கடிதம் நவம்பர் 25,2004

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

விஸ்வாமித்ரா


சென்ற சில வாரங்களாக திரு.நேசகுமார், ரூமியின் புத்தகத்தை விமர்சித்தும், இஸ்லாம் குறித்தான உண்மையான தகவல்களையும் பற்றி எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். அதே புத்தகம் குறித்தான திரு.சூர்யா எழுதிய விமர்சனத்தையும் படித்தேன். முதலில், நேச குமாருக்கும், சூர்யா இருவருக்கும் எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையைத் தயங்காமல், அச்சப்படாமல், தெளிவாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து வைத்தைமைக்காக எனது பாராட்டுதல்கள். ரூமி ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதையும், ரூமி எவ்வாறு ‘இஸ்லாம் அன்பை மட்டுமே போதிக்கிறது ‘ என்று எழுதுவது, உண்மைகளைத் திரித்து காண்பிக்க முயலும் ஒரு பித்தலாட்டம், ஒரு மாய்மாலம் என்பதை நீரூபித்தமைக்காக எனது நன்றிகள்.

முதலில் ரூமி குறித்து சில கருத்துக்கள். ரூமி ஒரு தெளிவான இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாமியத் தீவீரவாதத்தை பொய்யில் குழைத்து, தமிழில் வழங்கும் ஒரு போலி அறிவு ஜீவி. இதை நான் ஏற்கனவே திண்ணையில் ஆதாரங்களுடன் நிறுவி இருக்கிறேன். இஸ்லாமின் குறைகளை மறைத்து, பொய், புரட்டல்களை சேர்த்து அது அமைதியைப் போதிக்கும் ஒரு மதம் என்று பம்மாத்து செய்யும் ஒரு எழுத்துத் தீவீரவாதி. இஸ்லாமின் தீவீரவாதக் கொள்கைகளை மறைத்து, அதைப் போலியாக உயர்த்தி எழுதும் அதே நேரத்தில், ரூமி இந்து மதக் கடவுள்களை கேவலமாக சித்தரிக்கத் தவறியதில்லை. இந்து மதக் கடவுள்களுக்குச் செருப்பு மாலை அணிவித்த ஈ வே ரா என்னும் போலி சீர்திருத்தவாதியை தலையில் தூக்கி வைத்து ஆடியவர்தான் இந்த ரூமி. இந்து மதத்தை எதிர்த்த ஒரே காரணத்துக்காக இவருக்கு ஈ வே ராவும், கருணாநிதியும், அண்ணாத்துரையும் போற்றிப் புகழ் வேண்டியவர்களாகி விடுகிறார்கள். அதே நேரத்தில் சல்மான் ருஷ்டி, நாயைப் போன்று அடித்துக் கொல்லப் பட வேண்டிய ஒரு அயோக்கியனாக இவருக்குத் தோன்றுகிறார். இப்படிப் பட்ட ஒரு கபட வேடதாரி, ஒரு ஹிப்போக்ரைட், ஒரு மதத் தீவீரவாதி எப்படிப் பட்ட ஒரு புத்தகத்தை எழுதியிருப்பார் என்பதை படிக்காமலேயே சொல்லி விட முடியும். இவரது பெண்ணடிமை வாதங்களும், பிற மதத் துவேஷங்களும் பல முறை திண்ணையிலும் பிற இணைய தளங்களிலும் நிரூபிக்கப் பட்டவையே. இவர் எழுதிய புத்தகத்தில் எந்த அளவிற்கு ஏமாற்று வேலைகள் இருக்கும் என்ப

தற்கு நீரூபணம் தேவையில்லை. ரஷ்டி குறித்த இவரது ஒரு கருத்து ஒன்றே போதும் எவ்வளவு தூரம் இவரது எண்ணங்கள் வன்முறையில் ஊறிக் கிடக்கின்றன என்பதை நீரூபிக்க.

அப்படியாகப் பட்ட ரூமி, திருப்பூர் கிருஷ்ணன் போன்ற தரமான எழுத்தாளர்களை துணைக்கழைத்துக் கொண்டு கண்ணியத்தைப் பற்றிப் பேசுகின்றார். கண்ணியத்தைப் பற்றி பேச இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? என்ன அருகதை இருக்கிறது ? ஜெயமோகன் கருணாநிதியை ஒரு இலக்கியவாதி இல்லை என்று சொல்லிய ஒரே குற்றத்திற்காக இதே ரூமி, ஜெயமோகனை தரம் தாழ்ந்து வசை பாடியவர்தானே ? ஜெயமோகனுக்குப் பண்பாடு தெரியாது என்று கேவலமாக திட்டியவர்தானே இந்த ரூமி ? ஜெயமோகன் எழுதிய விஷ்ணு புரத்தை ஒரு குப்பை என்று படிக்காமலேயே மேதாவித்தனமாக கருத்துக் கூறியவர்தானே இந்த கண்ணியவான் ? அப்படி என்ன கண்யக் குறைவாக நேசகுமார் எழுதி விட்டார் ? மரியாதை குறைந்த ஒரு வரியையையாவது அவரது எழுத்தில் இந்த ரூமியால் காண்பிக்க முடியுமா ? நேச குமாரின் தர்க்க ரீதியான வாதங்களுக்குப் பதில் வழங்காமல், சொற்களின் சீனச் சுவர்களுக்குப் பின்னே பதுங்கிக் கொண்டு, தரங்கெட்ட முறையில் தாக்கி வருகிறார். தனக்குப் பதில் தெரியவில்லை என்றோ, நிஜமாகவே இஸ்லாமில் குறைபாடுகள் பல உள்ளன என்று ஒத்துக் கொண்டோ போயிருந்தால் அது தான் கண்ணியமான செயலாக இருந்திருக்கும். இவரெல்லாம் கண்யத்தைப் பற்றிப் பேசுவது ,கண்ணாடி வீட்டிற்குள்ளில் இருந்து கல்லை வீசியிருக்கிறார். ஜெயமோகன் எழுதியதைப் படிக்காமலேயே விமர்சித்த ரூமி கண்யவானாம், இவர் எழுதிய புத்தகத்தைப் படித்து விட்டு ஆதாரத்துடன், மரியாதை குறையாமல், மிக அமைதியான முறையில் பொறுப்

பான வாதங்கள் எடுத்து வைத்துள்ள நேசகுமாருக்கு கண்ணியம் கிடையாதாம், சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டாம் ? நேசகுமார் ஆணித்தரமான ஆதாரங்களுடன் எடுத்து வைத்த தர்க்க ரீதியான கேள்விகளுக்கு புத்தகத்தை எழுதியவர் என்ற முறையில் பதில் கூறாததால், நேர்மையான எந்த ஒரு விவாதத்தையும் எதிர் கொள்ளாத போக்கிலிருந்தே இவர் புத்தகத்தின் தராதரமும் இவர் தூக்கி வைத்துக் கொண்டாடும் தத்துவங்களின் கோர முகங்களும் உண்மை என்பது தெள்ளத் தெளிவாகி விட்டன. இவர் ஒரு புத்தகம் எழுதுவாராம், அதுதான் உலகத்தவர் எல்லாம் உய்ய வழி செய்யும் மதக் கருத்துக்களைக் கூறுகிறது என்று, இவரும் அதைப் பதிப்பித்தவரும் புகழ்ந்து கொள்வார்களாம், ஆனால் அதை யாராவது விமர்சித்து விட்டால் பதில் மட்டும் கூறமாட்டாராம், ஏனெனில் இவர் எழுதுவதை யாராவது அலசி, ஆராய்ந்து விமர்சித்து விட்டால் கண்யக் குறைவாகி விடுமாம். தான் எழுதியது, சத்யம் என்று உண்மையிலேயே நம்புவராக இருப்பின் விதண்டாவாதம் செய்யாமல், பதில்களை அளித்திருக்க வேண்டும். பொய்யும், புனைசுருட்டும் பண்ணுபவர்கள் மட்டுமே இப்படி சிறுபிள்ளை போல் குற்றம் சாட்டி விட்டு ஓடி ஒளிவார்கள்.

இவர் புத்தகத்தை வெளியிட்ட பத்ரி என்பவரின் வக்காலத்து: இந்தப் புத்தகத்தை வெளியிட்டதிலும், அதன் விற்பனை குறித்தும் அவருக்கு வியாபார ரீதியான எதிர்பார்ப்புகள் பல இருக்கலாம். ஆனால் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வரும் கவிதைகளுக்கும் குரானில் வரும் தீவீரவாத, வன்முறையான வசனங்களையும் ஒப்பிடும் அளவிற்குப் புத்தி வக்கரித்துப் போயிருக்கிறது. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஒரு பக்தி இலக்கியம் மட்டுமே, ஒரு பஜனைப் பாடலைப் போன்றது, அது வேதம் அல்ல. அதில் உள்ள ஒரு பாடலை எடுத்துக் கொண்டு இந்து மதமே வன்முறையைப் போதிக்கிறது என்று கூறுவாராயின் அது அவரது அறியாமையைக் காண்பிக்கின்றதா அல்லது தன் நிறுவனம் வெளியிட்ட ஒரு மதத்தீவீரவாதப் புத்தகத்தை, தன் மதத்தை இகழ்ந்தாவது தூக்கிப் பிடித்து முற்போக்குக் காவலர் எனும் பேர் வாங்கத் துடிக்கும் போக்கைக் காட்டுகிறதா என்பது தெரியவில்லை. இவர் ஒரு வைணவர்தானே ? இவரோ, இவர் தந்தையோ, என்றக்காவது பிரபந்தத்தைப் படித்து விட்டுக் கத்தியைத் தூக்கியிருக்கிறார்களா ? அல்லது பிரபந்தத்தைப் படித்த வேறு யாராவது, இத்தனை நூற்றாண்டுகளில்., கையில் கத்தியையும் ,வெடிகுண்டுகளையும் தூக்கிக் கொண்டு அலைந்திருக்கிறார்களா ? பிரபந்தப் பாடலைப் படித்து விட்டு,அதில் சொல்லியிருக்கிறது என்று நம்பிக்கொண்டு, வன்முறையில் ஈடுபட்ட, சித்ரவதையில் ஈடுபட்ட, விமானக் கடத்தலில் ஈடுபட்ட, பாராளுமன்றத்தைத் தாக்கிய, பச்சிளம் பாலகர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற ஒருவரையாவது பத்

ரி காண்பிக்க முடியுமா ? தன்னை, எங்கே ‘பிராமணன் ‘ என்று சொல்லி முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில், தன்னை ஒரு முற்போக்கு வாதியாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற பதட்டத்தில் போடும் போலி வேடத்தின் காரணமாக இவர் இது போல் இன்னும் பல அபத்தங்களை அள்ளி வீசி வருகிறார். இவர் சமீப காலமாகவே தனது வலைப்பதிவில் தேசத்தின் இறையாண்மைக்குப் எதிரான பல கருத்துக்களை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஜின்னா புகழ் பாடும் ரூமிக்கு இவர் வக்காலத்து வாங்குவதில் ஏதும் வியப்பொன்றுமில்லைதான். இவரிடம் இருந்து இது போன்ற பிதற்றலான கருத்துக்கள் வருவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ருஷ்டி விஷ்யத்தில் தன் மத வெறியை சற்றும் வெட்கப் படாமல், வெளிப்படுத்திய ரூமியை ஆதரிப்பதிலிருந்தே பத்ரியின் உள்நோக்கம் தெளிவாகப் புரிகிறது. யோக்கியமான பதிப்பாளர் என்ன செய்திருக்க வேண்டும் ? ஒரு முறையான விமர்சனமும், எதிர்வினையும் வைக்கப் படும் பொழுது அதை மதித்து, தனது எழுத்தாளரை முறையான பதில்களை அளித்து, விவாதத்தை நேர்மையான முறையில் எதிர் கொள்ள அழைத்திருக்க வேண்டும். இந்தியா பல்வேறு மாநிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு கொடுமைகளில் ஈடுபடுகிறது என்று கட்டுரை எழுதும், இந்தப் பதிப்பாளர் என்ன செய்கிறார், பிரபந்தத்தில் இல்லையா வன்முறை என்று விதண்டாவாதம் புரிகிறார். பிரபந்தமும், குரானும் ஒன்றா ? ஆழ்வார் பாசுரங்களை இங்கு யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம், கேள்வி எழுப்

பலாம் ? ஆண்டாளும் பெரியாழ்வார்தான் என்று வியாக்கியானம் புரியலாம், அது போன்று எந்த ஒரு முஸ்லீமாவது குரான் குறித்து விமர்சனம் செய்து விட்டு உயிர் வாழ்ந்து விட முடியுமா ? வான் கோ வின் கதி என்னாவாயிற்று ? ரஷ்டிக்கு இவர் ஆதரிக்கும் ரூமியே மரண தண்டனை விதிக்கிறாரே ? குரான் ஒரு வேத நூல், பிரபந்தம் ஒரு பக்தி பாடல்களின் தொகுப்பு. குரானை கண்மூடித்தனமாகப் பின்பற்றி, கொலைகளையும், சித்ரவதைகளையும் செய்கிறார்கள். பிரபந்தத்தை மார்கழி மாதம் பாடி, பொங்கல் சாப்பிட்டு விட்டு மறந்து போய் விடுகிறார்கள். செக்குக்கும் சிவலிஙத்துக்கும் நிஜமாகவே வித்யாசம் தெரியவில்லையா அல்லது தெரியாதது போல் நடிக்கிறாரா பத்ரி ?

காலத்துக்கொவ்வாத வன்முறைப் போதனைகளை பின்பற்றுவதின் காரணமாகவே உலகத்தில் இன்று நிகழும் அனைத்து மத ரீதியான கொலைகளும், பெண்ணடிமைத்தனங்களும், கொடூரங்களும், கொள்ளைகளும் நிகழ்கின்றன என்பதை தக்க ஆதாரங்களுடன் எடுத்து வைத்திருக்கின்றன நேசகுமார் அவர்களின் நியாயமான, தர்க்க ரீதியான விவாதங்கள். அவற்றுக்கு பதிலுரைக்காமல் மிரட்டுவதும், பன்றிகள் என்று ஏசுவதும் இவர்களின் தராதரத்தையும், மனநிலையையுமே காட்டுகின்றன. முறையான பதில் அளிக்க இயலாமையின் காரணமாகவே இது போன்ற கீழ்த்தரமான தூற்றல்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் புரிகின்றன. அது போன்ற கீழ்த்தரமான முயற்சிகளில் ஒன்றே, பிரபந்தத்தைத் துணைக்கழைக்கும் அரை வேக்காட்டுத் தனமான எழுத்துக்களும். இன்று உலகத்தில் நிகழும் தீவீரவாதச் செயல்களை செயல்படுத்துகிற முஸ்லீம்களே. அதற்கு இஸ்லாமையே துணைக்கழைக்கின்றனர். அதைத் தவறு என்று உணராமலேயே, கண்மூடித்தனமாக அந்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதும், அதைச் சரி என்று வாதிடுவதும், அவற்றில் உள்ள குறைகளையும், நோக்கங்களையும் மறைத்து மாய்மாலங்கள் செய்து புத்தகங்கள் போடுவதும், அதற்கு ஒரு சிலர் இந்து மதத்தை இகழ்ந்து வக்காலத்து வாங்குவதும் நாகரீகமானவர்களின் செயல்பாடுகளாகத் தெரியவில்லை. காலத்துக்கு ஒவ்வாத வன்முறைப் போதனைகளை தொடர்ந்து பின்பற்றுவார்களேயாயின் இந்த உலகம் பிற்போக்கான கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள் ஒரு புறமாகவும், அவர்களது செயல்களால் பாதிக்கப் பட்டு அவர்களைக்

கண்டால் அச்சமுறும் பிறமதத்தினர் இன்னொரு புறமாகவும் பிரிந்து ஒரு பெரிய உலகப் போருக்கு அடிகோலிட்டு விடும். ஆனால் அது போன்ற பிற்போக்குத் தனமான மூட நம்பிக்கைகளிலிருந்து கல்வியறிவில்லாதவர்களை விடுவிக்க வேண்டிய ரூமியைப் போன்ற படித்தவர்களே இது போன்று மத வெறியைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபடுவது, ரூமி, பத்ரி போன்றவர்களின் செயல்பாடுகள் மீதும், எழுத்துக்கள் மீதும். மேலும், மேலும் அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.

இஸ்லாமின் உண்மை முகத்தைத் துகிலுரித்துக் காட்டிய நேசகுமார், சூர்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

விஸ்வாமித்ரா

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா