மற்றும் நிலங்கள் வெறும் நூற்று சொச்ச ஆண்டுகளுக்குள் வந்தது ?

புதிய கமிட்டி கண்ட நக்ஷத்திரங்களும், டாலர்களும்:

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸிம்ஹாத்ரி நரஸிம்ம ஸ்வாமி கோயில் நிலங்கள் பற்றி கணக்கீடு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி செய்ததெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுடன் வெறும் பேரங்களே. தற்போது YSRன் அரசாங்கம் ஒரு கமிட்டி அமைத்து அதில் சில MLAக்களையும், அதிகாரிகளையும் நியமித்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு ஆதரவாக செயல்பட உத்தரவிட்டுள்ளது. ஒரு சதுர அடிக்கான தொகை நிர்ணயம் இன்னும் பரிசீலனையில் உள்ளது. கட்டிடங்கள் இல்லாத நிலங்கள் விற்கப்படும். இது ரூபாய் 125 கோடிகளை வரவாக வைக்கும். இதில் ரூபாய் 48 கோடிகள் ஏற்கனவே நடைபெற்றுவரும் அரசு பணிகளுக்கு வழங்கப்படும். மீதமுள்ள பணம் ஆந்திர அறநிலயத் துறைக்கு வழங்கப்படும். இப்பணம் ஸிம்ஹாத்ரி கோயிலை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள அனைத்து மத, நம்பிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுவது.

1,00,000 ஏக்கர் கோயில் நிலங்களை விற்க முடிவு செய்துள்ள ஆந்திர அரசு:

ஸிம்ஹாத்ரி கோயில் நிலங்கள் மட்டுமல்லாது, ஆந்திராவிலுள்ள 1,00,000 ஏக்கர் நிலங்களை விற்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இவை பெரும்பாலும் பிரச்சினைக்குரியவைகளாக இருக்கின்றன. அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட MLAக்கள் கொண்ட கமிட்டி இந்நிலங்களின் விலையை நிர்ணயிக்கவுள்ளது. அறநிலையத் துறையிடம் 3,70,000 ஏக்கர் கோயில் நிலங்கள் உள்ளன. இவற்றில் 1,00,00 ஏக்கர் நிலங்களுக்குக் கூட அரசிடம் சரியான ரெக்கார்டுகள் இல்லை. மீதமுள்ள 2,70,000 ஏக்கர் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கிருத்துவ அரசிற்கு ஹிந்து நிலங்களை விற்கும் அதிகாரத்தை யார் தந்தது ?

கிருத்துவப்போக்கினால் நம் பாரம்பரிய நிலங்கள் சீரழிக்கப்படுவது குறித்து ஹிந்து சமுதாயம் ஏன் கவலையில்லாமல் இருக்க வேண்டும் ? பண்டைய காலத்தில் அரசர்களே கோயில்களின் தர்மகர்த்தாக்களாகவிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு வருடமும் கோயிலுக்கு மேலும் நிலங்களை சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டினர். இந்தக்கால அரசர்கள், அதுவும் மறுபிறவியெடுத்த கிருத்துவப்போக்குள்ள YSR போன்ற அரசர்கள் சர்ச்சுக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையாக நம்முடைய கடைசி நரம்பைக்கூட விடாமல் பிடுங்கிக் கொள்வதோடு, நம்மை அக்ஞானிகளாக (pagans) உலகின் முன் அடையாளம் காட்டுகிறார்கள்.

பின்வரும் உண்மைகளை கவனியுங்கள்:

சர்ச் நிலங்களுக்கு இதையே அரசு செய்யுமா ?

1. 10,000 கோயில்கள் விளக்கெரிக்கக் கூட வசதியில்லமல் ஆந்திராவில் சிதிலமடைந்துள்ளன. கடவுளுக்கு ஒரு வேளை அமுதம் படைக்க நாதியில்லை. கோயில் பணியாளர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் சம்பளம் கிடையாது.

2. இந்தியாவில் அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக அதிக நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருப்பது சர்ச்சுதான். இதை ஒழுங்குபடுத்த எந்த அரசிற்கும் துணிவு கிடையாது. இந்நிலங்களை சமூக நீதிக்காக தலித்துகளுக்கோ, நக்ஸல்களுக்கோ, ஹிந்து கோயில்கள், பாடசாலைகள், பள்ளிகள் கட்டுவதற்கோ வழங்குவது பற்றி கனவுகூட காணமுடியாது. தகவலறிந்த வட்டாரங்கள் சொல்வதெல்லாம் கோயில் நிலங்களை அழிக்கும் இவ்வேலை கிருத்துவப் போக்குள்ள YSRன் ஆசிகளுடன் நடைபெறுகிறது என்பதே. “தர்மகர்த்தாக்களாக” இருக்கும் அரசாங்கம், ஹிந்துக்கள் என்றவுடன் திடாரென்று “நில உரிமையாளர்களாக” மாறிவிடுவது சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தவும், வோட்டு வங்கியைக் குறி வைத்துமே.

3. ஒரு பேச்சிற்கு நான் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிப்பதாகவும், ஆந்திர அரசாங்கம் தர்மகர்த்தாவாக என்ன செய்கிறதோ அதையே நானும் செய்வதாகவும் வைத்துக்கொள்வோம். சட்டம் உடனடியாக என் மீது பாய்ந்து என்னுடைய நடவடிக்கைகள் ஏமாற்று வேலை, நம்பிக்கைத் துரோகம் என்று பழித்து, இவற்றைக் கைவிடுமாறு அறிவுறுத்தும்.

ஆந்திர அரசு தன்னை ட்ரஸ்ட்களுக்கான சட்ட அமைப்பைவிட மேம்பட்டதாகக் கருதுவதாகவே முடிவு செய்ய வேண்டியுள்ளது. அரசினால் ஹிந்து அமைப்புகளின்மேல் எல்லாவிதங்களிலும் எதேச்சதிகாரம் செய்ய முடியும். கோயில்களை அரசே நல்ல முறையில் பராமரிக்கும் என்ற ஹிந்து பக்தர்களின் நம்பிக்கை நாசமாகப் போகட்டும்.

ஹிந்து உணர்வுகளை YSR மதிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா ?

YSR போன்ற கிருத்துவப்போக்குள்ளவர்கள் ஹிந்துக்களின் வேதனையை புரிந்துகொள்வார்களா ? இப்படிப்பட்ட மனிதரை திருப்பதி கோயிலில் ஹிந்துக்களுக்கு எதிரானவரில்லை என்ற படிவத்தில் கையெழுத்து வாங்காமல் தேவஸ்தானம் அனுமதித்ததே அவமானகரமானது. அதிலும் மோசமான விஷயம் என்னவென்றால் அக்கோயில் ப்ரம்மோத்ஸவத்திற்கு அனைத்து குடும்பஸ்தர்களும் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்து மரியாதை செய்வது போல செய்யாமல் இவர் தனியாக வந்ததுதான். எனக்குக் கிடைத்த தகவலின்படி அவரது மனைவி ஒரு தீவிர கிருத்துவராதலால், தனது கணவர் அரசியல், பொருளாதார கட்டாயங்களால், ஏழை ஹிந்துக்களை ஏமாற்ற செய்துவரும் நடிப்பை தானும் செய்ய விரும்பாதிருக்கலாம். இத்தகவல் தவறானதாகவும்ிருக்கலாம். ஆனால் அப்பெண்மணி கணவருடன் கோயிலுக்கு வரவில்லை என்பது உண்மை.

ஆந்திர பிரதேச அரசாங்கத்தை ஒரு கிருத்துவப்போக்குள்ளவர் ஆண்டு வருவதையும், அவரது அரசில் ஆயிரக்கணக்கானவர் மதமாற்றம் செய்யப்படுவதையும் ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Sri Y Samuel Rajasekhara Reddy, Chief Minister of Andhra Pradesh:

Residence Address:

8-2-269/S/98, Sagar Society,

Rd # 2, Banjara Hills, Hyderabad

Residence Phone: 040 – 23608010, 23546195, 23545504, 23379133, 23379449

Cell: 984893333

Constituency Address:

D.No. 8-186, Rajareddy Street,

Pulivendla town,

Cuddapa district,

Office Phone: 040 – 23455698, 23455205, 23452933

FAX: 040 – 23454828

Email: cmap@ap.gov.in , cmap@ap.nic.in , drysr@ap.gov.in

And

Sri M Satyanarayana Rao

Minister for Endownments

Government of Andhra Pradesh

Office Address:

Block – J, Floor – 8, Room – 811

Secratariat, Hyderabad, AP.

Office phone: 040-23457113, 23453425

Residence Address:

Building No. 9, (MB)

Kundanbagh

Hyderabad

Residence Phone: 040 – 23414614

Cell: 9849029008, 9848782024

Constituency Address:

H.No. 2.8.125, Mukurrampura,

Karimnagar

Email: min_endo@ap.gov.in

எனக்கும் ஒரு நகலை அனுப்புங்கள்:

setlurbadri@yahoo.co.uk

Or

Svbadri@gmail.com

இக்கடிதத்தை தயவு செய்து உங்களால் முடிந்த அளவு அனைத்து நபர்களுக்கும் அனுப்பி, அவர்களனைவரும் இம்மாபாதகங்களை எதிர்த்து நிற்க செய்யுங்கள். ஹிந்துக்களின் நம்பிக்கையை இந்த தர்மகர்த்தாக்கள் உடைத்தெரிவது குறித்த உங்கள் கோபத்தைத் தெரியப்படுத்துங்கள்.

வணக்கங்களுடன்,

SV பத்ரி.

Series Navigation

ஆனந்த் கணேஷ்

ஆனந்த் கணேஷ்