சென்ற வார தமிழ்க் கதையில் வந்த எழுத்துப் பிழைகள்

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

சி, ஜெயபாரதன், கனடா

அன்புள்ள திண்ணை ஆசிரியர்களுக்கு,

சென்றவாரத் திண்ணையில் (மே 12, 2005) திரு.சி. வைத்தீஸ்வரன் அவர்கள் எழுதிய ‘செண்டுகட்டு ‘ என்னும் கதையைப் படித்ததும், இத்தனை எழுத்துப் பிழைகளுடன் எப்படி ஒரு கதை எழுத முடிந்தது என்னும் ஓர் ஐயப்பாடு எனக்கு எழுந்தது! அந்தக் கதையில் வரிக்கு வரி வரும் அநேக எழுத்துப் பிழைகள் எப்படித் திண்ணையின் கூரிய கண்களைத் தப்பின ? தப்பித் தவறி அறியாமல், தெரியாமல் விழுந்து விடுகின்ற எழுத்துப் பிழைகளை நாம் ஒருவாறு மன்னிக்கலாம். எத்தனைக் கவனமாக எழுத முற்பட்டாலும், ஓரிரு முறைகள் திருப்பிப் படித்தாலும் எப்படியாவது ஓரிரண்டு பிழைகள் என் கட்டுரையிலும் களைபோல முளைத்து விடுகின்றன. திண்ணை ஆசிரியர் அப்பிழைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் அநேக பிழைகளை அனுமதித்து, ஒரு கதையை வெளியிட வேண்டுமா என்பதுதான் என் கேள்வி. அதே கதையை திரு. வைத்தீஸ்வரன் ஆங்கிலத்தில் இத்தனை எழுத்துப் பிழைகளோடு எழுதி அனுப்பத் துணிவாரா ? மேலும் இவ்வித எழுத்துப் பிழைகளோடு உள்ள ஓர் ஆங்கிலக் கதையை எந்த ஆங்கில வார வெளியீடுகளும் பதிப்பிக்குமா ? திண்ணை ஆசிரியர் கண்ணில் படாமல் ஒருவேளை அக்கதை வெளியிடப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தமிழில் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றைப் படைத்துத் திண்ணைக்கு அனுப்புவோர் எழுத்துப் பிழையின்றி, இலக்கணப் பிழையின்றி எழுதுவதில் பெருமைப்பட வேண்டும். ஆனால் வரிக்கு வரி பிழைகள் இருக்குமாயின் அவற்றை ஆசிரியர் திருத்தி எழுத திண்ணை வாய்ப்பளிக்க வேண்டும். ஏராளமான எழுத்துப் பிழைகள் நம் கண்ணைக் குத்தும் ஒரு கதையைத் திண்ணை வார இதழில் படிப்பது தமிழை இழிவு செய்வதுபோல் எனக்குத் தெரிகிறது. இது என் ஆலோசனையே தவிர, மற்றவருக்குப் போதிக்கும் ஓர் அறிவுரை இல்லை. பிழைகளைத் திருத்தும்படிக் கதையை ஆசிரியருக்குத் திண்ணை திருப்பி அனுப்பி யிருந்தால், இனிமையான ஒரு கதை அடுத்துவரும் பதிப்புகளில் வெளிவந்திருக்கும்.

அன்புடன்,

சி, ஜெயபாரதன், கனடா

[jayabarat@tnt21.com (May 19, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி, ஜெயபாரதன்