கடிதம் ஜூன் 24, 2004

This entry is part of 47 in the series 20040624_Issue

அசுரன்


சென்ற இதழில் நான் எழுதிய மிராண்டா குளிர்பானம்-விவேக் தொடர்பான கட்டுரைக்கு

வால்:

வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கண்டனம்!

மிராண்டாவில் கரப்பான்பூச்சி கிடந்தது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த வழக்கில் தன்னைச் சம்பந்தப்படுத்துவது சரியல்ல ‘ என்று நடிகர் விவேக் கருத்து தெரிவித்திருப்பதைக் கண்டிக்கிறோம். மிராண்டா விளம்பரத்தில் விவேக் தொடர்ந்து நடிப்பதால் இதில் அவருக்குத் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. ‘விளம்பரத்தில்தானே நடித்தேன் ‘ என்று ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஒரு குளிர்பானத்தின் விற்பனைக்குக் காரணமாக இருக்கும் ஒருவர் அதனால் பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பதில்சொல்லக் கடமைப்பட்டவராகிறார். கோக், பெப்சியில் விசத்தன்மை உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலும் விவேக் போன்ற நடிகர்கள் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கை அந்நிய நிறுவனங்களுக்கு பயன்படுத்துவது மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்தக் குளிர்பானங்களால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் நம் நாட்டின் பொருளாதாரமும் தாழ்ந்துபோகிறது. விவேக் போன்றவர்கள் இதுபோன்ற, தரமற்ற, விசத்தன்மைகொண்ட பொருட்களுக்கு விளம்பரம் செய்து மக்களின் உயிரோடு விளையாடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மற்ற நடிகர் நடிகைகளும் இத்தகைய விளம்பரங்களிலிருந்து வெளியேறவேண்டும்.

அசுரன்

asuran98@rediffmail.com


Series Navigation