ஒரே வரி

This entry is part of 46 in the series 20031218_Issue

பலர்


மூளை என்பது அற்புதமான ஒரு உறுப்பு. காலையில் எழுந்ததிலிருந்து அது அலுவலகத்துச் சென்று சேரும் வரைக்கும் வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை

– ராபர்ட் ஃப்ரோஸ்ட்

காலம் தவறாமல் இருப்பதில் ஒரே பிரச்னை. அங்கு அதனை பாராட்ட யாரும் இருப்பதில்லை என்பதுதான்.

– ஃப்ராங்க்ளின் பி ஜோன்ஸ்

அதிர்ஷ்டம் என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும். இல்லையெனில் நமக்குப் பிடிக்காத ஆட்களின் வெற்றியை எப்படி நியாயப்படுத்துவதாம் ?

– ஜீன் கோக்துரான்

உலகத்தில் நடக்கும் செய்திகளின் எண்ணிக்கை அனைத்தும் சரியாக ஒரு பத்திரிக்கையில் வெளியிடும் அளவே இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்

– ஜெர்ரி சைன்ஃபீல்ட்

நீ வெற்றி பெறுகிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் வெற்றிபெறுகிறேனா இல்லையா என்பதுதான் முக்கியம்

– டாரின் வைன்பர்க்

***

வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.

– யாரோ

***

மிகச்சிக்கலான பிரச்னைகளுக்கெல்லாம் மிகவும் எளிய எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தவறான விடைகள் இருக்கின்றன.

-யாரோ

***

இது ஏமாற்றுவதல்ல. இதனை வித்தியாசமாக பிரச்னைகளைத் தீர்ப்பது என்றே அழைக்க விரும்புகிறேன்

– யாரோ

***

எல்லா வெற்றிகரமான பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான். – ஆச்சரியப்பட்டுக்கொண்டு

– யாரோ

***

சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை.

– யாரோ

***

பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களை சுடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்பதாலேயே

– யாரோ

***

உன் எதிரிகளை மன்னித்துவிடு – ஆனால் அவர்கள் பெயர்களை மறக்காதிரு

– யாரோ

***

உன்னை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை நேராக உன்னுடைய காரியத்தின் முட்டாள்த்தனத்தைப் பொறுத்தது

– யாரோ

***

கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் உன்னை நினைத்துக்கொள்வான், அவன் மீண்டும் கஷ்டத்தில் இருக்கும்போது

– யாரோ

***

Series Navigation

பலர்