கடிதம்

This entry is part of 24 in the series 20050520_Issue

குண்டலகேசி


திண்ணையில் விஸ்வாமித்திரர் என்பவர் பெரியார் கண்ணகியை பழிக்கிறார் என்ற ரீதியில் ஒரு கட்டுரை

எழுதியுள்ளார்.ம.பொ.சி. சொன்னார், யாரும் கேட்டறியாத வெங்கடேசன் சொன்னார் என்று எழுதுவதைப் பார்த்தால்

இவருக்கு சொந்த கருத்துகள் எதுவும் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கணவன் மாதக்கணக்காக ஆடல் மகள் வீட்டில் விழுந்து கிடக்கிறான். அவனுக்கு மனைவியின் நினைவே இல்லை.

ஒரு நாள் அவ்ர்களுக்குள் சண்டை வரும்பொழுது அவன் திரும்பி வருகிறான். இந்த மக்கு கண்ணகியும் பிராணநாதா,

நீயே என் தெய்வம் என்று ஏற்றுக்கொள்கிறாள். இந்த காலத்து பெண்ணாக இருந்தால் இந்தா உன் விவாகரத்து நோட்டாஸ் என்று

கொடுத்திருப்பாள். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பெண் அடிமைத்தனத்தை சிலாகிப்பவர்கள் இருப்பதை நினைத்து

வருத்தப்படலாம். 60 வருடங்கள் முன்பு இவர்களை போண்றவர்கள் இன்னும் எப்படியெல்லாம் பெரியாரின்

கருத்துகளை எதிர்த்திருப்பார்கள், அவர் இந்த அடிமை கருத்தாக்கங்களை மாற்ற எவ்வளவு போராடியிருக்க

வேண்டும் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. பெரியாரின் மீது நான் வைத்திருந்த

மதிப்பு முன்னிருந்ததைவிட மேலும் கூடிப்போனது. .

இவர் கட்டுரை எழுதும் (methodology ) முறையைப் பார்ப்போம். இது மிகவும் சுலபம். நான்கைந்து பெரியார்

கட்டுரைகளை எடுத்துக்கொள்வது. அந்த கட்டுரையில் 2000 வார்த்தைகள் இருந்தால் 1997 வார்த்தைகளை

விட்டு விட வேண்டும் மூன்றே மூன்று வார்த்தைகள் போதும். ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷை ‘. விஸ்வாமித்திரருக்கு

தேவையானது இந்த மூன்று வார்த்தைகள்தான். மற்ற 1997 வார்த்தைகளை எழுதினால்தான் பெரியார் என்ன சொல்ல

வருகிறார் , அதன் பின்புலம் என்று தெளிவாக எல்லோருக்கும் புரிந்துவிடுமே! எனக்கு தெரிந்து இப்படி தவறான

அர்த்தம் வருமாறு ஒரு கட்டுரையிலிருந்து எந்த context இல்லாமல் வார்த்தகளை பிடுங்கி எழுதினால்,

பல்கலைக்கழகங்களில் பெரிய கோழி முட்டை கொடுப்பார்கள். படிப்பை விட்டு வெளியே துரத்தியும் விடுவார்கள்.

இதை காப்பிரட் சட்டம் அனுமதிக்கிறாதா என்று தெரியவில்லை.

இவருடைய கட்டுரைகளை நகைச்சுவையாக எண்ணி படித்து வருகிறேன். (திண்ணையில் நகைச்சுவை பகுதி

காலியாக இருக்கிறது. 🙁 ) பரிமளம் சீரியசாக பதில் எழுதிக் கொண்டிருக்கிறர்.

kundalakesi_s@yahoo.com

*

-ஒரு வரி நீக்கப் பட்டுள்ளது

Series Navigation