கடிதம் நவம்பர் 18,2004

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

ஏகலைவன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

சோதிப் பிரகாசம், விஷ்ணுபுரம் நாவலில் ஜெயமோகன் இந்துத்துவத்தை கேலி செய்துள்ளதாக எழுதியுள்ளார். அந்நாவலை இந்துத்துவப் பிரதி என விமர்சித்தவர்கள் எல்லாம் சோதிப்பிரகாசம் அளவுக்கு அறிஞர்கள் அல்லர். மார்க்சிய அறிஞரான சோதிப்பிரகாசம் விஷ்ணுபுரம் நாவல் தொடர்பாக தன் ஆய்வை திண்ணையில் எழுதலாமே ? நானும் தான் மார்க்சிய நூல்கள் படித்துள்ளேன். விஷ்ணுபுரம் நாவல் இந்துத்துவம் மீதான விமர்சனமாக எனக்குப் படவில்லையே ? மார்க்சியப் பேரறிஞர் சோதிப்பிரகாசம் அவர்களிடம் நானும் மார்க்சிய இயங்கியல் கல்வி படிக்க விரும்புகிறேன். எனக்கு கற்றுத் தருவாரா ? அ. மார்க்ஸ், இந்துத்துவத்துடன் சமரசம் செந்த இலக்கியவாதிகள் பட்டியலில் சோதிப்பிரகாசத்தையும் சேர்த்துவிடப் போகிறார். சோதிப் பிரகாசம், தோப்பில் முஹமது மீரானின் கதைகளைப் படித்ததில்லையா ? அவைகளில் பல சிறுகதைகள், நாவல்கள் முஸ்லிம்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை விமர்சித்து எழுதப் பட்டவை தானே ?

அரவிந்தன் நீலகண்டன் ஹாருண் யஹ்யாவின் பரினாம வளர்ச்சி தொடர்பான கட்டுரையை விமர்சித்து எழுதியுள்ளார். அவர் இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி, ஹாருண் யஹ்யாவின் இணையத் தளத்திற்கு அனுப்ப வேண்டும். ஹாருண் யஹ்யா பதில் அனுப்பினால், அதனை திண்ணையில் ஆங்கிலத்திலேயே வெளியிடலாம்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியை ஆதரித்து, இந்து முண்ணணி, ஆர் எஸ் எஸ் காரர்கள் நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர்களையும், காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இவர்களை தமிழ் நாடு அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆர். எஸ். எஸ், இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி, தமிழ் நாடு சிவசேனா ஆகிய அமைப்புகளை தமிழ் நாடு முதல் அமைச்சர் தடைசெய்ய வேண்டும்.

அன்புடன்

ஏகலைவன்

—-

egalaivan@netscape.net

Series Navigation

ஏகலைவன்

ஏகலைவன்

கடிதம் நவம்பர் 18,2004

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற தண்டனைகள் எந்த நாட்டில் கடைபிடிக்க்ப்பட்டாலும், எந்த மத சிந்தனையின் கீழ் நியாயப்படுத்தப்பட்டாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவைதான். இது போல் இந்தியாவில் பஞ்சாயத்துக்கள் , ஜாதி மற்றும் ஊர் பஞ்சாயத்துக்கள் தரும் தீர்ப்புகள் கொடுரமாக உள்ளன. இவையும் கண்டிக்கப்பட வேண்டியவைதான். நாகூர் ரூமியின் நூலினை நான் படிக்கவில்லை.ரூமி திண்ணையிலும், வேறு சிலவற்றிலும் எழுதியிருப்பதன் அடிப்படையில் பார்க்கும் போது அவரை ஒரு conservative என்றுதான் கருத முடிகிறது, fundamentalist ஆக அல்ல. மேலும் அவர் வலைப்பதிவில் இந்த தண்டனைக் குறித்து ஒரு நீண்ட பதிவினை இட்டுள்ளார். அதுவும் அவரை ஒரு கன்சர்வேடிவ் ஆக காட்டுகிறது.மிகவும் தயங்கியே சிலவற்றை முன் வைப்பது அதில் தெரிகிறது. எடுத்த எடுப்பில் கசையடி போன்ற தண்டனைகள் காட்டுமிராண்டித்தனமானவை என்று அவரால் கூற முடியவில்லை. அவர் எழுதியுள்ள நூலினைப் படிக்காமல் அது குறித்து நான் ஒன்றும் சொல்வதாக இல்லை. நானறிந்த வரையில் ரூமி தீவிரவாதத்தினையோ அல்லது வன்முறையினையோ ஆதரித்து எழுதியதில்லை. ஆனால் அரவிந்தன் நீலகண்டன குஜராத் கலவரம் குறித்து எழுதியது திண்ணையில் தெளிவாக இருக்கிறது. இது குறித்து சூர்யா விமர்சித்திருக்கிறாரா. அப்படியிருக்கும் போது ரூமியைப் பற்றி இவ்வாறு எழுதுவது ஏன். உண்மையான நடுநிலையாளர் என்றால் அரவிந்தன் நீலகண்டன் கருத்தினையும் விமர்சித்திருக்க வேண்டும். இன்று ஹிந்த்துவ ஆதரவு என்பதை நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாக அதை ஆதரிக்கும் போக்கு இருக்கிறது. இடதுசாரிகளையும், கிறி ?துவர்களையும், இஸ்லாமியரையும் விமர்சிப்பது என்ற பெயரில் ஹிந்த்துவவாதிகள் சொன்னதை வேறு வார்த்தைகளில் சொல்வதுதான் அது. ஜெயமோகனும்,சூர்யாவும் அதைத்தான் செய்கிறார்கள்.

இன்னும் எத்தனை நாள்தான் அரவிந்தன் நீலகண்டன் இப்படி எழுதிக்கொண்டிருப்பார். அவர் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் செய்த மோசடிதான் திண்னையில் வெளிப்படையாக மூலத்துடன் உள்ளதே. அப்படி இருக்கும் போது இன்னார் இதை இப்படி திரித்து விட்டார், இன்னார் இந்த மேற்கோளை இப்படி காட்டிவிட்டார் என்றெல்லாம் எழுதினால் அவர் செய்த மோசடி இல்லை என்றாகிவிடுமா அறிவியல் கண்ணோட்டத்தில் கீதையை ஆய்ந்து அதில் அறிவியலின் அடிப்படையில் எவை தேறும், எவை தேறாது என்று அவர் முதலில் சொல்லட்டும்.

முஸ்லீம் பெண்கள் நிலை குறித்து காட்டப்படும் அக்கறை காரணமாக அனைத்து நாடுகளிலும் முஸ்லீம் பெண்களுக்கு உரிமையே இல்லை, உலகெங்கும் முஸ்லீம் பெண்கள் ஒரே மாதிரியான சட்டங்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற கருத்தினை முன் வைக்கக் கூடாது. மாறாக ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், பெண்ணிய அமைப்புகள் பல மாற்றங்களை முன்னிறுத்தியிருப்பதையும், மனித உரிமை,சமத்துவம் குறித்து அவை காட்டும் அக்கறையையும், அவை எதிர்நோக்கும் சவால்களையும் கருத்தில்

கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன்.இது குறித்து மேலும் அறிய

http://www.wluml.org

அண்மையில் ஷிரீன் எபேதி எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ஈரானில் உள்ள பல்கலைகழக மாணவர்களில் 63% பெண்கள் என்றும், சம்பளத்திற்கு வேலை செய்வோரில் 43% பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். http://www.nytimes.com/2004/11/16/opinion/16ebadi.html

ஆனால் திண்ணையில் மிகப் பெரும்பான்மையான சமயங்களில் இ ?லாமும், பெண்களும் குறித்த ஒரு அறிவுபூர்வமான விவாதத்திற்கு பதிலாக ஒற்றைப் பார்வையினையே முன்னிறுத்தும் கடிதங்களும், கட்டுரைகளும் படிக்கக் கிடைக்கின்றன. இப்போக்கு மாறினால் நல்லது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

—-

k.ravisrinivas@gmail.com

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்