தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

ஈஷா சக்தி


அட்டவணை # 1:

ரேஷன்:
– ஐம்பது காசுக்கு கிலோ அரிசி!
– நாலணாவுக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணை!
– மாத மண்ணெண்ணை ஒரு ரூபாய்க்கு!

பண்டிகை தின மாற்றம்:
– ஜனவரி முதல் தேதிக்கு பொங்கல் நாள்…மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் மாற்றம்..
– டிசம்பர் 25க்கு தீபாவளி தினம் மாற்றம்…

பட்டங்கள் திட்டம்:
– கனிமொழிக்கு மத்திய மந்திரி மற்றும் கவிப்பேரரசி பட்டம்
– தமிழச்சிக்கு கவிக்கிழத்தி பட்டம்
– உதயநிதி மகனிற்கு அண்ணா பல்கலைக் கழக டாக்டர் பட்டம்
– வைரமுத்துவிற்கு பத்மபூஷண்
– வேண்டாமென்றாலும் விடமாட்டேன் என்கிறார்கள் என்பதற்காக கருணாநிதிக்கு பாரதரத்னா
– நடிகர் விவேக்கிற்கு ராஜ்ஜிய சபை உறுப்பினராக நியமனம்
– கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிற்கும், ராஜாத்தி அம்மாளிற்கும் இரட்டை பத்மவிபூஷண்.

இலங்கைப் பிரச்சினை!
– இலங்கையில் தமிழர் பகுதிக்கு காவிரி தண்ணீர், மற்றும் அணை!

காவிரி:
– அடுத்த பத்தாண்டுகளின் இறுதியில் காவிரிப் பிரச்சினைக்கு கர்நாடக முதல்வருடன் நேரடிப் பேச்சு…

மதிய உணவு:
– பள்ளி மதிய உணவில் வாரம் ஒரு முறை திருநெல்வேலி அல்வா.

தமிழர்கள் விடிவுபெற:
– 24 மணி நேரமும் உங்களை மகிழ்விக்க ஸ்டாலின் டி.வி.
– அரசுடைமையாக்கப்பட்ட அஞ்சா நெஞ்சன் அழகிரி கேபில்ஸ்

அரசுப் பணியாளருக்கு ஜே…சாரி… கே!:
– அரசுப் பணியாளர்களுக்குக் கண்டிப்பாக ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு சம்பள உயர்வு…

பயணிகள் நலன்:
– சென்னை டவுன் பஸ் பயன் படுத்தும் பயணிகளுக்கு DVD Player. இது தமிழ்நாடு முழுமைக்கும் பின்பு விரிவாக்கம் செய்யப்படும்.

மொபைல் எனப்படுவது யாதெனின்:
– நிமிடத்திற்கு ஐந்து பைசாவிற்கு இந்தியா முழுமைக்கும் பேசும் வசதி…
– இலவச செல் போன்கள்…ஒவ்வொருவருக்கும்

சினிமா…சினிமா:
– ஆஸ்கார் பரிசு பெறும் தமிழ் படங்களுக்கு வரி நீக்கம்…
– தமிழ் திரையுலகினருக்கு வருடத்திற்கு ஒருமுறை வெளிநாடு சென்றுவர இலவச டிக்கெட்…
– நலிந்த திரையுலகினர் மேம்பட இலவச Complan போத்தல் மாதத்திற்கு ஒருமுறை ஒருவருக்கு…
– அருமை நண்பர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனிற்கு தமிழக அரசால் இனி பிறந்த நாள் விழாக்கள் எடுக்கப்படும்…

கனிந்த மொழி:
– தமிழ் சங்கம விழாவிற்கு சென்னை வந்து போக இலவச டிரெயின் மற்றும் பஸ் வசதிகள்…

தி.மு.க. பென்சன் திட்டம்:
– பத்தாண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. உறுப்பினராக இருப்பவர்களுக்கு ரூ10000ம் பண முடிச்சு, ஒவ்வொரு வருடமும்

கல்யாணந்தான் கட்டிக்கிட்டு:
– நாடு முழுவதும் கருணாநிதி தயாளு அம்மாள் இலவச திருமண மண்டபங்கள். அரசு செலவில் அமைப்பதற்கு கருணாநிதி தன் சொந்தப் பணத்திலிருந்து 100 கோடி வழங்குகிறார்.
– முதல் காதல் மற்றும் முதல் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இலவச வீடு.

வக்கீல்கள், போலீஸ்கள் மற்றும் அக்கவுண்டண்ட் பெனிஃபிட்ஸ்: (Sorry Engineers and Doctors)
– அரசு மற்றும் அரசு அல்லாத வக்கீல்கள், போலீஸ்கள் மற்றும் அக்கவுண்டட்களுக்கு இலவச ஸ்கூட்டர் மற்றும் இலவச பெட்ரோல்

படையல் விருந்து:
– தேர்தலுக்குப் பின் தொகுதிகளில் நடைபெறும் இலவச படையல் விருந்தை இனி தேர்தல் ஆணைய மேற்பார்வையில் அரசே ஏற்று நடத்தும்.
– தேர்தலுக்குப் பின் படையல் விருந்தில் சைவ, அசைவ, சைனீஸ், அமெரிக்க, மெக்சிகன் மற்றும் இட்டாலி உணவு வகைககள் பரிமாறப்படும்.

கழிவு மலிவு:
– கட்டணக் கழிப்பறைகளின் கட்டணம் அனைவரின் விருப்பத்திற்கிணங்க நீக்கப்படும். ஆனால் வருட வரி விதிக்கப்படும்.

பாப்கார்ன் தின்னக் கூலி:
– கருணாநிதி எழுத்துக்களும், அவர் எழுதித் தயாரிக்கப் படங்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அனைவரும் இலவசமாகப் பார்க்கும்படி குறுந்தகடுகள் செய்யப்படும். நாட்டுடைமையாக்கப்பட்ட கருணாநிதி குறுந்தகடு ஒவ்வொன்றுக்கும் மக்கள் இலவசமாகப் பார்க்க ரூபாய் 10ம் கூட வழங்கப்படும்.

எதிர்காலத் திட்டம்:
– கருணாநிதியின் கம்ப இராமயண உரை அவர் கோடைக்கானலில் ஓய்வு பெறும் சமயம் செய்யப்பட்டு இலவசமாக வினியோகிக்கப்படும். அதற்கு கவிஞர் வாலியும், கவிக்கோ அப்துல் ரஹுமானும் மற்றும் வைரமுத்துவும் வாழ்த்துப் பா எழுதுவர். வாழ்த்துப்பா அனைத்திற்கும் இளையராஜா அல்லது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க, மு.க. முத்து குரலில் வெளியிடப்படும்.

நோபல் திட்டம்:
– நான் என்றால் உதடு ஒட்டாது; நாம் என்றால் ஒட்டும் என்பன போன்ற அரிய கண்டுபிடிப்புக்களுக்காகவும், கருணாநிதியின் தமிழ் தொண்டிற்காகவும் அரசு இந்த ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரையும் செய்யும்.
– கருணாநிதியை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பது எங்களது தேர்தல் வாக்குறுதி என காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு தெரிவிக்கிறார்.

சிறப்புக் கவனிப்பு:
– இந்தியாவின் மிகச் சிறந்த இசை அமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியருக்கான பரிசு வரும் ஆண்டிற்கு
டி. விஜய ராஜேந்தருக்கு, அவர் மேற்படி எதையும் செய்யாமல் இருந்தால் கொடுக்கப்படும்.

முக்கிய அறிவிப்பு:
– தி.மு.க. தேர்தல் வாக்குறிதிகளை விமரிசிப்போர் மீது தேசியத் தீவிர வாத சட்டம் பாயும்.

(தொடரும்)

Series Navigation

ஈஷா சக்தி

ஈஷா சக்தி