சொன்னார்கள்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

திண்ணை


Does the Congress have any worthwhile strategy for Tamil Nadu, which suffers from one natural calamity after another, and the only visible political outfit seems to be the ADMK ? The ruling coalition at the Centre has a dozen ministers with important portfolios from Tamil Nadu. However, where is the Sonia Gandhi-led grand coalition in the State to which the people of Tamil Nadu are looking for support ?

– Arun Nehru, in Pioneer

தமிழ்நாடு பற்றி ஏதேனும் உருப்படியான திட்டம் ஏதும் காங்கிரஸிடம் உண்டா ? தமிழ்நாட்டில் ஒரு இயற்கை விபத்து அடுத்து மறு விபத்தாக வந்து கொண்டே இருக்கிறது. அங்கு உஇருப்படியாக ஏதேனும் செய்யும் ஒரே அரசியல் அமைப்பாக அதிமுக மட்டுமே இருக்கிறது. ஆளும் கூட்டணியில் தமிழ்நாட்டிலிருந்து டஜன் அமைச்சர்கள் மிக முக்கியமான பதவிகளில் இருக்கிறார்கள். இருப்பினும், தமிழ்நாட்டு மக்கள் ஆதரவை எதிர்பார்க்கும்போது, சோனியா காந்தி தலைமையில் இருக்கும் இந்த மாபெரும் கூட்டணி எங்கே காணவில்லை ?

– பயனீயர் பத்திரிக்கையில் அருண் நேரு.


As a citizen of an ostensibly democratic country, why should you care about gay rights, regardless of your sexual preference ? Because this issue is not just about the rights of a minority of Indians, it’s about all our rights.

– Gautam Bhan, in Indian Express

வெளிப்படையாக ஜனநாயக நாடாக அறிவித்துக்கொள்ளும் நாட்டின் குடிமகனாக இருக்கும்போது, ஏன் நீங்கள் ஓரின பாலுணர்வாளர்களின் உரிமைகளைப்பற்றி கவலைப்பட வேண்டும் ? ஏனெனில், இது சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளைப் பற்றி அல்ல, நமது பொதுவான உரிமைகளைப் பற்றியது.

– கெளதம் பான், இந்தியன் எக்ஸ்பிரஸில்


The Left has blocked the pension Bill. It has prevented PF reforms and it is determined to prevent labour reforms. At every stage, it has done its bit to prevent the so-called ‘toiling masses ‘ from extricating themselves from poverty and deprivation.

– Swapan Das Gupta in Pioneer

ஓய்வூதிய சட்டத்திருத்த்தை இடதுசாரிகள் தடுத்துவிட்டார்கள். பி.எஃப் சட்டத்திருத்தங்களை அவர்கள் தடுத்துவிட்டார்கள். தொழிலாளர் சட்டங்களையும் அவர்கள் தடுக்க முனைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிலையிலும், ‘உழைக்கும் பாட்டாளி வர்க்கம் ‘ தங்களது ஏழ்மையிலிருந்தும் வறட்சியிலிருந்தும் வெளியேற விரும்பும்போதெல்லாம் அவர்களை தடுப்பதே ஒரே குறிக்கோளாக இடது செயல்பட்டு வருகிறது.

-பயனீர் பத்திரிக்கையில் ஸ்வாபன் தாஸ் குப்தா


‘In Western countries, religion plays a much greater part in public and private life than is often assumed … I remember being surprised to find that one of my roles as Home Secretary was to swear in new Anglican bishops at the Palace. Each day the British Parliament opens with Anglican prayers; and each day those state schools which have not specifically opted out are required to hold a broadly Christian act of collective worship, ‘

– Jack Straw, British Sectratary (in Hasan Suroor ‘s article in The Hindu)

‘மேற்கு நாடுகளில், எல்லோரும் புரிந்து வைத்திருப்பதைவிட அதிகமாகவே சமயம் பொது வாழ்க்கையிலும் தனிவாழ்க்கையிலும் பங்கு பெறுகிறது. உள்துறை அமைச்சராக நான் இருந்தபோது ஆங்கிலிகன் பிஷப்புகளை அரண்மனையில் வைத்து பதவிப்பிரமாணம் எடுக்க வைப்பதும் என் வேலைகளில் ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு நாளும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆங்கிலிகன் சர்ச் பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு நாளும், செய்யமுடியாது என்று மறுதலித்த சில பள்ளிகளைத் தவிர, எல்லா அரசாங்க பள்ளிகளும் கிரிஸ்துவ பிரார்த்தனையுடனேயே ஆரம்பிக்க வேண்டும்.

-ஜாக் ஸ்ட்ரா, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் (ஹிந்துவில் ஹாசன் சுரூர் கட்டுரையில் மேற்கோளாக)


‘ஜெயேந்திரர் விவகாரத்தால் அதிருப்தியில்ஐருக்கும் பிராமணர்கள், வரும் தேர்தலில் ஜெ.வை ஆதரிப்பார்களா ? ‘ ‘ என்றதும் சட்டென குறுக்கிட்டார் அம்புலி ராமன். ‘இது வேற.. அது வேற.. ராஜாஜிக்கு அடுத்தபடியா தமிழக அரசியலில் பிராமண சமூகத்திற்கு கிடைத்திருக்கும் ஒரே பிரதிநிதி ஜெயலலிதாதான். அவர் ஆட்சிக்கு எதிரா நாங்க ஒட்டுப் போடுவோமா ? தேர்தல் வரும்போது ஜெயேந்திரரா ஜெயலலிதாவா என்ற பிரச்சனை இருக்காது. ஜெயலலிதாவா கருணாநிதியான்னுதான் பார்ப்போம். ஜெயலலிதாவுக்குத்தான் ஒட்டுப் போடுவோம். அவர்தான் எங்க சமூகத்தின் ஒரே பிரதிநிதி. ‘ ‘

– நக்கீரன் பத்திரிக்கையில் தாம்ப்ராஸ் தலைவர் அம்புலிராமன்


Series Navigation

சொன்னார்கள்

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

சொதப்பப்பா


‘பாகிஸ்தானைத் தனிமைப்படுத்திப் பார்ப்பது தவறு. பாலியல் பலாத்காரம் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளிலும், எல்லா இடங்களிலும் பாலியல் பலாத்காரம் நடக்கிறது என்ற செய்திகளை நான் பார்க்கிறேன். பாகிஸ்தானில் உருவாகியுள்ள கலாசாரம் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது பாகிஸ்தானில் பணம் பண்ணும் ஒரு வழியாகிவிட்டது. கற்பழிக்க அனுமதித்தால், லட்சக்கணக்கில்பணம் பண்ணலாம், கனடாவிற்கு சுலபமாய் விசா கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ‘

( ‘You must understand the environment in Pakistan. This has become a money making concern. A lot of people say if you want to go abroad and get a visa for Canada or citizenship and be a millionnaire, get yourself raped. ‘ )

பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப்


‘அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அடிமைகள், கோழைகள், பதவியில் இருந்தால் போதும் என்று பணிந்தே கிடக்கிற பிறவிகள் என்று கூறுவது , நம்மால் நமது அமைச்சரவையை இப்படி நடத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ள மற்ற முதல்வர்களுக்கு உதவலாம். நம்மைப்போன்ற விமர்சகர்களின் கிண்டலுக்கும் இதில் தீனி கிடைக்கலாம் . ஆனால் இந்த கட்டுப்பாடு பிரமிப்புக்குரிய ஒரு விஷயம் தான் என்பதை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. ‘

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ


‘பெரியார் காட்டிய வழியில் முடிந்த அளவு சென்று கொண்டிருக்கிறோம். ‘

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்


‘ஆண்பாதி – பெண் பாதி என்னும் அர்த்தநாரீசுவர தத்துவத்தை ஆகாயமளவப் புகழ்கிறவர்கள், பெண்களுக்கு 50 சதவீதம் அல்ல – 33 சதவீதமாவது இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க முன்வரக்கூடாதா ? இக்கோரிக்கைக்குப் பேராதரவு தரவேண்டியது பெண் வயிற்றில் பிறந்தோரின் கடமை. ‘

கருணாநிதி


‘தலித் கிறுஸ்துவர்களுக்கு முன்னுரிமை தரமறுப்பதற்குச் சொல்லப்படும் வழக்கமான காரணம் கிறுஸ்துவ மதத்தில் சாதி இல்லை என்பதாகும். இது சரிதான். கிறுஸ்துவ மதம் சாதி பாகுபாட்டைப் பிரசாரம் செய்வதில்லை. ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. தொட்டிலில் தொடங்கி, சுடுகாடு வரையில் சாதி அமைப்புக் கோலோச்சுகிறது. மதமாற்றம் சமூகப் பொருளாதார நிலையை மாற்றுவதில்லை. சமூகப் புறக்கணிப்பும் அவர்கள் எங்கு போனாலும் தொடர்ந்து அவர்களைத் துன்புறுத்துகிறது. ஹிந்து தலித், கிறுஸ்துவ தலித் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்கள் மீது கொடுமைகள் தொடர்கின்றன…தலித்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எனக் கட்டுப்படுத்துவதன் மூலம் தலித் சமூகத்தினரை மதரீதியாய்ப் பிரிக்கிறது இந்தச் சட்டம். சமூகப் பொருளாதாரப் பின்னடைவு முன்னுரிமைக்கு அடிப்படை இல்லாமல், மதத்தையும் சாதியையும் இணைத்து, அதுவே பிரசினை என்று சட்டம் கருதுகிறது. ‘

சென்னை-மயிலாப்பூர் ஆர்ச்பிஷப் மற்றும் கத்தோலிக் பிஷப் கான்பெரன்ஸின் இந்திய தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாசிகள்ம் பிற்படுத்தப் பட்டோர் கமிஷனின் தலைவர் டாக்டர் ஏ எம் சின்னப்பா, கமிஷனின் தேசீயச் செயலாளர் ஏ ஃபிலோமின் ராஜ்.


‘இது எனக்குக் கிடைத்த மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. எழுத்து சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி. இந்தியாவில் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி இருப்பதன் நிரூபணம் இது. ‘

டாக்டர் தஸ்லீமா நஸ்ரீன்

கொல்கத்தாவில் டாக்டர் தஸ்லீமா நஸ்ரீனின் ‘த்விகண்டிதோ ‘ (இருகூறுகளாக்கப்பட்டது) என்ற நாவலை இடதுசாரி அரசாங்கம் தடை செய்திருந்தது. நீதிமன்றம் இந்தத் தடையை இப்போது ரத்து செய்துள்ளது.


Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா

சொன்னார்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

சொதப்பப்பா


‘கட்சியின் பெயரை முடிவு செய்ய இரண்டு மூன்று மாத காலமாக ஆலோசித்தோம். எனது மனைவியும் நானும் கட்சியின் பெயர் குறித்து அடிக்கடி பேசுவோம். நேற்று இரவு தான் இந்தப் பெயரை முடிவு செய்தேன். மதுரை சிவன் மீனாட்சி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் அருளால் இந்த நல்ல பெயர் கிடைத்துள்ளது. ‘

தனது கட்சிக்கு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம் ‘ என்று பெயர் சூட்டிய விஜயகாந்த்


‘மொழிக்கொள்கையில் தற்போதுள்ள நடைமுறையை வாழ்விற்கு ஏற்றாற்போல் அணுகவேண்டியுள்ளது. நமது இந்தியாவில் உள்ள பிற மாநில மொழிகளையும், பிற அயல்நாட்டு மொழிகளையும் தமிழக மக்கள் விரும்பினால் அதனை படிப்பதற்கு எந்தவித தடையோ கட்டுப்பாடுகளோ இருக்கக்கூடாது. ஏனென்றால் தமிழக மக்களுக்கு தாய்மொழியான தமிழ் கண்போன்றது. பிறமொழிகள் தேவைப்படும்போது கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியையும் கற்போம். ‘

விஜயகாந்த் தன் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டது.


‘நீங்கள் நல்ல மனிதர். உங்களுடன் வியாபாரம் செய்யலாம். ‘

‘You are a good man. We can do business with you. ‘

ஜார்ஜ் புஷ் – இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சொன்னது.


‘ஓண்டரியோவில் ஷரியா சட்டம் இருக்காது. மதத்தின் குறுக்கீடுள்ள சட்டம் இருக்காது. ஓண்டரியோவின் எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சட்டம் தான் இருக்கும். ‘

‘ ‘There will be no sharia law in Ontario. There will be no religious arbitration in Ontario. There will be one law for all Ontarians. ‘ ‘

கனடாவின் பிரதமர் டால்டன் மக்கிண்டி


‘நான் விரும்பியிருந்தால் 25 வயதில் பிரதமர் ஆகியிருப்பேன். ‘

ராகுல் காந்தி


Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா

சொன்னார்கள்

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

சொதப்பப்பா


‘வரலாற்றியல் ரீதியில், சமூக அரசியல், பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களாக விளங்கும் ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களுக்குச் சமூகத்தைப் புரிந்துகொள்ள வைத்ததும் அரசியல் கல்வி வழங்கியதும் மா-லெ அமைப்புகள் என்பது ஒவ்வொரு தலித்தும் அறிந்த உண்மை. இருந்தாலும் தலித் அரசியல் என்னும் கருத்தாக்கம், உருவாக்கிய அவர்களுக்கே இன்னும் பிடிபடாதபோது அந்த விளிம்பு நிலை மக்கள் இதனைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதும் புரிதலின் ஊடாக விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் செயலல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும் ? ‘

லெனின் சந்துரு

(காலச்சுவடு – மார்ச் 2005)


‘ஜெயமோகனின் உடைந்த நான்கள் எனும் தங்களது கட்டுரையையும், சிறுகதையையும் படித்தேன்; ரசித்தேன்; தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே, தங்கள் முடிவுகளை, அலசி ஆராய்ந்து ஆணித்தரமாக வெளியிட்டு இருக்கிறீர்கள்; மேலை நாடுகளில் மேட்டுக்குடிச் சிந்தனையில் மூழ்கியிருக்கும் ‘திண்ணை ‘வாசிகளுக்குக் காலந்தாழ்ந்தாவது ஜெயமோகனின் சிதைவுண்ட , சிறுபிள்ளைத்தனமான ஆளுமையும், சந்தர்ப்பவாதச் சரிவுகளும், ஓரள்வு புரியும் என நம்புகிறேன். நையாண்டி இலக்கியத்தை ரசிக்கத் தெரிந்த உள்ளங்களுக்கு தங்களது சிறுகதை ‘சிசிஃபஸ் ‘ ஒரு விருந்து! புதுமைப்பித்தன் மரபு நன்கு பேணப்படுகிறது ‘

தி க சி

(பன்முகம் அக்-டிசம்பர் 2004)


‘ஆன்டி கம்யூனிஸ்டு அறிவுஜீவிகளின் குட்டிக்கரணங்களும், கொம்பு சுற்றும் வேலைகளும் குரங்காட்டங்களாகத்தான் இதுவரை இருந்திருக்கின்றனவே தவிர , அடிப்படை அறிவார்த்தம் என்று எதுவும் இருந்ததில்லை. ஆனாலும் தொடர்ந்து இந்த ஆன்டி கம்யூனிஸ்டு அறிவுஜீவிகள் பொம்மலாட்டம் காட்டிக்கொண்டே தான் இருப்பார்கள். ஏனெனில் கம்யூனிசத்தின் தேவையே இந்த ஆன்டி கம்யூனிஸ்டுகள் இருக்கும் வரைதானே. ‘

பிரேம் ரமேஷ்

(உயிர்மை ஜூலை 2005)


‘சன் டிவியைப் பார்க்கும் ஒருவருக்குத் தமிழகத்தில் வை.கோ என்னும் ஒரு தலைவர் இருப்பது தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. தீவிர இதழியல் என்னும் மிகச் சிறிய வட்டத்திற்குள் நிகழும் வளர்ச்சிக்கு, அதிகாரம், அபாயம் என்றெல்லாம் பல ஆண்டுகளாகப் பதறி வருபவர்கள் மேற்படி அபாயம் பற்றி மெளனம் காப்பதை எப்படிப் புரிந்து கொள்வது ? நமது சாதிய அறிவுஜீவிகளின்பகுத்தறியாமை வீச்சு ஜெயலலிதாவோடும், சங்கரமடத்தோடும் நின்றுவிடுவது துரதிர்ஷ்டமானது என்று தான் சொல்லவேண்டும். ‘வணக்கம் தமிழக ‘த்தில் அழைத்த விசுவாசமும் அழைக்கப்படலாம் என்னும் சபலமும் இத்தனை வலுவானவையா ? ‘

கண்ணன்

(காலச்சுவடு ஆகஸ்டு 2005)


‘இது பாலியல் தொழிலாளியிடம் புணர்ச்சிக்காக ஆணுறை வாங்குவதற்கு ஒப்பானது ‘

சிங்கப்பூர் இளங்கோவன் : ‘விருதுகள் வாங்கும்போது எப்படி உணர்கிறீர்கள் ? ‘ என்ற கேள்விக்குப் பதில்

(உயிர்மை ஆகஸ்ட் 2005)


(அமார்த்ய) சென் நைபாலுடன் வேறுபடும் விஷயங்கள் அரசியல் சம்பந்தமானவை. முஸ்லீம் படையெடுப்பினாலும், ஆன்மீகத் தேடல் மற்றும் (சாதியப்)படிநிலைகொண்ட இந்துமதத்தினாலும், இந்தியா ஒரு காயம்பட்ட நாகரிகம் ஆகிவிட்டதென்றும், மேலைநாடுகளின் அரசியல் தத்துவம் , தொழில்மயமாதல் இவற்றால் சமீபகாலத்தில் தான் புத்துயிர் பெற்றது என்றும் நைபால் கருதுகிறார்.

வேதம் தொடங்கி வழிவழியாய் செயல்பட்டுவந்த அறிவுத் தேட்டமும், விசாரணை மனமும் , முஸ்லிம் ஆட்சியாளர்களால் முன்கொண்டு செல்லப்பட்டது என்றும், அதுவே இந்திய ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு அடிப்படை ஆனது என்றும் அமார்த்ய சென் சுட்டிக் காட்டுகிறார்.

(Sen ‘s more illuminating differences with Naipaul are political. Naipaul sees India as damaged by Muslim invaders and emasculated further by an otherworldly and hierarchical Hinduism—a wounded civilisation that has only recently been revived by contact with western political philosophy and industrialism. Sen points instead to an old tradition of reason and scepticism, which, beginning with the Vedas, was upheld often by India ‘s Muslim rulers, and which he thinks forms the basis of Indian democracy and secularism.)

பங்கஜ் மிஸ்ரா

(அவுட்லுக் ஜூலை 11, 2005)


Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா

சொன்னார்கள்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சொதப்பப்பா


ஜனசங்கம் ஹிந்து மகாசபாவுடன் கொண்ட கருத்து வேற்றுமைகளால் தோன்றியது. ஜனசங்கம் பாரதீய ஜனதா கட்சியாக உருவாயிற்று. பாரதீய ஜனதா கட்சி காந்தியம்-சோஷலிசத்தைத் தனதாக்கிக் கொண்டுவிட்டது. ஹிந்துத்துவாவைக் கடாசி விட்டார்கள். சாவர்க்கருக்கு உரிமை கொண்டாட பா ஜ க விற்குப் பாத்தியதை இல்லை. பா ஜ க இன்னொரு காங்கிரஸ் தான்.

ஹிமானி சாவர்க்கர் (ரீடிஃபில் )


‘ரோஸ்கார் படாவோ ‘ (வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்)

மன்மோகன் சிங்கின் கோஷம். பழைய ‘காரீபி ஹடாவோ ‘ வை அடியொற்றியது.


காங்கிரஸ் கூட்டணியின் குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் உள்ள திட்டம் : தனியார் கம்பெனிகளில் வேலை முன்னுரிமை. இது அட்டவணை சாதிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கும். இது மிக முக்கியமான திட்டம்.

மீரா குமார் – சமூக நீதி அமைச்சர்.


‘வேலை முன்னுரிமைகள் கட்டாயமாக்கப் பட்டால், இந்திய பொருளாதாரம் அழிவுப் பாதையில் செல்லும். ‘

ஆதி கோத்ரெஜ் , கோத்ரெஜ் குழுமம் தலைவர்.


‘ தனியார் கம்பெனிகளில் வேலை முன்னுரிமைக்கு எந்த சட்டமும் கொண்டுவரமாட்டோம். ஆனால் தொழில் துறை தாமே பொறுப்பேற்றுக் கொண்டு இந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்க முன்வரவேண்டும். ‘

மன்மோகன் சிங்


காஷ்மீரி பண்டிட்கள் துரத்தப்பட்டு வாழும் நிலை கண்டு வருந்துகிறோம். பெரும்பான்மை (முஸ்லிம்) மக்கள் காஷ்மீரி பண்டிட்கள் திரும்பிவர வழிகள் வகுக்க வேண்டும். நல்ல வேளையாக இந்தியா ஜனநாயக நாடாய் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலோ சர்வாதிகாரத்தின் கீழ் நாங்கள் வாழ்கிறோம்.

இம்தியாஸ் ஆலம், பாகிஸ்தான் பத்திரிகையாளர்- காஷ்மீரை சுற்றிப் பார்த்தபின்பு.


இடதுசாரிகளை மிக வலிமையாக மேற்கு வங்காளத்தில் நாங்கள் எதிர்ப்போம்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சல்மான் குர்ஷித்


மிகக் கவலை அளிக்கிறது. இது பற்றி மிக கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், வகுப்புக் கலவரங்கள் மூளும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், மத்திய அமைச்சர் ஈ . அகமது. கேரளாவில் பாதிரியார்களும், கன்னிகாஸ்திரீகளும் தாக்கப் பட்டது பற்றி.


– – – இந்த நிலையில் 2006-ல் கோட்டைக் கதவைத் திறக்கக் (காங்கிரஸ் கட்சிக்கு) குறைந்தது ஒரு டஜன் சாவிகளின் துணையாவது தேவைப்படும்.

சோம. நடராஜன், கரூர்.

தினமணி வாசகர் கடிதம் (அக்டோபர் 7, 2004) பகுதியில்


Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா

சொன்னார்கள்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சொதப்பப்பா


Father roots for Tamil, son differs

அப்பா சொல்கிறார் தமிழ் வாழ்க, மகன் சொல்கிறார் ஆங்கிலம் வாழ்க

செப் 27,2004

ஊருக்குத் தான் உபதேசம் , உனக்கும் எனக்கும் இல்லை என்பது அரசியல்வாதிகளின் தாரக மந்திரம். லயன்ஸ் கிளப்பின் உலக இருதய தினம் அன்று லயன்ஸ் கிளப் தலைவர் தமிழில் பேசினார். ஆனால், பிரதம விருந்தினர் அன்புமணி ராமதாஸ் கறுப்பு சூட் கோட்டில் வந்திருந்தார். ‘சூட்டு எல்லாம் போட்டுகிட்டு வந்திருக்கேன். இங்கிலீஷ்லேயா பேசறேன் ‘ என்று ஆங்கிலத்தில் பேசினார்.

தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வரும் ராமதாஸ் , பொது வாழ்க்கை, திருமணம், நீதிமன்றம், கடைப் பலகை, பள்ளிக்கூடம் இவற்றில் தமிழை வலியுறுத்தி வருகிறார்.

(செய்தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்)


‘சென்னையில் பணி புரிபவர்கள் தம்முடைய கம்பெனிக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். ‘

அமிதாப் ஸ்ரீவாத்சவா, சான்ஸா கம்பெனியின் இயக்குநர். (பெங்களூரிலிருந்து ஏன் கம்பெனிகள் சென்னைக்கு நகர்கின்றன என்பதற்குச் சொல்லும் காரணம்.)



சேகர் என்றில்லாமல் உங்களால் குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலான போலீஸார் நீங்கள் சொல்வது பொய் என்கிறார்களே.. ?

(உக்கிரமாக) ‘‘ஏன் சொல்லமாட்டாங்க ? ஏதாவது ஒரு வீட்டில் ஒருத்தரைப் பிடிக்க முடியல்லேன்னா, அந்தக் குடும்பத்தையே கொண்டுபோய் ஸ்டேஷனில் வச்சு மிரட்டுவாங்க. ஏதாவது வீட்டில் அடைச்சு வைப்பாங்க. அவங்க தேடற ஆள் வர்ற வரை சித்திரவதை செய்வாங்க. என் விஷயத்திலேயும் அப்படித்தானே நடந்துச்சு. ஆனால் இப்ப இன்ஸ்பெக்டர் இளங்கோவனைப் பிடிக்க முடியல்லேன்னு பாவ்லா காட்டுறாங்க. அவரைப் பிடிக்கணும்னா அவர் மனைவி பிள்ளைகளை ஸ்டேஷன்ல பிடிச்சு வச்சு விசாரிக்கட்டும். தன்னால வந்திடுவாரில்லையா.. ?

குமுதம் ரிப்போர்ட்டரில் ஜெயலட்சுமி

(இளங்கோவன் தற்போது சரண் அடைந்துள்ளார். திண்ணை குழு)


கோஷ்டி பூசல்: இளங்கோவன் பேட்டி

மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று (செப்டம்பர் 26) சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது,

கேள்வி: கோஷ்டி மோதல் மீண்டும் தலைதூக்கி உள்ளதே ?

பதில்: எங்கள் கட்சியில் எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, கூட்டம் நடத்தியது இவை எல்லாமே எங்களுடைய உள்கட்சி பிரச்னை. இதுகுறித்து நான் கட்சியின் மேலிடத்தில் சொல்லியிருக்கிறேன். விரைவில் இந்த பிரச்னைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும்.

கேள்வி: காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டுமென்றால் மாநில தலைமையை மாற்ற வேண்டுமென்று கருதுகிறீர்களா ?

பதில்: என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் மேலிடத்தில்தான் தெரிவிக்க முடியும். இதுகுறித்து கட்சி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நடவடிக்கை இல்லை என்பது எங்களுடைய கருத்து. அதைத்தான் நாங்கள் மேலிடத்தில் தெரிவித்துள்ளோம்.

தி.மு.க., அ.தி.மு.க., உள்பட எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் அதிகம் என்பதால் கோஷ்டி பூசல் பெரியதாக தெரிகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சி உங்கள் ஆதரவாளர்களாக உள்ள மாவட்ட தலைவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதே ?

பதில்: நான் மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்களிடம் விசாரித்ததில் இதுவரை விளக்கம் கேட்டு எந்த கடிதமும் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கேள்வி: ஜி.கே.வாசன் அமைச்சர் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதே ?

பதில்: ஜி.கே.வாசன் மேலும் மேலும் வளரவேண்டும். அவர் மத்திய அமைச்சராக வேண்டும். அந்தமான் கவர்னராக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

(விகடன்)


‘கொல்கத்தா எலெக்றிக் சப்ளை கார்ப்பரேஷன் தான் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும். ‘

‘மாற்று மின்சார ஏற்பாடுகளுக்காக மானில அரசிற்கு விண்ணப்பித்தபோது, எங்களுக்கு ஹாட்லைன் (நேரடி தொலைபெசி ) இருப்பதால் தங்குதடையற்ற மின்சார அமைப்பு தேவையில்லை என்று அரசாங்கம் தெரிவித்துவிட்டது. ‘

மின்வெட்டால் ஐந்து குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்தது பற்றி மிருணாள் சட்டர்ஜி , மருத்துவ மேலாளர்.


வைரமுத்துவின் கவிதைகளைக் கேட்கும்போது , பாரதியார் என் நினைவுக்கு வருகிறார்

– சாகித்ய அகாதெமி தலைவர் கோபிசந்த் நாரங்


தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்று பரப்பப்படும் தவறான பிரசாரம் பொய் என்பதற்கு இன்னொரு உதாரணம் தான் வைரமுத்து கவிதைகளின் இந்தி மொழியாக்க நூல் வெளியீடு. கருணாநிதி ஏற்கனவே , தனது புத்தகங்களை சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் வெளியிட்டிருக்கிறார். அவரது சீடரான வைரமுத்துவும் இப்போது அதே பாதையில் செல்கிறார்.

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்.


தினமணியில்


Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா

சொன்னார்கள்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சொதப்பப்பா


‘முஸ்லீம்களில் உடல்ரீதியாக ஏதும் பிரசினை இருந்தால் மஃடியை அணுகலாம். ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு இஸ்லாமில் இடம் இல்லை. ‘

அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட போர்ட் தலைவர் மெளலானா ரபி ஹஸ்னி நாத்வி


‘ஷியா மற்றும் சூனி மதத்தலைவர்களுக்கு நான் எழுதியுள்ளது இது : நாம் அனைவரும் அமர்வுகள் செய்து ஈரான் போன்ற மற்ற நாடுகளை முன்மாதிரியாய்க் கொண்டு குடும்பக் கட்டுப்பாடு பற்றி விவாதிக்க வேண்டும் . ‘

அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட போர்ட் துணைத்தலைவர் மெளலானா கல்பே சாதிக்


‘மக்கள் தொகையில் பெண்களின் விகிதாசாரக் குறைவு பற்றிப் பேசாமல் இரண்டு குழந்தைகள் போதும் எனப் பேச முடியாது. நாங்கள் கட்டாயப் படுத்துவதற்கு எதிராக நிற்கிறோம். கருத்தடைச் சாதனங்கள் பெருமளவு பற்றாக்குறை உள்ளது. குழந்தைகள் மரணம் அதிகமாய் உள்ளது. பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை இல்லை. ‘

பிருந்தா காரத் .அகில இந்திய ஜனநாயக பெண்கள் சம்மேளனம் சார்ந்தவர். முஸ்லீம்களிடையே குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசிய போது. (இந்த அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்தது)


‘இடதுசாரி அடிப்படைவாதம் என்று எதுவும் இந்த நாட்டில் இல்லை. ‘

மார்க்ஸிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத்


‘தமிழ் நாட்டில் தலித்தைத் தொடுவதே தீட்டு என்று இன்னமும் உள்ளது. சூத்திரர்கள் வலிமை பெற்றால் பிராமணர்களைக் காட்டிலும் வன்முறை பாவிப்பார்கள் என்பதற்கு தமிழ் நாடு நிரூபணம். ‘

சந்திரபான் பிரசாத்


‘மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரான உமா பாரதியும்., கல்யாண் சிங்கும் பெரியாரிய பாரம்பரியத்தின் பலன்கள். அவர்கள் அதை உணராவிடும் அதுவே உண்மை. ‘

கி வீரமணி (திராவிடர் கழகம் தலைவர்)


மார்க்ஸிஸ்ட் கட்சி மெத்தச் செய்யும் உபதேசம் தன்னுடைய வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதை நம்புவதில்லை. கைரலி தொலைக்காட்சி நிலையம் சமீபத்தில் தன் அமைப்பில் இருந்த 25 தொழிலாளர்கள் சரியாக உற்பத்தித்திறன் காண்பிக்காத காரணத்தால் வேலை நீக்கம் செய்தது. தயாரிப்புச் செலவும் இதனால் குறைந்தது. இந்த வேலை நீக்கம் இரண்டாவது முறையாய்ச் செய்யப்பட்ட ஒன்று. முதன் முறை இந்த வேலை நீக்கங்களுக்கு பணியாளர்கள் அளித்த மறுப்புகள் எழ முடியாமல் செய்தனர். தொழில்சட்டங்களின் சீர்திருத்தங்களை எதிர்க்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் சொந்தத் தொலைக்காட்சி கம்பெனியில் நடந்தது இது. கைரலி தொலைக்காட்சி இந்த வேலை நீக்கத்தின் பின் செலவு 35 % சேமிப்பைப் பெற்றது. வருமான 57% அதிகரித்தது.

எகனாமிக்ஸ் டைம்ஸ் அறிக்கை


‘ஆந்திராவில் உலக வங்கியின் அமைப்பு ரீதியான மாறுதல்களினால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இப்போது உலக வங்கியின் பிரதிநிதிகளை ஏன் திட்டக் கமிஷனில் வைத்திருக்கிறீர்கள் என்பதை காங்கிரஸ் விளக்கியாக வேண்டும். ‘

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இடதுமுன்னணியின் கேள்வி


—-

‘Any member of the community has some physical problems, he can

approach the mufti. But there is no place for family planning in Islam ‘

All India Muslim Personal Law Board (AIMPLB) chairman Maulana Rabey

Hasni Nadwi.

‘I have written to Shia and Sunni religious leaders that we must sit

together and discuss a model of family planning based on the example of

these countries(like Iran) ‘ ‘ All India Muslim Personal Law Board

(AIMPLB) vice-chairman Maulana Syed Kalbe Sadiq

“You can’t have the two-child norm without addressing the issue of low

sex ratios. We are against coercion. There’s a huge unmet need for

contraceptives. Children don’t survive and women have to be given the right

to education,”

– Brinda Karat of the All India Democratic Women’s Association, when

speaking on the need for muslims to control the population. Midday,

Mumbai

‘There is nothing called Left fundamentalism in this country. ‘

– CPI(M) politburo member – Prakash Karat in Outlook

In parts of TN, even touching a Dalit is considered polluting. TN

proves that the Shudras, when empowered, can be more socially violent than

the Brahmins. While 42 per cent Dalits are independent cultivators in

UP, in TN it is only 12.8 per cent. ‘

– Chandra Bhan Prasad in Outlook

OBC leaders like Uma Bharati and Kalyan Singh are products of the

Periyarite legacy even if they do not realise that. ‘

– K Veeramani in Outlook

‘But then as in the case of charity, the CPM does not believe in

starting fair play from home. The success story of Kairali TV, saw its

management recently retrenching around 25 of its top and thus highly-paid

staff due to their lack of desired productivity and also as a means of

bringing down the cost of production.

This was the second round of retrenchment-spree (the first round had

witnessed some soon-to-be silenced protest by the affected employees) by

the channel sponsored by the CPM which opposes labour reforms. But when

Kairali channel has resorted to ‘firing’, it resulted in a 35% cut in

expenditure and a 57% increase in the revenue. ‘

– Economic Times report

‘Explain why you want World Bank representation in Planning Commission

when the Congress in Andhra Pradesh has held the World Bank ‘s

structural adjustment policies responsible for the plight of farmers and

ordinary people in the state, ‘

– Left front to the Congress UPA government. Times of India

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா

சொன்னார்கள்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue


முஷாரஃப் அவர்களின் பேச்சு: புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கை

ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

… அவர் பாகிஸ்தானை, சக்திவாயந்த, வளமையான, முன்னேறும், ஜனநாயக இஸ்லாமிய நாடாக ஆக்குவதைப் பற்றி பேசினார். ..

http://www.ganashakti.com 21 ஜனவரி 2002 இதழில்.

அதே இதழில் கமெண்ட் பகுதியில்

பாஸிஸ திட்டம்

டிஸம்பர் 13 சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு, காவிக்கும்பல், மதவெறியையும், போர்முழக்கத்தையும் கைக்கொண்டு தன்னுடைய பிற்போக்கு பாஸிஸ நோக்கமான இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயக குடியரசு அமைப்பை அழித்துவிட்டு அங்கு சகிப்புத்தன்மையற்ற இந்து ராஷ்ட்ரத்தை உருவாக்க எல்லா வழிகளையும் பின்பற்றி வருகிறது.

****

MUSHARF ‘S Address: Hope of a New Beginning

Harkishan Singh Surjeet

…He talked here of making Pakistan a powerful, vibrant, progressive and democratic Islamic nation.

http://www.ganashakti.com

Talking Point Unfolding of Fascist Project

COMMENT

THE Saffron Brigade is leaving no stone unturned in the post-December 13 situation to whip up jingoism and communalism to advance its fascistic objective of converting the secular democratic republic of India into a rabidly intolerant ‘Hindu Rashtra ‘.

http://www.ganashakti.com/tw/thisweek/week_columnltalk.htm

Series Navigation

செய்தி

செய்தி