கடிதம் ஜனவரி 20 ,2005

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

விசிதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

வணக்கம்.

திரு.ஞாநி அவர்கள் கட்டுரை மீது நான் விமர்சனம் வைத்தது உண்மை.அதை கருத்து குறித்த

விவாதமாகவே நான் கருதினேன், இப்போதும் அவ்வாறே கருதுகிறேன். அவர் எழுதியதன் மீது எனக்கு கருத்து முரண் மட்டுமே உண்டு, அதில் பிராமண துவேஷத்தினையோ அல்லது தனி நபர் வெறுப்பையோ நான் காணவில்லை.

தாரா அவர்கள் வலைப்பதிவிலும் ஞாநியின் கருத்துக்கள் மீது விமர்சனம் இருக்கிறது. http://siragugal.blogspot.com/2004/12/vs.html

உங்கள் அறிவிப்பில் ஒரு பக்கத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.எம்.எஸ். ஐயர்

மாமியாக இருந்தார் என்றுதான் நானும் எழுதியிருக்கிறேன்.தாரா எழுதியுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த இன்னொரு பக்கத்தினையும் உங்களது,வாசகர்கள் கவனித்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

எனவே நான் ஞாநியுடன் முரண்படும் இடங்களை மட்டும் முன்னிறுத்துவது சரியல்ல.விவாதத்தினை ஒட்டு மொத்தமாக புரிந்துகொள்ள வேண்டும். திரு.ஞாநி சம்ஸ்கிருதமயமாக்கல் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நான் எழுதியுள்ளேன். தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் என்று நான் எழுதவில்லை. அவர் கொடுத்த விளக்கம் ஏன் ஏற்புடையதல்ல என்பதையே நான் எழுதியிருக்கிறேன். அவர் தரப்பிலிருந்து நான் எழுதியது சரியல்ல என்றோ அல்லது நான் எழுதியதை அவர் மறுக்கிறார் என்றோ பதில் வராத போது நானாக எதையாவது அனுமானித்துக் கொண்டு எழுத முடியாது.

திரு.அரவிந்தன் நீலகண்டன் சம்ஸ்கிருதமயமாக்கல் குறித்து எழுதியிருக்கிறார்.அதன் மீதும் எனக்கு விமர்சனம் உண்டு. நான் எழுதியதின் மீது விவாதம் கருத்து ரீதியாகவே நடைபெறும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அது தனி நபர் தாக்குதலாக இருக்க இடமளிக்க மாட்டோம் என்று திண்ணை ஆசிரியர் குழு உறுதி அளித்தால் அது குறித்து நான் எழுத இயலும்.

திரு.ஞாநி அவர்கள் எம்.எஸ், இளையராஜா குறித்து எழுதியதை ஒரு பரந்த பிண்ணனியில்தான் நான் புரிந்து கொள்கிறேன். இது தொடர்புடைய வேறு சிலவற்றையும் என்னால் குறிப்பிட முடியும். இன்று புனிதப் பசுக்கள் என்று எதுவும் இல்லை. ருக்மிணி தேவி ,சத்யஜித் ரே உட்பட பல கலைஞர்களின் பங்களிப்பும், அவர்கள் முன்வைத்த அழகியலும் விவாதிக்கப்படுகின்றன. அஞ்சலிக் குறிப்புகள் வெற்றுப் புகழாரங்களாக இருக்க வேண்டும் என்பது திண்ணை ஆசிரியர் குழுவினரின் எதிர்பார்ப்பெனில் அதை தெரிவித்துவிடல் நலம். திரு.ஞாநி தன் கருத்துக்களை விரிவாக முன் வைத்தால்தான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாகும். அவர் விரிவாக எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

திரு.மாயவரத்தான் எழுதியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது -மனதில் தோன்றும் எண்ணம் ஒன்றாகவும்,அதை எழுத நினைக்கும் போது அது வேறொன்றாகவும், எழுத்தில் இன்னொன்றகாகவும் வெளிப்படுவது.

தெளிவாக எழுதும் நிலை வரும் வரை அவர் எழுதுவதை தவிர்ப்பது நல்லது.

விசிதா

i consider myself as a cyborg.so please dont address me as ms. or miss. or mrs. as a cyborg i inhabitate in borders,cross boundaries,and challenge your binary thinking and categories like male-female,mind-body,reason-passion etc.

http://wichitatamil.blogspot.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

விசிதா

விசிதா