கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

கோவிந்தராஜன். கே.


—-

சமீபத்தில் சிங்கப்பூரில், கமல்ஹாசனிடம் , அவர் ஏன் ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவிகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்-

பிறமொழியிலிருந்து நல்ல கதைகளைத் தழுவதில் தவறில்லை என்று சொன்னவர், இப்படித்தான், ‘ஸ்வாதி முத்யம் ( தமிழில் சிப்பிக்குள்முத்து ) படத்தைத் தழுவி ஹாலிவுட்காரர்கள் Forrest Gump படத்தை எடுத்தார்கள். அதனால், அவர்கள் மேல் வழக்குக் கூடப் போடலாம் என்று சொன்னார்.

ஸ்வாதிமுதயம் 1985லும், Forrest Gump புத்தகமாக 1986-ல் சினிமாவாக 1994 வந்தது.

சரி இணையத்தில் இது பற்றிய் செய்திகள் படிக்கலாம் என்று தேடியபோது FACT Index என்ற தளத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி இருந்தது.

ஆம், அதில் Forrest Gump பற்றிய செய்தி உள்ள பகுதியில்

‘The character Forrest Gump bears striking resemblances to the lead character of a 1985 Telugu movie Swathi Muthyam ‘ என்ற வரிகள் கமலஹாசனின் வாதத்திற்கு வலு சேர்ப்பது போக் இருந்தது.

அந்த தள முகவரி

http://www.fact-index.com/f/fo/forrest_gump.html

இப்படித்தான் , 80களின் ஆரம்பத்தில் வந்த Visiting Hours படம் பார்த்து விட்டு பாரதிராஜா , தனது சிகப்பு ரோஜாக்களை இதிலிருந்து தழுவியிருக்கிறார் என்றார்கள்.

ஆனால், சிகப்பு ரோஜாக்கள் வந்தது 1978. ஆனால் விசிட்டிங் ஹவர்ஸ் படமோ ஹாலிவுட்டில் முதலில் திரையிடப்பட்ட வருடம் 1982.

நான்கு வருடம் முன்பே, சிகப்பு ரோஜாக்கள் வந்து விட்டது.

இதில் விசேஷ ஒத்துமை, இரு படத்திலும் கதாநாயகன் கமல் என்பது.

கமல் சொல்வது போல், நம்மவர்களுக்கு கொஞ்சம் தங்கள் திறமையின் மேல் நம்பிக்கை வேண்டும்.

எப்படி ஐ.டி. த் துறையில் இந்தியர்களால் சாதிக்க முடிகிறதோ அது போலவே தான் திரைத்துறையிலும் நம்மவர்கள் ஹாலிவுட்டில் சாதிக்க முடியும் .. அதற்கு மனோஜ் நைட், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் III -ல் பணிபுரிந்த மது, பல ஆங்கிலப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சென்னை சந்தோஷ், சேகர் கபூர் போன்றோர்கள் சாட்சி.

மேலும் தற்போது மிக அதிக அளவில் இந்தியர்கள், FILM-TV கல்வியை அமெரிக்காவில் கற்று வருவது இன்னொரு சாட்சி.

தயவு செய்து ரசிகர்கள் இது போல் கேள்விகள் கேட்பது விடுத்து, நல்ல தமிழ்படங்கள் வந்தால் அதிகமாகப் போய்ப் பாருங்கள். கமல்ஹாசன் போன்ற அர்ப்பணிப்பு மனநிலையுள்ள கலைஞர்களை ஊக்குவியுங்கள்.

—-

கோவிந்த்தராஜன்.கே.

Series Navigation

கோவிந்த ராஜன். கே

கோவிந்த ராஜன். கே