கடிதம் டிசம்பர் 23, 2004

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

சூர்யா


நேசக்குமாரின் குறிப்புகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட தொனி இவ்வாரக் கட்டுரையில் உள்ளது.ஆகவே இதை எழுதுகிறேன்.

1. முகமது அவர்களின் வாழ்க்கையே முஸ்லீம்கள் மட்டுமல்லாது மானுட குலம் அனைத்தும் பின்பற்றவேண்டிய உன்னத உதாரணம் என்று நாகூர் ரூமி போன்ற அடிபப்டைவாதிகள் வாதிட்டு நூல்களை எழுதும்போது முகமதுவின் வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் ஆராயவேண்டிய ஆர்வம் மட்டுமல்லாது பொறுப்பும் பிறருக்கு வந்துவிடுகிறது. இதைத்தான் நேசகுமார் செய்கிறார். ஆனால் முகம்மதை உலகம் முழுமைக்குமான உதாரணமாக முன்வைப்பவர்கள் அவர்மீதான விமரிசனங்களை மத அவமதிப்பாக எடுத்துக் கொண்டு கோபம் கொள்கிறார்கள். நேசகுமார் இக்கட்டுரைகளை தன் அசல்பேரில் விலாசத்துடன் எழுதமுடியும் என்று எவரும் சொல்லமுடியாது . இக்கட்டுரைகளை அச்சில் நூலாக எந்த பதிப்பகமும் இன்று வெளியிடத் துணியாது. காரணம் அவர்கள் மீது கடுமையான நேரடிவன்முறையைக் கட்டாயம் எதிர்பார்க்கலாம்.

2. இதை தவிர்க்க ஒரு வழி உள்ளது. இக்கட்டுரைகளை ஒரு சிறு குறிப்பாக கிழக்கு பதிப்பகம் வெளியிடலாம். திரு பத்ரி சேஷாத்ரி மற்றும் திரு பா ரகவ்ன் ஆகியோருக்கு இத ஒரு விண்ணப்பமாக முன்வைக்கிறேன். அவர்களின் நூலுக்கு எதிர்வினையாக உருவான நூல் இது. மிக நல்லெண்ணத்துடன் நிதானமான மொழியுடன் பொறுப்பான ஆய்வுமன்நிலையுடன் எழுதப்பட்டது. ஜனநாய்கரீதியாப்பார்த்தால் இதை நூலாக வெளியிடவேண்டிய கடமையே அவர்களுக்கு உள்ளது. நூலும் மிக சிறியதே

3. அப்படி செய்வது கிழக்குபதிப்பகத்தின் நோக்கத்தை என்னைப்போன்றவர்கள் ஐயப்ப்டுவதில் இருந்து அவர்களைக் காக்கும். இன்று தமிழ்நாட்டுச் சூழலில் உள்ள மத அடிப்படைவாதத்தைக் காசாக்கும் நோக்கம் மட்டுமே கிழ்க்கு பதிப்பகத்துக்கு உள்ளது என்ற ஐயம் களையப்படும்

4. வேறு எவரும் இதை நூலாக்க மாட்டார்கள். அஞ்சுவார்கள். கிழக்கு பதிப்பகத்தார் ஏற்கனவே ரூமியின் நூலை வெளியிட்டிருப்பதனால் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சமாதானப்படுத்துவது எளிது.

5. தமிழில் மானுடவசந்தம் என்று டிவியிலும் ஏறத்தாழ 20 இதழ்கள் மூலம் அச்சிலும் கடுமையான இஸ்லாமிய ஆதரவு– பரப்பு பிரச்சாரம் நடக்கிறது. அப்பிரச்சாரமே ரூமியின் நூலிலும் உள்ளது. ஆனால் இப்பிரச்சாரத்தின் மறுபக்கத்தைக் காட்டும் ஒரு நூல் கூட எழுதப்படவில்லை. எதையெல்லாமோ கட்டுடைக்கும் நாம் , நமது அறிவுஜீவிகள் அப்பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. காரணம் உயிரச்சமே. விவாதம் மூலமே உண்மை உருவாக முடியும்.ஆனால் இங்கே வன்முறை மூலம் அச்சுறுத்தப்பட்டு விவாதம் தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒருதரப்பு பேச்சுக்கு அர்த்தமே இல்லை.இனியும் ஒரு நூல் வரும் என நான் எண்ணவில்லை. ஒரே வாய்ப்பு நேசகுமாரின் நூலை தங்கள் நேர்மையை நிரூபிக்கும் பொருட்டாவது பத்ரி சேஷாத்ரி மற்றும் பா ராகவன் வெளியிடக்கூடும் என்பதே. அதை மிகவும் எதிர்பார்க்கிறேன்

சூரியா

suurayaa@rediffmail.com

Series Navigation

சூர்யா

சூர்யா