கடிதம் – ஜூலை 29,2004

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

ஆசாரகீனன்


வகாபிசம் என்பது நம்பிக்கை என்று இங்கு சிலர் கருதுகிறார்கள். ஏற்கனவே சொன்னபடி அதை அரசியல் என்று நான் கருதுகிறேன். நம்பிக்கையை விமர்சிக்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. எந்த நம்பிக்கை வழியையும் நான் உபயோகமாகக் கருதுவதில்லை. அதைக் கட்டி மாரடிப்பவர்களுக்கு அவகாசம் இருக்கிறது, அவசியமும் இருக்கிறது. எனக்கு இல்லை.

வகாபிசத்தின் அரசியல் பற்றித்தான் தொடர்ந்து எழுதி வருகிறேன். காரணங்கள் தெளிவு. மாஓயிசம், ஸ்டாலினியம், உலக முதலாளியம் (புஷ்ஷியம்) என்ற வரிசையில் வகாபிசம் போன்ற உலகளவு பரந்துள்ள காளான்களைக் களைவது மனிதர் வாழ்வுக்கு நன்மை பயக்கும் என்பது என் முடிவு.

பெரும் கொலைகளைத் தன் வழியாகக் கொண்ட வகாபிசத்தின் அரசியல் பாதையைப் பற்றி மேற்காசியாவில் வாழும் அல்லது அங்கு வாழ்ந்த முஸ்லிம் சிந்தனையாளர்கள் பலரின் கட்டுரைகளைச் சேகரித்து வருகிறேன். இவற்றில் கொடூரம் அதிகம் இல்லாத, தெளிவான வாதங்களை முன்வைக்கும் சில கட்டுரைகளை இங்கு மொழிபெயர்த்துத் தர உத்தேசம். அதாவது திண்ணை பதிப்பாளர்கள் ‘என்னய்யா தொல்லையாய்ப் போயிற்று உன்னோடு ‘ என்று முகம் சுளிக்காத வரையில், கட்டுரை திண்ணைக்கு ஏற்றதல்ல என்று அறிவிக்காத வரையில் இம்முயற்சி தொடரும்.

எனது கால அவகாசம் பொறுத்து இவை அவ்வப்போது வெளிவரும். தமக்குத் தெரிந்த நாலே நாலு புத்தகங்களில் உலகின் மொத்த வரலாறு, அறிவியல், ஞானம் எல்லாம் அடங்கி விட்டது என்று தம் எதிர் வினைகள் மூலம் இது வரை தெரிவித்து விட்ட அறிவாளர்களுக்கு நன்றி. மேலும் கொள்ளிகளை எறியும் முன் சற்று பொறுங்கள். இக் கட்டுரைகள் வரட்டும். பிற்பாடு ஒன்றாகச் சேர்த்து ஒரு கொடும் பாவி கட்டி எரிக்கலாமே ?

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

கனடா நாட்டு முஸ்லிம் பெண்களின் அடிப்படை மனித உரிமைகளை மத நீதிமன்றங்களிடமிருந்து பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவரங்களுக்குப் பார்க்க: International Campaign Against Shari ‘a Court in Canada

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் எவ்வாறு நசுக்கப்படுகின்றன, அவற்றைப் பாதுகாக்க என்ன செய்வது போன்ற தகவல்களை அறிய:

Committee to Defend Women ‘s Rights in the Middle East

ஆசாரகீனன்

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்