ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

அரவிந்தன் நீலகண்டன்


திண்ணை ஆசிரியருக்கும்

திரு.விஸ்வாமித்திரா அவர்களின் கடிதத்திற்கான எதிர்வினைகள் எதுவும் அவர் முன்வைக்கும் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பதாக அமையவில்லை மாறாக கூறக்கூடியவரைச் சாடினால் பிரச்சனை முடிந்தது என்பதாக உள்ளது. ஈவெராவின் இரண்டாவது திருமணம் அடுத்ததாக சில வசைகளை கிளப்புமே ஒழிய உருப்படியாக எந்த பதிலும் வரப்போவதில்லை. திக விற்கு பணம் இருக்கிறதாம் ஆனால் அவர்களுக்கு பதில் சொல்ல நேரமில்லை போலும். ஈவெராவின் அடிப்படையான இனவாத -இனவெறுப்பு பிரச்சாரம் பகுத்தறிவின் குறைந்த பட்ச சாயல் கூட இல்லாதது. அதுவே இன்றைக்கும் தொடர்கிறது. பகுத்தறிவு முலாம் பூசிய ஈவெராவின் இன்றைய சீடகோடிகள் -அ.மார்க்ஸ் உட்பட- இந்த போலிகள் எவ்வித நாணமுமின்றி பரிணாம எதிர்ப்புவாத அமைப்புகளுடன் மேடையை பகிரும் இலட்சணத்திலேயே தெளிவாகிறது ஈவெரா இயக்கபகுத்தறிவின் கீழ்த்தர இயற்கை. விஸ்வாமித்திரா சோவை பாராட்டினால் அது பார்ப்பனீய சார்பு என்பது சரியல்ல. சோ எவ்வித அருவெறுப்பான தூண்டலுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் ஒரு பத்திரிகையை நடத்தி வந்துள்ளார் என்பதே ஒரு கர்மயோகியின் சாதனைதான். ஹிந்துத்வ பார்வையிலிருந்து சோவின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு என்ற போதிலும் திரு. சோவின் தைரியம் அசாதாரணமானது. துக்ளக்கின் மீது திமுக காலத்திலும் அஇஅதிமுக நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் எதிர்கொண்ட விதம் அபரிமிதமானது. இன்றைக்கும் அவர் கருணாநிதியையோ அல்லது இன்னபிற ‘திராவிட ‘ தலைவர்களையோ தரம் தாழ்ந்து தாக்கியது கிடையாது. இதே வார்த்தைகளை ‘திராவிட ‘ மேடைகளிலிருந்து சோவை நோக்கி கூறப்பட்ட தாக்குதல்களுக்கு கூறமுடியாது. நிச்சயமாக தமிழக கூட்டுப்பிரக்ஞையில் ஒரு முக்கிய உன்னத பகுதியினை சோவிற்கு அளித்தேயாக வேண்டும். இதை கூற ஒருவர் பிறப்பால் அந்தணராக இருக்க வேண்டியதில்லை. திரு.விஸ்வாமித்திரரின் தைரியமான கருத்து பங்களிப்புகளுக்கு நன்றி.

அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்