சொன்னார்கள் – செப்டம்பர் 23, 2004

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

சொதப்பப்பா


***

‘சினிமாங்கறது ஆணாதிக்கம் நிறைஞ்ச ஃபீல்டு. மாசத்துக்கு பத்து ஹீரோயின் வந்து போறாங்க. ஆனா, இங்க உள்ள மொத்த ஹீரோக்களே பத்துபேர்தான். மிஸ் வேர்ல்டு, மிஸ் யூனிவர்ஸ்னு உலக அழகிகள்கூட இங்கே யூஸ் அண்ட் த்ரோதான் ‘

மும்தாஜ், ஆனந்த விகடனில்

**

‘அது (சன் டிவி) ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம். எந்த நிகழ்ச்சிகளை காட்டவேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைக் காட்டும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. எனக்கு அந்தத் தகுதி இல்லை என்று நினைத்து இருக்கலாம். அதில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை ‘

வை கோபால்சாமி, குமுதம் ரிப்போர்ட்டரில்

**

‘ என் நினைவில், பா ஜ க தலைவர்(எல் கே அத்வானி மிகத் துயரம் கொண்டிருந்தார். இளைஞர்கள் இரும்புக் கழிகளால் வேலியை உடைத்து, மசூதி நோக்கி ஓடிக் கொண்டிருந்தபோது அத்வானி மைக்கில் ‘ வேண்டாம் தயவு செய்து இதைச் செய்யாதீர்கள் ‘ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவரை இழுத்துக் கொண்டு போனார்கள். ‘

டைம் நிருபர் ஜெஃபர்ச்சன் பென்பெர்த்தி

‘ In my memory, the BJP leader (LK Advani) looked distressed, and as the first young men with iron bars broke through the fence and were sprinting towards the mosque, he was pleading into his microphone “Please don’t do this,” before he was hustled away. ‘

– Time reporter Jefferson Penberthy on BJP leader L K Advani, on submission to Liberhan commission.

http://web.mid-day.com/news/nation/2004/september/92393.htm

***

‘வெகுமானப்பட்ட முக்கிய மந்திரி எத்தனை நேரமாயிட்டு ஞான் இவ்விட நிற்கணு ‘

– கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியை நோக்கி சத்தமிட்ட, வரிசையில் நின்று கொண்டிருந்த மூதாட்டி , குமுதம்.

***

‘அப்போது வெப்பத்தில் பிளந்த நிலங்களும் கைகளில் டின்களையும் குடங்களையும் பிடித்துக்கொண்டு நீள வரிசையில் காத்திருக்கும் மனிதர்களும் புகைப்படங்களாக எனக்கு ஞாபகத்தில் வந்தது… எனது குரு எல்லப்பாவோ, ‘மதுரா நகரிலோ ‘ பாடிக்கொண்டிருக்கிறார். கலையும் வாழ்க்கையும் எவ்வளவு முரண்பட்டதாக இருக்கிறது. ‘

– தீராநதியில் சந்திரலேகா

***

‘பின்னர் அளவில் பேரூ ராட்சி குப்பை அள்ளும் வண்டி வரவழைக்கப்பட்டு, அதில் விநாயகர் சிலைகளை ஏற்றினர். அப்போது கலைந்து சென்றி ருந்த இந்து முன்னணியினரும், ம.தி.மு.க. நகர செயலாளர் ஏழுமலை, அ.தி.மு.க.நகர செயலாளர் சுரேஷ்பாபு, காங்கிரஸ் நகர தலைவர் பாஸ்கர், தமிழன் பாபு மற்றும் பொதுமக்கள் விநாயகரை குப்பை வண்டியில் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த சிலைகள் மீண்டும் இறக்கப்பட்டன. ‘

தினகரன்

***

‘பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று ஜெயலலிதா கூறியதில் எங்களுக்கு எந்த விதமான மனவருத்தமும் இல்லை. அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. ஜெயலலி தாவை பொறுத்தவரை அவர் அந்த முடிவை மாற்றிக் கொண்டதில் எங்களுக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஜெயலலிதா எங்களின் நிரந்தர கூட்டாளி அல்ல. ‘

தினகரனில் முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி

***

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா