கடிதம் ஜனவரி 6,2005

This entry is part of 57 in the series 20050106_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

1, சூசன் சொண்டாக் மறைவு குறித்து எழுத நினைத்தேன். எழுதும் மனநிலையில் அப்போது இல்லை. பினான்ஷியல் டைம்ஸ் உட்பட பல தினசரிகளில் விரிவான அஞ்சல் குறிப்புகள் வந்துள்ளன. அவர் எழுதி 2003ல் வெளியான ஒரு நூல் குறித்து நான் 2003 ஜூலையில் திண்ணையில் வெகு சுருக்கமாக எழுதியிருக்கிறேன். http://www.thinnai.com/pl0710035.html

அந்நூல் இன்று அன்றை விட இன்னும் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.

2, தமிழன்பன் நல்ல கவிதைகள் எழுதியுள்ளாரா , அவர் எழுதியுள்ளவை அப்பரிசுக்குத் தகுதியானவையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜெயமோகன் ஒரு விமர்சகரே அல்ல என்று நான் கருதுவதால் அவர்

வாதத்தினை ஏற்கத் தயங்குவேன். பால் சக்காரியாவின் கதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். ஒரு சில தவிர பிற என்னை கவரவில்லை. ஒருவேளை அவரது மோசமான கதைகள்தான் மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றனவோ ? அறிவுஜீவித்தனமான உத்திகள், பார்முலாக்கள் அவர் கதைகளில் இருக்கின்றன. சில உத்திகளையும், எழுத்துவகைகளையும் கேள்விப்பட்டிராதவர்களுக்கு அவை

பிரமாதமாகத் தோன்றலாம். காலச்சுவட்டில் வெளியாகும் கட்டுரைகள் பாடாவதியாக உள்ளன. எனவே ஜெயமோகன் போல் என்னால் அவர் எழுத்துக்களை புகழமுடியாது. சீரோ டிகிரி நாவலை அவர், அதாவது சக்காரியா வெகுவாக

புகழ்ந்துள்ளதாக சாரு நிவேதிதா எழுதியுள்ளார். அந்நாவல் குறித்த சக்காரியாவின் கருத்துக்களை ஜெயமோகன் ஏற்கிறாரா.

3, அரவிந்தன் நீலகண்டன் பதில் சிரிப்பினை வரவழைக்கிறது. டார்வின் எழுதியுள்ள கடிதத்திற்கும், இவர்

முன்வைக்கும் கருத்து அல்லது கருதுகோள் அதாவது அது இவற்றிற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது

என்பதற்கும் ஏதாவது தர்க்க ரீதியான தொடர்பு இருக்கிறதா ?. இது இவரது சொந்தப் புளுகா இல்லை

இதற்கும் ஏதாவது சான்றுகள், ஆதாரங்கள் (பிரச்சாரமாக இருந்தாலும் கூட) உண்டா ?. இங்கு மரபணுவியல் எங்கிருந்து வந்தது. இக்கடிதத்தில் அந்த வார்த்தையே இல்லையே. இதன் பெயர்தான்

‘தீர்க்கதரிசனம் ‘ என்பதோ ?.

இப்படி ஒருவர் எந்தத் தொடர்புமின்றி ஒரு தகவலை அதுவும் பொய் என்று நிரூபிக்கப்பட்ட தகவலை பயன்படுத்துவார் என்றால் அவரது அறிவார்ந்த நேர்மை எப்படிப்பட்டது என்பதை நான் இன்னும் விளக்கவும் வேண்டுமா ? டார்வின் கடிதத்தில் டார்வின் கூறும் காரணங்களை இப்படி ஒருவர் வியாக்கினப்படுத்த முடியும் என்றால் அங்கு வெளிப்படுவது ஒரு ஆழ்வெறுப்பே. மூர்க்கத்தனமான வெறுப்புக் கொண்ட ஒருவரால்தான் அதை இப்படி வியாக்கியனப்படுத்தி எந்த தர்க்கரீதியான காரணங்களுமற்ற ஒரு கருத்தினை அல்லது கருதுகோளை முன் வைக்க முடியும். ஆம் நான் மார்க்ஸ், மார்க்ஸியத்தையும் வெறுக்கிறேன், அதற்காக எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன், எதையும் எப்படியும் சான்றாக பயன்படுத்த முயல்வேன் என்று அவர் திண்னையில் வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாம்.அந்த வெளிப்படையான நேர்மையை

அவரிடமிருந்து எதிர்பார்க்கலாமா ?

தன்னைப் பற்றி சுலேகா தளத்தில் அவர் கூறிக்கொள்வது aravindan neelakandan writes. he writes about science, philosophy and society. he is an irritant to abrahamic expansionist fundamentalists of Christianity Islam and Marxism he loves being their irritant

http://www.sulekha.com/network/dp.aspx ?profileid=aravindan.%20s.neelakandan

எனவே அவரது எழுத்துக்களை அவை மார்க்சியம்,இஸ்லாம் மற்றும் கிறித்துவம் குறித்த விமர்சன,

விஷமபிரச்சாரமாக உள்ள போது மார்க்சிய,இஸ்லாமிய மற்றும் கிறித்துவ எதிர்ப்புக் கருத்துக்கள் என்ற

தலைப்பில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். அவர் எழுதுவதில் மிகப் பெரும்பானமையானவை அவ்வாறே உள்ளதால் இப்படித் தனித்தலைப்பில் வெளியிடுவது குறித்து திண்ணை ஆசிரியர் குழு பரிசீலிக்கலாம்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

http://ravisrinivas.blogspot.com/

Series Navigation