ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்

This entry is part of 39 in the series 20031016_Issue

ஆசை ஆசைத்தம்பி


நான் அனுப்புவது PM அல்ல poem

அதை பாரமால் இருப்பதுவென்ன நியாயம்

உன் உள்ளமதை கொள்ளை கொள்ள

நான் அனுப்புவது PM அல்ல poem

நிலவுக்கு வான் அனுப்பும் PM

நீருக்கு மீன் அனுப்பும் PM

மலருக்கு தேன் அனுப்பும் PM

மங்கைக்கு நான் அனுப்பும் PM

அடித்து அனுப்புவது PM அல்ல poem

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்

type அடித்தால் வருவதெல்லாம் கொஞ்சம்

ASL கேட்டிடவும் அஞ்சும்

Voice-இனிலே வாவென்று கெஞ்சும்

நான் அனுப்புவது PM அல்ல poem

அதை பாரமால் இருப்பதுவென்ன நியாயம்

உன் உள்ளமதை கொள்ளை கொள்ள

நான் அனுப்புவது PM அல்ல poem

**********************

Series Navigation