கடிதம் செப்டம்பர் 23,2004 – வரதனுக்குப் பல வார்த்தைகள்..

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பத்ரிநாத், ரவிகுமார்


(அமெரிக்கா முதல் மனிதன் —வரலாறு கீதை கொண்டுள்ளது.)

உண்மை.. கீதை பல வருடங்களுக்கு முன்னர் தோன்றியதுதான்.. அதைப் போல ‘ ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. ‘ ‘ ‘என்று தலை நிமிர்ந்து சொல்லும் திருக்குறளும், எண்ணற்ற தமிழ் இலக்கியங்களும் தோன்றியிருக்கிறது.. அது உங்களுக்குத் தெரியுமா.. ?

(எப்படி தற்போது ஒரு நிறுவனம்—.அருவருப்பான விஷயமல்ல.)

ஓகோ.. மானுடம் முழுவதும் தங்களுக்கு ஒரு வியாபார வர்த்தக ஸ்தாபனமோ..சரிஸ இதில் கீதையின் ி நிலைப்பாட்டைக் காண்போம். சாதி ரீதியாக குறைவான மனிதர்கள், பெண்கள், நாய்கள் அனைவரும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களைப் பொருத்தவரை அறிவுப் பூர்வமான ISO நிர்ணயமா..அப்படியென்றால் நீங்கள் வக்கிரம் பிடித்த உயர் சாதிக்காராக இருக்க வேண்டும் அல்லது இவையெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும்.

(பிராமண :::: ஆராய்ச்சி & வளர்ச்சி பிரிவு— சூத்திர :::: உற்பத்தி பிரிவு) அடேயப்பா.. அந்த பகவான் கிருஷ்ணன் கூட இப்படி நினைத்திருக்க மாட்டான்.. அது சரி.. அதென்ன பிராமணர்கள் ஆராய்ச்சி .. ஓகோ.. மனிதர்களை எவ்வாறு சாதி ரீதியாக பிரிக்கலாம் என்றா….

(இப்பவும், மூன்று வருடம– இதை அடக்குமுறை என்று கூவுதல் மடமை.)

தங்கள் இந்து கம்பெனிச் சட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா..ரொம்ப சிரமப்பட வேண்டாம்..அந்தச் சம்புகனையும் (ராமனால் ஈராக் பாணியில் தலையை வெட்டிக் கொல்லப்பட்ட தாழ்ந்த சாதிக்காரன்), பார்ப்பன தந்திரத்தால் கட்டை விரலை வெட்டுப் பட்ட அந்த வேடன் ஏகலைவனையும் கேட்டுச் சொல்லுங்கள்..)

(அப்படி மாறுபவர்கள்.– அது போல் தான் அன்றிருந்தது.)

தோடா.. ஒரு முறை பகவத் கீதையையும் ராமாயண மகா பாரத்தை வாசிக்கவும் ( முடிந்தால் கீதையின் மறுபக்கத்தையும், தந்தை பெரியார் எழுதிய ராமாயண பாத்திரங்கள் ஆகிய நூலைச் சேர்த்துக் கொண்டு படிக்கவும்)

(ஒரு பொது அமைப்பில் – கொடியதிலும் கொடியது.)

நீங்கள் யாரைச் சொல்லுகிறீர்கள்.. ராமன் தான் பட்டம் ஆள வேண்டும் என்றும் சூத்திரன் பரதன் நாடாளக்கூடாது என்ற ராமாயணத்தைச் சொல்கிறீர்களா..

(எந்த மதமானாலும்– கொட்டிக் கிடக்கிறது.)

உண்மைதான்.. இஸ்லாத்திலும், பைபிளிலும் கொட்டித்தான் இருக்கிறது..ஆனால் இந்து மத நூல்களில்… மன்னிக்கவும்.. காரணம் இந்து என்பது ஒரு மதமே அல்ல.. அது வர்ணாசிரம தர்மம்.. அனைவரும் வர்ணாசிரமப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தன் சொல்லாலும் செயலாலும் சொல்வதுதான் இந்து சனாதன தர்மம்….வர்க்க பேத சமூகம் அதைக் கட்டிக் காப்பது மட்டும் அல்ல.. அது அப்படி ஏற்றத் தாழ்வாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு தர்மம் தான் வர்ணாசிரமம்.. உயர் சாதி உச்சாணிக் கொம்பு என்ற கண்ணாடி மாளிகையில் வாழ்ந்து கொண்டு தனக்குக் கீழ் இருப்பவர்களை மிருகத்திலும் கேவலமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் அந்த வலியைப் புரிந்து கொள்ள முடியாதுதான்..

(நீங்கள் சத்தியத்தின் படி– அதில் கவனம் செலுத்துங்கள்.)

அதன் ஒரு பகுதியைத்தான் கலைஞர் செய்து இப்போது கொண்டிருகிறார்.

(அதுவரை நாங்கள் பாடிக் கொண்டிருக்கும் பாடல், ‘எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே)

இது நீங்கள் பாடும் பாடல்.. நாங்கள் பாடும் பாடலையும் கேளுங்களேன்..

‘ ‘மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மானென்று சொல்வதில்லையா..

தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா… ‘ ‘

பத்ரிநாத்

ரவிகுமார்

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத், ரவிகுமார்

பத்ரிநாத், ரவிகுமார்