கடிதம் ஜனவரி 6,2005

This entry is part of 57 in the series 20050106_Issue

ராதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

திரு.அரவிந்தன் நீலகண்டன் தான் எழுதியது தகவல் பிழை என்று சாதிக்கிறார்.அவர் கூறும் காரணங்கள்

ஏற்புடையதாக இல்லை.மார்க்சியத்தினை வெறுப்பவர் எப்படி சோவியத் மார்சியர் தரும் சான்றுகளை ஏற்றார், அதுவும் அவை பிரச்சாரம் என்று தெரிந்தும். மேலும் இது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருக்கையில் ஒருவரின் கவனத்திற்கு இரண்டு தரப்பு வாதங்களும் வந்திருக்கும். அதில் ஒன்றை ஒருவர்

உண்மை என்று நம்பினாலும் கூட இன்னொரு கருத்து இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதோ அல்லது

மாறுபட்ட கருத்துக்களை ஏற்காமல் அவை என்ன என்று கூறுவதும் உண்டு. இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் போது ஒருவர் ஒன்றை ஏற்று, இன்னொன்றை நிராகரித்தால் அதற்கான காரணங்களை குறிப்பிடுவதுதானே முறை. அப்படி ஏதாவது ஒன்றை அவர் முன் வைத்துள்ளாரா. இல்லையே.

டாகின் ? எழுதியதை இவர் படிக்கவில்லை என்றால், மாறுபட்ட கருத்துக்கள் இவர் கவனத்திற்கு வரவேயில்லை என்றால் அவர் இது குறித்து ஆராயாமல், அறியாமல் எழுதியிருக்கிறார் என்று கொள்ள முடியும்.

ஆம் நான் இந்த வி ?யத்தில் போதுமான பின் தகவல்கள், படிப்பு இன்றி இதை எழுதினேன் என்று

ஒப்புக்கொள்வாரா அவர். மேலும் தகவல் பிழை என்பதை அறியாமல் ஒரு தகவலாக இதை சிலர் கொடுத்திருக்க முடியும். அங்கு உள் நோக்கம் ஏதும் இருந்திருக்க வேண்டியதில்லை.கவனக்குறைவு கூட

காரணமாயிருக்கலாம்.

ஆனால் இங்கு நீலகண்டன் ஒரு தகவல் என்ற அளவில் மட்டும் இதைத் தரவில்லை. இது எதற்கோ கட்டியம் கூறுவது போல் அமைந்தது என்று கூறுகிறார். இப்படி யாராவது எழுதியிருக்கிறார்களா, சோவியத் மார்க்சியர் இவ்வாறு கூறியிருக்கிறார்களா. ஆம் என்றால் அதற்கு சான்று காட்ட முடியுமா.

மார்க் ?,மார்க்சியத்தின் மீதான வெறுப்பு காரணமாக தொடர்பிருக்கிறதோ இல்லையோ மார்க் ?,மார்க்சியம்

குறித்து ஒரு வி ?ம பிரச்சாரத்தை தகவல் என்ற பெயரில் தர விரும்பியதன் விளைவு அவர் இவ்வாறு எழுதியது. மேலும் இதை யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற அபார நம்பிக்கை. இவ்வாறு தொடர்ந்து எழுதினால் வாசகர்கள் மார்க்சியம் டார்வினின் கருத்துக்களையும், பரிணாம வாதத்தினையும் மரபணுவியலையும் நிரகாரித்தது, அவற்றிற்கு மார்க்சியம், மார்க்சியர்கள் எதிரிகள் என்று நம்பி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு. இவைதான் அவரை இவ்வாறு எழுத வைத்தன என்று நான் நம்புகிறேன். இதே தகவலை இனி அவர் இது போல் பயன்படுத்த முடியாது.ஆனால் வேறு தகவல்கள் முளைக்கக் கூடும்.

ஒருவர் சாலையில் போகிற போக்கில் கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்து விட்டு, என்னை ஏன்

குற்றம் சொல்கிறீர்கள், யாரோ கல்லை சாலையில் போட்டால் அதை என் கை எடுத்து எறிந்தால்

பிழை சாலையில் போட்டவர்கள் மீது, நான் தெரியாமல் பயன்படுத்திவிட்டேன் என்பது போலுள்ளது

அவர் வாதம். இங்கே எறிந்தவர் தலையில் அவர் எறிந்த கல் விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி

இருக்கிறது அவர் நிலை. கையின் குற்றமா கல்லின் குற்றமா இல்லை கல்லை போட்டிவிட்டுப் போனவரின்

குற்றமா என்று கேள்வி எழுப்பினாலும் தலையில் கல் விழுந்தது விழுந்ததுதானே, பட்ட காயம் காயம்தானே.

வணக்கத்துடன்

ராதா

—-

radha100@rediffmail.com

Series Navigation