கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

அரவிந்தன் நீலகண்டன்


திருவாளர்.பித்தன் ‘வீர சாவர்க்கர் கோழை ‘ என்று கூறுவதைப்போல மடத்தனமானது வேறெதுவுமில்லை. வீர சாவர்க்கர் மீது பிரச்சார ரீதியில் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆவண ரீதியில் அளிக்கப்பட்டப் பதில்களை எவ்விதத்திலும் எதிர்த்து பதிலளிக்க இயலாத கருத்தியல் கோழை ஆசாமியாக வெளிப்படும் திருவாளர்.பித்தன் வீர சாவர்க்கர் போன்ற ஒரு மேதை மற்றும் தியாகியை ‘கோழை கோழை ‘ எனக் கூக்குரலிடுவது அற்பத்திலும் அற்பமான கோழைத்தனம். நேதாஜி வீர சாவர்க்கரிடம் ஏமாந்தாராம். வீர சாவர்க்கர் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்த பின்நரும் அவர் அந்தமான் சிறையில் பிரிட்டிஷ் எதிர்ப்பு இலக்கியங்களை வைத்திருந்தமைக்காக அவர் தண்டிக்கப்பட்டதை இவரால் மறுக்கவோ அல்லது விளக்கவோ முடிகிறதா ? இல்லை. வருட அந்தமான் சிறைவாசத்திற்கு பிறகு ‘அரசியலில் ஈடுபட்டால் மீண்டும் சிறைவாசம் ‘ எனும் எச்சரிக்கையோடு விடுவிக்கப்பட்ட பின்னரும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இவரால் மறுக்கமுடிகிறதா ? இல்லை. நேதாஜி பாரதத்திலிருந்து மறைவதற்கு முன் (1941) இறுதியாக சந்தித்த தலைவர் வீர சாவர்க்கர்தான் என்பதை இவரால் மறுக்கமுடியுமா ? ஜப்பானில் ஆசாத் ஹிந்த் பவுஜை நேதாஜி உருவாக்க காரணமாக இருந்த ராஷ் பிகாரி போஸ் ஹிந்து மகாசபை தலைவர் என்பதையோ நேதாஜி பாரதத்திலிருந்து மறைவதற்கு முன் அவருடன் வீர சாவர்க்கர் பலமுறை கடிதங்களில் தொடர்பு கொண்டிருந்ததையோ பின்னர் நேதாஜி சிங்கப்பூரில் இருந்து நிகழ்த்திய வானொலி உரையில் வீர சாவர்க்கருக்கு நன்றி தெரிவித்ததையோ பித்தனால் மறுக்க முடிந்ததா ? இல்லை. ஆனாலும் கருத்தியல் கோழையும், வரலாற்று ஞான சூனியமுமான இந்த பிரகிருதி ஊளையிடுகிறார், ‘சாவர்க்கர் கோழை ‘ என்று. அந்தமானில் 1930களில் ஐந்துவருடம் கழித்த ஒருவர் 1910களிலிருந்து பத்து வருடங்களுக்கும் மேலாக தண்டனை பெற்றவரைக் குறித்து குறை கூறுகிறார். பித்தனுக்கு அது ஏதோ வீர சாவர்க்கருடனேயே இருந்தவர்கள் வீர சாவர்க்கரை குறித்து கூறியதாக கூறத் தோன்றுகிறது. வீர சாவர்க்கருடன் சிறைவாசம் அனுபவித்த உபேந்திரநாத் பானர்ஜி எவ்வாறு வீர சாவர்க்கரின் வார்த்தைகளே அந்த கடினச்சூழலிலும் தம் உயிரைக் காப்பாற்றியது என்பதைக் கூறியுள்ளார். அவருட சிறைவாசம் அனுபவித்த பிற அரசியல் புரட்சியாளர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் மூன்று வருடங்கள் வீர சாவர்க்கர் அந்தமானிலேயே வைக்கப்பட்டிருந்தார் என்பதுதான் உண்மை. கலிலியோ விஷயத்திற்கு வருவோமா ? ஜூன் 21, 1633 அன்று கலிலியோ கத்தோலிக்க இக்விசிஷன் முன் மண்டியிட்டு ‘நான் என் தவறுதலான சபிக்கப்பட்ட கோட்பாடுகளை முழுமையாக மறுதலிக்கிறேன் ‘ எனக் கூறினார். மாறாக, பல வானவியலாளர்கள் அவருடைய காலத்திலேயே தம்மை எரித்துக்கொண்டாலும் தம் கோட்பாடுகள் தவறென அறிக்கையிட முன்வரவில்லை. இச்சூழலில் கலிலியோ செய்தது கோழைத்தனமா அல்லது சாணக்கிய சாதுர்யமா ? இதுதான் கேள்வி. மாறாக, அவர் அறிவியலாளர் இவர் விடுதலைபோராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் என்று ஆறுவித்தியாசம் காண முயலுவது பித்தருக்கே உரிய மடத்தனம். ஏன் வீர சாவர்க்கருக்கு மீசை தாடியில்லை கலிலியோவிற்கு இருந்தது என்றும் கூற வேண்டியதுதானே. மேலும் மற்றொரு விஷயம் ஜென் ஞானி போல டயலாக்குகளை பிதற்றுகிறவர், வார்த்தைகளை பிடித்துக்கொண்டு சாமியாடாமல், விஷயத்தைப் பேச வேண்டாமோ! காண்டாமிருகத்தோல் சுற்றிய மூளைகளைக் கொண்ட கிணற்றுத்தவளைகளுக்கு புரிகிற படியாக விஷயத்தைச் சொல்ல வேண்டியிருப்பதால் கூறப்பட்டதுதான் ‘ என்னைப் போன்ற ‘- இத்யாதி. கடந்த பல்லாண்டு பாஜக ஆட்சியில் கூற கிடைப்பது குஜராத் மட்டும்தான் போலும். அங்கு கலவரத்தை தொடங்கியவர்கள் முஸ்லீம்கள். பின்னர் பல இடங்களில் கலவரத்தை நீடித்தவர்களும் அவர்களே. என்ற போதிலும் அகதிகளான முஸ்லீம்களில் 90 சதவிகிதத்தினர் அங்கு சொந்த வீட்டுக்கு திரும்பினர். ஹஜ் யாத்திரை சென்று வந்தவர்கள் எவ்வித தொந்தரவுக்கும் ஆட்படவில்லை. இன்றுவரை அங்கு இஸ்லாமியர்கள் எவ்வித பிரச்சனையுமின்றிதான் வாழ்கின்றனர். ஆனால் ஜம்முவில் ? குஜராத்தில் பாதிக்கப்பட்டதை விட மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களில் எத்தனை பேர் வீடு திரும்பியுள்ளார்கள் ? எத்தனை ஆண்டு காலமாக ? திரிபுராவில் எத்தனை ஜமாத்தியாக்கள் வீடுதிரும்பியுள்ளனர் ? எத்தனை ஆண்டு காலமாக ? அல்லது பங்களாதேஷில். அல்லது மிசோரமின் ரியாங்குகள் ? எதற்காவது பதிலளிக்கும் நேர்மையோ அல்லது தைரியமோ உண்டா ? இத்தகையதோர் கோழையா பிறரை அழைப்பது கோழை என்று ?

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்