கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

வரதன்


தற்போதைய கேள்வி இரண்டு வகைப்படுகிறது.

1. சுந்தரராமன் கொலையில் குற்றாவாளி யார்… ? ரகு, ஜீனியர். சங்கராச்சாரியார் இவர்களா இல்லையா… ?

2. பெரியவருக்கு இதில் எந்த அளவு பங்கு உண்டு.. ?

இந்த இரண்டும் அல்லாமல்,

ஏதோ, ஜெயேந்தரர் தான் தனியாளாக நின்று அப்பு, குப்பு, சுப்புக்களுடன் சேர்ந்து சுந்தரராமனைக் கொன்று விட்டார், என்ற கோணத்தில் மட்டுமே வழக்கு முன்னேறுகிறது.

இதில் , நீதிமன்ற வேலையை காவல் துறை எடுத்துக் கொண்டது மிகப் பெரிய தவறு.

காவல்துறை ஏன், ரகுவைக் கைது செய்து போலீஸ்காவலில் விசாரிக்கவில்லை… ?

ஜீனியர் சங்கராச்சாரியாரியாரை கைது செய்யாதது ஏன்… ?

எழுதித் தரப்பட்ட திரைக்கதை அரங்கேறுகிறதோ… ? எனும் எண்ணம் தான் வருகிறது.

—-

நீதிபதியின் ஒரு நிலைப்பாடு புரியவில்லை.

ஆதாரம் உள்ளது என்று போலீஸ் சொன்னால் ஏன் அதை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க சொல்லவில்லை.

மேலும், ஜெயேந்திரரின் சமூக நிலைப்பாடு காரணமாக , ஆதாரம் இருந்தால், தினமும் வழக்கை நடத்த வேண்டியது தானே… ?

ஏன், போலீஸ் காவல் மற்றும் தள்ளிவைப்பு காட்சிகள்.. ?

பலம் நிறைந்தவர் என்று நினைத்த சங்கராச்சாரியருக்கே இந்த நிலைமை என்றால் தமக்கு என்னாகும் என்ற கூலிப்படையின் பயமா… ?

—-

நமக்கு தேவை சில கேள்விகள் சில சிந்தனைகள்.. ?

கேள்வி 1:

தனது முதல் நிலைப்பாட்டை சற்று மாற்றி, சங்கராச்சாரியார் மீது தனிப்பட்ட பழிவாங்கல் நடக்கிறது என்று கருணாநிதி தற்போது சொல்வது ஏன்… ?

நமது சிந்தனை: கருணாநிதிக்கு செய்தி தருவதற்கு எல்லா மட்டத்திலும் ஆள் உண்டு என்பதனாலும், கருணாநிதி எந்தக் காலத்திலும் இந்துமத மற்றும் சங்கராச்சாரியார்களுக்கு ஆதரவாக நின்றது இல்லாததால் நிச்சயம் இந்தக் கூற்றில் முழு உண்மை இருக்கும்.

கருணாநிதியின் இந்தக் கூற்றுக்குப் பிறகாவது சங்கராச்சாரியர் கைது செய்தி கேட்டு பீர் குடித்து பிதற்றிய / எழுதிய சில இந்துமத விரோதிகள் தற்போதாவது கலைஞர் பாதையில் சங்கராச்சாரியர் வழக்கு செல்லும் விதத்திற்கு கண்டணம் தெரிவிக்கட்டும்.

கருணாநிதியின் வாதத்தை நிரூபிப்பது போல் நீதிமன்றத்தில் கதிரவன்& கோ தற்போது தங்களைக் காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கி வாக்குமூலம் வாங்கியதாக தற்போது சொல்வது.

மேலும், இதற்கு வலு சேர்ப்பது போல், விஜெயெந்திரர், ரகுவை காவல்துறை தொடாமல் இருப்பது.

—-

கேள்வி 3:

தமிழகத்தில் கூலிப்படை அராஜகம் அதிமாகிப் போன நிலையில் சங்கராச்சாரியார் மீதான வழக்கு தராசு எந்தப் பக்கமும் சாயாமல் நடக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.

சிந்தனை: சங்கராச்சாரியார் வழக்கு வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும். காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட வேண்டும்.

—-

சங்கராச்சாரியார் வழக்கில் ஏதோ ஜெயலலிதா வெறும் பழி வாங்கும் செயலாக மட்டுமே செயல்படுகிறார் என்பது போல், இந்து அமைப்புகள், அண்ணாநகர் முதல் அமெரிக்கா வரை தங்களின் எதிர்ப்பைக் காட்டுகின்றன.

அவர்கள் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் பழிவாங்கும் பங்கு இதில் சிறு சதவிகிதம் இருக்கிறது. அதற்காக சங்கரமடம் ஒழுக்கமாக இருந்தது என்பது ஒத்துக் கொள்ள முடியாதது.

ஜெயெந்திரர் நடத்தப்படும் விதம் தான் மிகப் பெரும் கண்டணத்துக்குரியதே தவிர, சங்கரமடத்தின் கொலைப்பாதகச் செயல் பற்றிய வழக்கு எந்த விதத்திலும் தவறல்ல.

தவிர, கைது செய்யப்பட வேண்டிய ரகுவும், ஜீனியரும் உலா வருவது பிரச்சனையின் தன்மையைக் காட்டுகிறது. அதனால் ரகு மற்றும் விஜேயெந்திரரை விசாரிக்கச் சொல்லியும் போராடுங்கள்.

சங்கரமடத்தின் மீதான சந்தேகம் தீர்ந்தால் தான் இந்து மதத்திற்கு நல்லது.

தயவு செய்து, கண்மூடித்தனமாகச் சப்பைக்கட்டு கட்டாதீர்கள்.

அதுபோல் தான் இந்தத் தமிழ் அமைப்புக்களும்.

முகலாயர், பிரிட்டிஷார் காலத்தில் தமிழைக் காத்தது ஆன்மீகம் தான். அதை மறந்து ஜெயேந்திரர் விஷயத்தில் மெளனம் சாதிப்பது அவர்களின் தமிழ் தாண்டிய ஜாதிய நிலைப்பாட்டையே காண்பிக்கிறது.

—-

தலித் அமைப்பு திருமாவளவன், கிருஷ்ணசாமி அவர்களுக்கு, ஜெயேந்திரர் ஜாதி விஷயத்தில் காலகாலமாக இருந்த நிலைப்பாட்டை மாற்றியவர். அவர் மீதான வரைமுறையற்ற துஷ்பிரயோகத்தை தடுக்க வேண்டியது உங்கள் கடமை.

சம உரிமை என்பதை கடை பிடித்த ஜெயேந்திரரைக் காக்காவிட்டால், மடம் ஜாதி வெறியர்கள் கையில் போய் விடும்.

ஜெயேந்திரர் வழக்கால் மடம் செல்வாக்கு இழந்து விடும் என்று நினைத்தால் தோல்வி தான். ஜாதி வெறியர்கள் ஜெயேந்திரரை காவு கொடுத்து விடுவார்கள்.

—-

ஜெயலலிதா சங்கரராமன் குடும்பத்திற்கு அரசுப் பணம் தந்தது தவறு. சங்கரராமன் மிரட்டி காசுப் பறித்தாரா என்பது பற்றிய விசாரணை வேண்டும்.

—-

நிச்சயம் வழக்கின் திசை மாறும்.

ரகு, விஜேந்திரர் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள்.

ஜெயேந்திரர் நிலை மாறுவார்.

காத்திருப்போம்.

—-

ஜெயலலிதா இது மாதிரி சமூகத்தின் பல நிலைகளிலும் உள்ள பெரிய மனிதர்கள்/ அமைப்புக்கள் போர்த்தியிருக்கும் வேஷத்தைக் கலைக்க வேண்டும். அவரால் மட்டுமே அது முடியும். அவருக்கு பெருத்த ஆதரவு மக்களிடமும் அனைத்து கட்சிகளிடமும் அதற்கு உண்டு.

—-

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்