இந்து அடிப்படைவாதியை அடையாளம் காண பத்து வழிகள்

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

சொதப்பப்பா


1) சர்வே ஜனா சுகினோ பவந்து என்று பேசுவீர்கள், ஆனால், எக்காரணம் கொண்டும் வேற்றுஜாதி ஆளுக்கு தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள்.

2) வசுதைவ குடும்பகம் – உலகமே ஒரு குடும்பம் -என்று பேசுவீர்கள் ஆனால், வேற்று நாட்டு ஆட்கள் இந்தியாவில் தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொல்வீர்கள்.

3) விவிலியத்தில் வருவது எல்லாம் கற்பனைக்கதைகள் என்று விலாவாரியாகப் பேசுவீர்கள் ஆனால், ராமர் அயோத்தியில் பிறந்தார், ராமாயணம் கடைசி வரி வரைக்கும் உண்மையாய் நடந்தது என்று பேசுவீர்கள்.

4) பாரதநாடு பார்ஸிகள், யூதர்கள், சிரியன் கிரிஸ்துவர்கள், இஸ்மாயிலி முஸ்லீம்கள் அனைவருக்கும் புகலிடம் அளித்திருக்கிறது என்று பேசுவீர்கள் ஆனால், உங்கள் ஊரிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஊருக்கு வெளியில்தான் இடம் கொடுப்பீர்கள்,

5) வரலாற்றில் நடந்த பழைய தீமைகளுக்கு இன்று பிராயச்சித்தம் செய்யவேண்டியதில்லை என்று தலித்துகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை எதிர்ப்பீர்கள் . ஆனால், வரலாற்றில் நடந்த பழைய தீமைகளுக்கு இன்று பிராயச்சித்தம் வேண்டும் என்று மசூதியாக்கப்பட்ட பழைய கோவில்களை திருப்பித்தரவேண்டும் என்று கோருவீர்கள்.

6) கஜுராகோவும், கோணாரக்கும் , காமசூத்திராவும் கண்ட பாரதப் பண்பாடு என்று பெருமை பேசுவீர்கள் ஆனால், ஃபயர், கேர்ல்ஃபிரண்ட்ஸ், சரஸ்வதி நிர்வாண ஓவியம் , காதலர் தினம் என்றால் எதிர்ப்பீர்கள்.

7) கைபர் கணவாய் வழியாக வந்தவர்களையும், பாரசீகர்களையும் , சிந்திக்களையும் இந்தியர்கள் என்பீர்கள் , ஆனால் முஸ்லீம்களை பாபரின் பிள்ளைகள் என்பீர்கள்.

8) அத்வைதம் என்பீர்கள், எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றே என்பீர்கள், ஆனால் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கத் தயக்கம் காட்ட மாட்டார்கள்.

9) கோயில்களை இடித்து மசூதி கட்டினார்கள் அதைத் திரும்பப் பெறவேண்டும் என்று பேசுவீர்கள், ஆனால் புத்தவிகாரங்களை அழித்துக் கட்டிய இந்து கோயில்களைப் பற்றி எதுவும் பேச மாட்டார்கள்.

10)இந்துமதம் சகிப்புத் தன்மைக்குப் பெயர் போனது என்று சொல்லிவிட்டுத்தான் உங்கள் எல்லா வசையையும் தொடங்குகிறீர்கள்.

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா