நபிகள் நாயகம் – ஜைனப் மணம் : சலாஹுதீனுக்குச் சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

நேச குமார்


சென்ற வார திண்ணை இதழில் [1] , சலாஹுதீன் என்பவர் நான் , நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் குறிப்பிட்டிருந்தது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில், நான் குறிப்பிட்டிருந்ததற்கு ஆதாரம் கேட்டிருந்தார். மேலும் ஹதீஸுகள் என்றால் என்னவென்று விவரித்து, ஹதீஸ்களில் இப்படிப் பட்ட சம்பவம் குறிப்பிடவே இல்லையென்றும், நான் இச்சம்பவம் ஹதீஸ் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே காணக் கிடைக்கின்றன என்று எந்த அடிப்படையில் சொல்லியிருக்கிறேன் என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இவற்றுக்கு விளக்கம் அளிக்கு முன்னர், மீண்டும் எனது நிலைப்பாட்டை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். என்னை எதிர்கொண்டு ஆதாரங்கள் கேட்பதாலேயே, இவற்றை இங்கு முன்வைக்கின்றேனே தவிர, நபிகள் நாயகத்தின் திருமணம், தனிப்பட்ட பாலியல் வாழ்க்கை, ஆசாபாசங்கள் ஆகியவற்றை இங்கு ஆய்வதோ எனது நோக்கமல்ல. மீண்டும் மீண்டும் வரும் கேள்விகளுக்கு, விருப்பமில்லாமலேயே பதிலளிக்கிறேன். ஏனெனில், இவற்றுக்கு பதிலளிக்காமல் மெளனம் காத்தால், என்னை நோக்கி வரும் கேள்விகள் நியாயமானவையாக தோற்றமளித்துவிடும் அபாயம் மட்டுமல்லாது, என்னையும் ஆதாரம் இல்லாததால் பதிலளிக்க மறுக்கிறார் என்று குற்றம் சாட்ட வாய்ப்புள்ளது. இக்காரணங்களினால் மட்டுமே, கீழ்க்காணும் எனது விளக்கத்தை அளிக்க விரும்புகின்றேன்.

(நேசகுமார் அனுப்பிய கடிதத்தின் முழு வடிவம் நேசகுமாரின் கீழ்க்கண்ட வலைப் பதிவுகளில் கிடைக்கும். விவாதத்தைத் தொடர விரும்புவோர் , நேசகுமாரின் வலைப்பதிவில் தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம்.- திண்ணை குழு)

  • நேச குமார் வலைப்பதிவு – 1

  • நேச குமார் வலைப்பதிவு – 2

    Series Navigation

  • நேச குமார்

    நேச குமார்