ஓவியர்களின் உலகம் அழைக்கிறது – ஜனவரி 25 ,2005

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

அறிவிப்பு


அதிசயமும் அன்பும் கொண்டு இந்த உலகினை ஒருசில சமயங்களில்தான் நம்மால் கவனிக்க முடியும்.

ஓவியங்களின் வாழ்க்கையும் ஓவியர்களின் வாழ்க்கையும் ஒருவிதத்தில் அப்படிப்பட்டதாகத் தோன்றுகிறது. தேசிய அளவில் புகழ்பெற்ற ஓவியக்கண்காட்சியில் ப்ங்கு பெற்றவரும், மலேசியா போன்ற

நாடுகளில் தனது ஓவியம் பங்குபெறச்செய்தவருமான கோவிந்தன் வீட்டிற்கு வந்து

பத்த்ிரிகை ஒன்றை நீட்டியபோது ஆச்சரியமானேன். 1982ல் ஓவியக்கல்லூரியில் சென்னையில்

ஒரே வகுப்பில் படித்தவர்கள் 2005ல் சந்திக்கிறார்கள் – 22 ஆண்டுகளுக்க்குப்பின்!

அதுவும் தங்கள் முகச்சந்திப்போடு நிறுத்திக்கொள்ளாமல் ஓவியப்படைப்பையும் பொதுமக்கள்

பார்வைக்கு விருந்து என வைக்கப்போகிறார்கள்- அந்த ஒன்பது ஓவியர்கள் m.p.பாலசுப்ரமணியம்,

v.தட்சிணாமூர்த்தி, திமோதி திலக்குமார், s.வடிவேல், v.ஜாலி, a.ஜேம்ஸ் மாணிக்கம், m.மதிவாணன்,n.k.ராதாமணாளன், k.கோவிந்தன்.( இத்துடன் இணைப்பில் கோவிந்தனின்

ஓவியச்சாறு பார்வை ருசிக்கு )

எங்கே என்று அறிய ஆவலாக இருப்பவர்கள் க்ரீம்ஸ் ரோடில் இருக்கும் லலித்கலா அகாதமி, சென்னை -5 சென்று காண்பார்கள். 20.1.05 முதல்

25..01.05 வரையில் நடைபெறுகிறது. நிதமும் காலை 11 முதல் மாலை 7 வரை.

— பா.சத்தியமோகன்

கோவிந்தனின் இரு ஓவியங்கள்

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு