புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

குசும்பன்


அதிபர் புஷ்ஷுக்கு,

இப்போதைக்கு அதீத குடைச்சலில் அவதிப்படுபவர் அதிபர் புஷ் என்றால் அது மிகையில்லை. உன் ஷூவில் நானிருந்தால் உலகமெல்லாம் உள்ளங்கை யில் என்பதைப்போல நம்ம அதிபர் நிலையில் நானிருக்க தகுதியில்லை. இருப்பினும் இலவச அறிவுரைகளுக்குப் பஞ்சமா என்ன ? இதோ புடிங்க புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை:

டாப் 10 அறிவுரைகள்

1. நள்ளிரவு 12 மணிக்கு (அட எல்லாமே நடுராத்திரியிலதானேப்பா நடக்குது!) எழுந்திருங்க. புடிச்ச டிரிங்க் (ஆரஞ்ச் ஜூசோ இல்லை ஜேக் டானியல்ஸோ) எடுங்க. டபுள்ஸ் ‘னா நல்லது. நாலு ரவுண்ட் போட்டவுடனே யோசிங்க (முடிஞ்சா). இப்போ நீங்க எடுக்கிற முடிவுகளை எழுதியோ, இல்லை ரெக்கார்டர்ல பதிவோ பண்ணி வைச்சிட்டு மறுநாளு வீங்கிய முகத்தோட அறிவிக்கலாம். சோகத்துக்கு சோகம் ஆச்சு. கண்ணு முழிச்சு யோசிச்சதாச்சும் ஆச்சு.

2. சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜட்ஜ் போடணுமா ? அட்டர்னி ஜெனரல் வேணுமா ? ரொம்ப சிம்பிள். எல்லாத்தையும் எழுதி கன்சர்வேட்டிவ் & கோவிற்கு அனுப்பி விடவும். அவர்களின் பரிந்துரை பேரில் அனைத்தும் எஅடக்கும் போது அவர்களுடன் பங்கா எதுக்கு நைனா ? அப்புறம் இந்த டெமாக்ரெட்டோ மொடரேட்டோ தனித் தனியா கும்மிப்போடலாம். இப்பிடி கொடைச்சல் கொடுக்கிற ஆளுங்களோட பேமிலி பேக்கிரெளண்ட் திரட்டவும். அப்புறமென்ன உன்னோட பொண்டாட்டி உளவு பாக்குற ஆளு அப்பிடின்னு நியூஸ் பேப்பருக்கு தகவலை கசியவிட்டா மேட்டரு முடிஞ்சது.

3. கலர் ஆளுங்க இல்ல பொம்பளைங்களுக்கு போஸ்டிங் கொடுக்கிறதில்லன்னு ஒரு கொறை இருக்கு. அப்பிடிப் பேசுற வெட்டி ஆளுங்களுக்கு ரைஸ் ‘ அம்மா கலரில்லையா ? பெண்ணில்லையா ?ன்னு நாக்கைப் புடுங்கிகிறமாதிரி கேள்வி கேக்கோணும். Flip-Flopper ‘ன்னு டெக்னிக்கலா போட்டுத் தாக்குன ஆளாச்சே நீங்கள் ?

4. எவ்வளவு தடவைதான் கிளிண்டனையும், உங்கப்பாவையும் உண்டியல் குலுக்குற வேலைக்கு அனுப்புறது ? அடுத்த தபா மோனிகா… சீச்சீ மன்னிக்கவும் ஹில்லாரியையும், உங்க அம்மாவையும் (அஃதாவது முன்னாள் அதிபரின் மனைவி என்ற முறையில்) அனுப்புங்கள். பெண்ணுக்கு முன்னுரிமை என்று வேண்டும் காலத்தே ஜல்லியடிக்க ஏதுவாக இருக்கும்.

5. அடுத்து ஸ்கூட்டர் லிப்பி மாதிரி ஸ்கேண்டல் வெளியானால் ஈரானோ இல்லை வடகொரியாவையோ போட்டுத் தாக்கவும். எவ்வளவு நாள்தான் ஈராக் மேட்டரையே நியாயப்படுத்தி பேசுவது. மக்களுக்கு போரடிக்கின்றது.

6. அபார்ஷன் எதிர்ப்பு, செக்ஸ் எலெக்ஷன் எதிர்ப்பு, ஓரின திருமண எதிர்ப்பு போன்ற கன்சர்வேட்டிவ் கொள்கைகளைப் பற்றி வலியுறுத்தி சர்ச் ‘சையும் அரசாங்கத்தையும் இணைத்து பாலம் போடுங்கள். உங்கள் பெண்கள் தண்ணியடித்து (எல்லாம் உங்க டிஎன்ஏ வேலை மாம்ஸே) போலீஸில் மாட்டினாலோ, உங்கள் தம்பியின் பிள்ளை போதை மருந்து பயன்படுத்தினாலோ கவலை வேண்டாம். ஊராரை (பொய்) ஊட்டி வளர்ப்போம். இத்த கண்டுக்கிறவங்க வெறும் காமெடியனுங்கோ.

7. உங்க அப்ரூவல் ரேட்டிங் மண்ணைக் கவ்வினால் கவலை வேண்டாம். தம்பி ஜெப்பு ஜனாதிபதியாக கொஞ்ச காலம் காத்திருக்கலாம். நடுவுல டெமாக்கிரெட் ஆளுங்க தப்பு பண்ண சான்ஸ் கொடுக்கலாம். கொஞ்சம் பர்சனல் (இப்போ மட்டும் என்ன வாழுதாம் ?) பிஸினஸ் பாத்துட்டு அப்புறமா தம்பிய எலெக்ஷன்ல நிக்க வெச்சு ஓட்டைக் களவாண்டு கெலிச்சுட்டாப் போச்சு. நம்ம ஜெப்பு ரெண்டு லாங்குவேஜ்ல செப்புவாரு. உங்களுக்கு கொஞ்சம் தேவலாமாத்தான் உளறுவாரு.

8. பணக்கார மக்கள் ஏழ்மையில் வாடுறாங்கோ. டேக்ஸ் டிடக்ஷன் கொடுங்கோ. அதுல குய்யோ முறையோன்னு மத்தவங்க கத்தும்போது நீங்க ரெஷ்ட் எடுக்கலாம் ஜாலியா.

9. வெள்ளை மாளிகையில பொழுது போகலேன்னா காத்ரீனா, ரீட்டா, வில்மான்னு பாதிக்கப்பட்டோர் லிஸ்ட் ஏராளம். கலர் கலரா வயசான மக்களைக் கட்டிப் பிடித்தும், சின்னப் புள்ளிங்களோட கண்ணீரோடும் பத்து போட்டோ புடிச்சு பத்திரிக்கையில கொடுத்துட்டாப் போச்சு. இல்லேன்னா அடுத்த இயற்கை சீற்றத்திற்கு இறைவனைப் பிரார்த்திக்கலாம். அது மட்டுமே உங்களை மீடியா ஸ்பாட்லைட்டிலிருந்து காப்பாற்றும்.

10. இதெல்லாம் முடியல்லேன்னா பயம் வேண்டாம். வெக்கேஷன்ல போயிடுங்க. என்ன டெக்ஸாஸ் போனா யாராவது பேட்டி கொடுக்கச் சொல்லி போர் எதிர்ப்பு ஆசாமிங்கோ கூவுவாங்கோ. ப்ளோரிடாவுல தண்ணிக்கும், பிஜிலிக்கும் (அட ஷாக்கடிக்கிற மின்சாரம்ப்பா) ததிங்கினத்தோம். பேசாம புயலடிகாத இடமாப் பாத்து (ஸ்)குரூஸ் 🙂 போட்டுங்கோ! உங்களுக்கும் நிம்மதி. உலகிற்கும் கூட !

www.kusumban.blogspot.com

podankho@yahoo.com

Series Navigation

குசும்பன்

குசும்பன்