சொன்னார்கள்

This entry is part of 30 in the series 20050909_Issue

சொதப்பப்பா


‘வரலாற்றியல் ரீதியில், சமூக அரசியல், பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களாக விளங்கும் ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களுக்குச் சமூகத்தைப் புரிந்துகொள்ள வைத்ததும் அரசியல் கல்வி வழங்கியதும் மா-லெ அமைப்புகள் என்பது ஒவ்வொரு தலித்தும் அறிந்த உண்மை. இருந்தாலும் தலித் அரசியல் என்னும் கருத்தாக்கம், உருவாக்கிய அவர்களுக்கே இன்னும் பிடிபடாதபோது அந்த விளிம்பு நிலை மக்கள் இதனைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதும் புரிதலின் ஊடாக விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் செயலல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும் ? ‘

லெனின் சந்துரு

(காலச்சுவடு – மார்ச் 2005)


‘ஜெயமோகனின் உடைந்த நான்கள் எனும் தங்களது கட்டுரையையும், சிறுகதையையும் படித்தேன்; ரசித்தேன்; தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே, தங்கள் முடிவுகளை, அலசி ஆராய்ந்து ஆணித்தரமாக வெளியிட்டு இருக்கிறீர்கள்; மேலை நாடுகளில் மேட்டுக்குடிச் சிந்தனையில் மூழ்கியிருக்கும் ‘திண்ணை ‘வாசிகளுக்குக் காலந்தாழ்ந்தாவது ஜெயமோகனின் சிதைவுண்ட , சிறுபிள்ளைத்தனமான ஆளுமையும், சந்தர்ப்பவாதச் சரிவுகளும், ஓரள்வு புரியும் என நம்புகிறேன். நையாண்டி இலக்கியத்தை ரசிக்கத் தெரிந்த உள்ளங்களுக்கு தங்களது சிறுகதை ‘சிசிஃபஸ் ‘ ஒரு விருந்து! புதுமைப்பித்தன் மரபு நன்கு பேணப்படுகிறது ‘

தி க சி

(பன்முகம் அக்-டிசம்பர் 2004)


‘ஆன்டி கம்யூனிஸ்டு அறிவுஜீவிகளின் குட்டிக்கரணங்களும், கொம்பு சுற்றும் வேலைகளும் குரங்காட்டங்களாகத்தான் இதுவரை இருந்திருக்கின்றனவே தவிர , அடிப்படை அறிவார்த்தம் என்று எதுவும் இருந்ததில்லை. ஆனாலும் தொடர்ந்து இந்த ஆன்டி கம்யூனிஸ்டு அறிவுஜீவிகள் பொம்மலாட்டம் காட்டிக்கொண்டே தான் இருப்பார்கள். ஏனெனில் கம்யூனிசத்தின் தேவையே இந்த ஆன்டி கம்யூனிஸ்டுகள் இருக்கும் வரைதானே. ‘

பிரேம் ரமேஷ்

(உயிர்மை ஜூலை 2005)


‘சன் டிவியைப் பார்க்கும் ஒருவருக்குத் தமிழகத்தில் வை.கோ என்னும் ஒரு தலைவர் இருப்பது தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. தீவிர இதழியல் என்னும் மிகச் சிறிய வட்டத்திற்குள் நிகழும் வளர்ச்சிக்கு, அதிகாரம், அபாயம் என்றெல்லாம் பல ஆண்டுகளாகப் பதறி வருபவர்கள் மேற்படி அபாயம் பற்றி மெளனம் காப்பதை எப்படிப் புரிந்து கொள்வது ? நமது சாதிய அறிவுஜீவிகளின்பகுத்தறியாமை வீச்சு ஜெயலலிதாவோடும், சங்கரமடத்தோடும் நின்றுவிடுவது துரதிர்ஷ்டமானது என்று தான் சொல்லவேண்டும். ‘வணக்கம் தமிழக ‘த்தில் அழைத்த விசுவாசமும் அழைக்கப்படலாம் என்னும் சபலமும் இத்தனை வலுவானவையா ? ‘

கண்ணன்

(காலச்சுவடு ஆகஸ்டு 2005)


‘இது பாலியல் தொழிலாளியிடம் புணர்ச்சிக்காக ஆணுறை வாங்குவதற்கு ஒப்பானது ‘

சிங்கப்பூர் இளங்கோவன் : ‘விருதுகள் வாங்கும்போது எப்படி உணர்கிறீர்கள் ? ‘ என்ற கேள்விக்குப் பதில்

(உயிர்மை ஆகஸ்ட் 2005)


(அமார்த்ய) சென் நைபாலுடன் வேறுபடும் விஷயங்கள் அரசியல் சம்பந்தமானவை. முஸ்லீம் படையெடுப்பினாலும், ஆன்மீகத் தேடல் மற்றும் (சாதியப்)படிநிலைகொண்ட இந்துமதத்தினாலும், இந்தியா ஒரு காயம்பட்ட நாகரிகம் ஆகிவிட்டதென்றும், மேலைநாடுகளின் அரசியல் தத்துவம் , தொழில்மயமாதல் இவற்றால் சமீபகாலத்தில் தான் புத்துயிர் பெற்றது என்றும் நைபால் கருதுகிறார்.

வேதம் தொடங்கி வழிவழியாய் செயல்பட்டுவந்த அறிவுத் தேட்டமும், விசாரணை மனமும் , முஸ்லிம் ஆட்சியாளர்களால் முன்கொண்டு செல்லப்பட்டது என்றும், அதுவே இந்திய ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு அடிப்படை ஆனது என்றும் அமார்த்ய சென் சுட்டிக் காட்டுகிறார்.

(Sen ‘s more illuminating differences with Naipaul are political. Naipaul sees India as damaged by Muslim invaders and emasculated further by an otherworldly and hierarchical Hinduism—a wounded civilisation that has only recently been revived by contact with western political philosophy and industrialism. Sen points instead to an old tradition of reason and scepticism, which, beginning with the Vedas, was upheld often by India ‘s Muslim rulers, and which he thinks forms the basis of Indian democracy and secularism.)

பங்கஜ் மிஸ்ரா

(அவுட்லுக் ஜூலை 11, 2005)


Series Navigation