கடிதம்

This entry is part of 50 in the series 20041202_Issue

மு. சுந்தரமூர்த்தி


குஞ்ஞாலிக்குட்டி விவகாரத்தை சளைக்காமல் அவதானித்து மிகவும் ஆர்வத்தோடு தொடர்கதையாக எழுதிவரும் மத்தளராயன் (எ) இரா.மு. ஜெயேந்திர சரஸ்வதி விவகாரத்தில் தமிழ்நாட்டு மீடியாவின் செயல்பாடுகளைப் பார்த்து சலித்துக்கொள்கிறார். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் பரபரப்பூட்டுவதில்லை. கேரளத் தொலைக்காட்சிப் பார்வையளர்களுக்கும் குஞ்ஞாலிக்குட்டி. தமிழ்நாடுத் தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு ஜெ. சரஸ்வதி. அவரவருக்கு அருகில் நடக்கும் நாடகங்களைத் தானே ரசிக்க முடியும் ? ‘குஞ்ஞாலிக்குட்டியின் வேதனை ‘ யை ரசிக்கும் மத்தளராயன் ‘ஜெயேந்திரர் சோதனை ‘யைக் கண்டு மனம் வெதும்புவதைப் புரிந்துகொள்ள சிரமப்படவேண்டியதில்லை. நம் சமூகத்தில் இரட்டை நியாயம் பேசுவது சர்வசாதாரணமாக நிகழக்கூடியதுதான். இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல.

மு. சுந்தரமூர்த்தி

munirathinam_ayyasamy@yahoo.com

**

திண்ணைகுழு குறிப்பு:

தலைப்பு திண்ணைகுழு கொடுத்தது

Series Navigation